பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

way; go counter to; oppose உன் திருமணத்திற்கு நாங்கள் குறுக்கே நிற்கவில்லை.

குறுஞ்செய்தி பெ. (n.) கைபேசியின் மூலம் சுருக்கமாகத் செய்தி அனுப்பும் முறை; short message sent through a mobil phone/short message service (abbreviated to SMS).

குறுந்தகடு பெ. (n) கணிப்பொறியில் பதிவு செய்யக்கூடிய மெல்லிய வட்ட வடிவ நெகிழித் தகடு; compact disc,

CD.

குறுந்தொழில் பெ. (n.) மிக அதிக மூலதனமோ அல்லது பெரிய எந்திரங் களோ இல்லாமல் நடத்தப்படும் தொழில்; medium scale industry. குறுந்தொழில் நிறுவனங்கள் பெரு மளவில் வேலை வாய்ப்புகளை வழங்குகின்றன.

குறுநாவல் பெ. (n.) அளவில் சிறு கதையை விட நீளமாகவும், நாவலை விடச் சிறியதாகவும் இருக்கும் கதை; short novel; novelette.

குறுநிலம் பெ. (n.) சிற்றரசனின் ஆளுகைக்கு உட்பட்ட சிறிய நிலப் பகுதி; (in former times land ruled by a feudatory. குறுநில மன்னன்'. குறுநொய் பெ. (n.) ஒன்றிரண்டாக நொறுங்கியுள்ள தவசம்; broken grain (esp. rice, used for cooking); grit like grain. அரிசி குறுநொய்/ கோதுமைக் குறுநொய்.

குறும்படம் பெ. (n.) குறைந்த நேரமே ஓடக்கூடிய திரைப்படம்; short film. குழந்தைத் தொழிலாளர்களைப் பற்றிய குறும்படம்'.

குறும்பர் பெ.(n.) வேட்டையாடு வதையும் உழவையும் தொழிலாகக் கொண்ட ஒரு பழங்குடியினர்; kurumba (tribe).

குறும்பன் பெ. (n.) குறும்பு செய்பவன்; mischiefmaker, prankster.

குறைதல்

199

குறும்பி பெ. (n.) காதின் உள்ளே பழுப்பு நிறமுடைய மெழுகு போன்று காணப்படும் பொருள்; ear wax. குறும்பு பெ. (n.) 1. சிறு தொல்லை தரும் விளையாட்டுச் செயல்/மகிழ்விக்கும் விளையாட்டுத்தனம்; playful act; prank/mischief. 'குறும்பு செய்யாமல் ஒழுங்காகப் படி'. 2. பண்பாடற்ற செயல்; teasing. தனியாக நின்றிருந்த பெண்ணிடம் குறும்பு செய்த இளைஞரைக் காவல்துறையினர் தளை (கைது) செய்தனர். குறும்புத்தனம் பெ. (n.) விளையாட்டுத் தனம் அல்லது கரடுமுரடானத்தனம்; mischievousness; impishness. 'தோழி குறும்புத்தனமாக என் கன்னத்தில் கிள்ளினாள்.

குறுமணல் பெ. (n.) சன்னமான மினு மினுப்புடன் இருக்கும் மென்மை யான மணல்; fine sand. 'காற்றடித்துத் தரையெங்கும் குறுமணல் படிந் திருந்தது.

குறுவை பெ. (n.) வைகாசி வாக்கில் விதைத்து ஆவணி வாக்கில் அறுவடை செய்துவிடக் கூடியதாகச் சாகுபடி செய்யும் குறுகிய கால நெற்பயிர்;

the short term crop of paddy cultivated during May - August. தமிழ்நாட்டில் தஞ்சாவூரில் குறுவைப்பயிர் அதிகமாகப் பயிரிடப் படுகிறது.

குறைதல் வி. (v.) 1. எண்ணிக்கை, அளவு, தன்மை போன்றவை முன்பிருந்த நிலைக்கும் கீழே வருதல்; come down (in number, in quantity); get reduced; diminish. மூல வளங்கள் குறைந்து கொண்டிருப்பது கவலை அளிக்கும் செய்தி 2. தணிதல்; கட்டுப்படுதல்; come down (in intensity); subside; lessen. மாத்திரையால் தலைவலி) குறைந் திருக்கிறது'.