பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198

குறுக்கீடு

குறுக்கீடு பெ. (n.) I. (பிறர் செயலுக்கு தடையாக அமையும் தலையீடு; interference. 'பணி அமர்த்தங்களில் யாருடைய குறுக்கீடும் இருக்கக் கூடாது'. 2. (பேச்சில்) இடை மறிப்பு; interruption. 'செய்தியாளருடைய குறுக்கீடு அமைச்சருக்கு எரிச்சல் தந்தது.

குறுக்கு பெ. (n.) I. முதுகு; back. குறுக்கு வலி'. 2.இடுப்பு; hip. 'காலை யிலிருந்து ஓயாமல் வேலை செய்வதால் குறுக்கு வலிக்கிறது'. குறுக்குதல் வி. (v.) 1. குறைத்தல்; shorten (something by cutting). 'இரண்டு அடி நீளம் இருந்த தடியை வெட்டி ஓர் அடியாகக் குறுக்கிவிட்டான். 2.(உடலை) சுருக்குதல்; contract (the body as in entering a narrow door). உடலைக் குறுக்கிக் கொண்டுதான் வாசலில் நுழைய வேண்டியிருந்தது. 3. தொலைவு அல்லது இடைவெளி; transverseness; crosswisc. 'குறுக்குச் சந்து வழியாகச் சென்றால் விரைவில் வீட்டை அடைந்துவிடலாம்'. குறுக்குக் கேள்வி பெ. (n.) (ஒருவர்தந்த பதிலை அல்லது விளக்கத்தை மறுத்துக் கேட்கும் கேள்வி;

Cross - questioning. 'நான் பேசும்போது குறுக்குக் கேள்விகள் கேட்கக் கூடாது'.

குறுக்குச் சட்டம் பெ. (n.) இணையாக இருக்கும் இரண்டு சட்டங்களை இணைக்கும் சட்டம்; brace (to conect a pair ofrafters); cross piece. குறுக்குச்சால் பெ. (n.) முதலில் ஏர் உழுத திசைக்குக் (குறுக்கான) எதிர் திசையில் இரண்டாம் முறை ஏர் உழுதல்; ploughing across the furrows left by the first ploughing.

குறுக்குச்சால் ஓட்டுதல் வி. (v.) மேலும் சிக்கலுக்கு உள்ளாக்குதல்; aggravate (the existing problem). 'நாங்களே எரிச்சலில் இருக்கிறோம். நீ வேறு குறுக்குச்சால் ஓட்டாதே'. குறுக்குப்பாதை பெ. (n.) அதிக தொலைவு இல்லாத வழி; குறுக்கு வழி; short cut (to reach a place).

குறுக்கும் நெடுக்குமாக வி.அ. (adv.) ஒரே திசையில் இல்லாமல் மாறி மாறி; இங்குமங்குமாக; up and down; here and there. 'அவர் கூடத்தில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண் டிருந்தார்.

குறுக்குவழி பெ. (n.) 1. சுருக்கமான முறை; எளிய முறை; short or simple method; a short cut. 'இந்தக் கணக்கைக் குறுக்கு வழியில் இரண்டே நிமிடத்தில் செய்துவிடலாம்'. 2. நேர்மை இல்லாத முறை; dishonest means. நீகுறுக்கு வழியில் பணம் தேட ஆசைப்படுகிறாய்.

குறுக்கு விசாரணை பெ. (n.) (முறை மன்றத்தில்) ஒருவர் ஏற்கனவே கொடுத்த சான்றின் அடிப் படையில் அவரை மறுதரப்பு வழக்கறிஞர் கேள்வி கேட்டு நடத்தும் உசாவுகை; cross examination.

குறுக்கு வெட்டுத் தோற்றம் பெ. (n.) ஒரு பொருளின் உள்ளமைப்பைக் காட்ட அதைக் குறுக்காக வெட்டியது போல் காட்டப்படுவது; cross section. இது வீட்டின் குறுக்கு வெட்டுத் தோற்றம்'. குறுக்கெழுத்துப் புதிர் பெ. (n.) தரப்பட்ட குறிப்புகளைக் கொண்டு கட்டங் களை நிரப்புவதன் மூலம் சொற் களைக் கண்டுபிடிக்கும் வகையில் அமைக்கப்படும் புதிர்; crossword puzzle.

குறுக்கே நிற்றல் வி. (v.) (ஒருவரின் செயலுக்கு) எதிர்ப்புத் தெரிவித்தல்; தடையாக இருத்தல்; stand in somcones