பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுத்தாளர்களில் யார் சிறந்தவர் என்று நீங்கள் குறிப்பிடுவீர்கள்?' 2. தெரிவித்தல்; சொல்லுதல்; mention; point out. 'நீங்கள் வெளியூர் செல்ல இருப்பதை ஏன் உங்கள் கடிதத்தில் குறிப்பிட வில்லை?.

சில

குறிப்பு பெ. (n.) 1. சிறு விளக்கம்; சுருக்கம்; (brief) note; sketch. வகுப்பில் ஆசிரியர் கூறிய பாடக் குறிப்புகள் தேர்வுக்குப் பயன்படும். 2. சுருக்க மான சான்று; note (s). பண்டைத் தமிழகம் பற்றி அறிய வெளிநாட்டார் எழுதிய குறிப்புகள் பயன்படும். குறிப்பெடுத்தல் வி. (v.) (பேச்சு,பாடம், தருக்கம் போன்றவற்றை) தொகுத்து எழுதுதல்; முகாமையாகச் செய்தி களைச் சுருக்கமாக எழுதுதல்; take notes; take down; jot down. 'முதலமைச் சரின் பேச்சைப் பத்திரிகை நிருபர்கள் குறிப்பெடுத்துக் கொண்டிருந்தனர். குறிப்பேடு பெ. (n.) 1. அன்றாட நிகழ்ச்சிகள், பாடங்கள், வரவு செலவுகள் முதலியவற்றைக் குறித்து வைத்துக் கொள்ளும் புத்தகம்; diary; note book; ledger. மாணவர் குறிப்பேடு . 2. ஒன்றைக் குறித்த சட்ட திட்டம், நெறிமுறை முதலியவை அடங்கிய நூல்; hand book (of rules). சாலைப் பாதுகாப்புக் குறிப்பேடு'. குறிபார்த்தல் வி. (v.) குறி வைத்தல்; take aim (in shooting, etc.,). 'மரத்தில் தொங்கும் மாங்காயைக் குறி பார்த்துக் கல்லை எறிந்தான். குறியாக இருத்தல் வி. (v.) மிகுந்த கருத்துடன் எச்சூழலிலும் இலக்கை அடைவதில் குறியாக இருத்தல்; be intent on; be keen on. 'பணம் சேர்த்து விட வேண்டும் என்பதிலேயே அவன் குறியாக இருந்தான்'.

குறியீட்டெண் பெ. (n.) பொருள்களின் விலை, வாழ்க்கைத் தகுதி முதலிய வற்றின் போக்கில் ஏற்படும் மாற்றங்

குறுக்கிடுதல்

197

களை ஒப்பிட்டுப் பார்ப்பதற்காகப் பயன்படுத்தப்படும் அடிப்படை எண் ; index. பங்குச் சந்தை குறி யீட்டெண்.

குறியீடு பெ. (n.) I. அடையாளம்; சின்னம் ; symbol. 'சிவப்புக் கொடி பேரிடரின் குறியீடாகும்'. 2. ஒரு கருத்துக்குப் பதிலாக வழங்கும் குறி; sign (as a representation of a concept). கணிதத்தில் + என்னும் குறியீடு கூட்டலைக் குறிக்கும்' . 3. கருத்தை வெளியிடும் கருவி; notation; symbol; tool.மொழி என்ற குறியீடு'. குறிவைத்தல் வி. (v.) 1. இலக்கை உன்னிப்பாகப் பார்த்தல்; aim at. மாங்காயைக் குறி வைத்து அடித்தான்.2. (ஒன்றை அல்லது ஒருவரை) இலக்காக அல்லது நோக்கமாகக் கொள்ளுதல்; aim at; target something. அவர் மட்டுமல்ல, பலரும் அந்தப் பதவியின் மீது குறி வைத்துள்ளனர்' . குறுக்கம் பெ. (n.)

சுருக்கமாகக்

குறிப்பிடப் பயன்படுத்தும் வடிவம்; abbreviation. 'குடந்தை' என்பது 'கும்பகோணம்' என்பதன் குறுக்கம். குறுக்களவு பெ. (n.) எதிரெதிர் முனை களுக்கு இடைப்பட்ட தொலைவு; (வட்டத்தில்) விட்டம்; diagonal length; diameter.

குறுக்கிடுதல் வி. (v.) I. (பேசும்போது) இடை மறித்தல்; intervene (when one is talking); interrupt. நான் பேசும்போது குறுக்கிடாமல் கேளுங்கள்.2.(பிறர் செய்திகளில்} தலையிடுதல்; interfere (in the affairs of others). இந்த உறழ்வில் நீங்கள் குறுக்கிட வேண்டாம்'. 3. எதிர்ப் படுதல்; come across; encounter. கடைத்தெருவுக்குச் சென்றபோது வழியில் நண்பன் குறுக்கிட்டான்'.