பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200

குறை

குறை பெ. (n.) இருக்க வேண்டியது இல்லாத நிலை அல்லது வேண்டுவது கிடைக்காத நிலை; ஒன்று போதுமான அளவு இல்லாத நிலை; wants; needs; lack (of something). 'குழந்தை ஒரு குறையும் இல்லாமல் வளர்கிறது. குறைகாண்தல் வி. (v.) குற்றம் கண்டுபிடித்தல்; find fault. 'அவரிடம் உள்ள சிக்கல் எல்லோரிடமும் குறை காண்பதுதான். குறைச்சல் பெ. (n.) I.ஏந்தின்மை (வசதிக்குறை); the wanting of something. 'இந்த வீட்டுக்கு என்ன குறைச்சல்'. 2. குறைவு; being low. சம்பளம் குறைச்சல்' . 3. குறைந்த பட்சம்; minimum. 'எவ்வளவு குறைச்சலாகப் பார்த்தாலும் இந்த வீடு இருபது இலக்கம் உரூபா பெறும்'.

குறைகூறுதல் வி. (v.) குற்றம் சாட்டுதல்; find fault with; criticize; blame. எல்லாவற்றுக்கும் ஏன் ஆசிரியர் களையே குறை கூற வேண்டும். குறைத்து வி.அ. (adv.) குறைவாக; தாழ்வாக ; மலிவாக; belittlingly. அவரைக் குறைத்துப் பேசாதே' இந்த ஊரிலேயே அவருக்கு இருக்கும் செல்வாக்கு வேறு யாருக்கும் கிடையாது.

குறைந்த பெ.அ. (adj.) அதிகம் இல்லாத; போதுமானதாக இல்லாத; moderate; not high; low, insufficient. 'குறைந்த வாடகை/ குறைந்த சாமான். குறைந்த அழுத்த மின்சாரம் பெ. (n.) குறைந்த அளவு மின் அழுத்த ஆற்றலை அளிக்கும் மின்சாரம்; low tension electricity; LT power. குறைந்த அரத்த அழுத்தம் பெ. (n.) உடலில் இயல்பாக இருக்க வேண்டிய குருதி அழுத்தத்தை விடக் குறைவாக

இருக்கும் நிலை; low blood pressure. குறைந்தது பெ. (n.) குறைந்த அளவு; minimum. இந்த வேலைக்குக் குறைந்தது நான்கு ஆண்டுகள் பட்டறிவு உள்ளவர் தேவை'. குறைந்தபட்சம் பெ. (n.) மேலும் குறைக்க

முடியாத அளவு; minimum. 'குறைந்த அளவு ஆயிரம் பேராவது கல்யாணத் துக்கு வருவார்கள்.

குறை நிறை பெ. (n.) (பெரும்பாலும் பன்மையில்) நல்ல பிரிவுகளும் குறைபாடுகளும்; plus and minus (of something); merits and defects. 'ஒருவரோடு நெருங்கிப் பழகும் போதுதான் அவருடைய குறை நிறைகள் தெரிய வரும்'.

குறைப்பு பெ. (n.) குறைத்தல்; reduction. போர்க்கருவி குறைப்பு செய்யுமாறு வல்லரசுகளை உலக நாடுகள் கேட்டுக்கொண்டன'

குறைபடுதல் வி. (v.) வருத்தத்தை வெளிப்படுத்துதல்; குறை கூறுதல்; complain. 'தன்னுடைய சிறுகதை களை எந்தப் பத்திரிக்கையும் வெளியிடவில்லை என்று நண்பன் குறை பட்டுக் கொண்டான்.

குறைபாடு பெ. (n.) (உடலில் சத்துகள்)

போதிய அளவு இல்லாமை; deficiency (of certain essential things for one's health). 'இரும்புச் சத்துக் குறை பாட்டைக் கீரைவகைகள் போக்கும்'. குறைபிரசவம் பெ. (n) (கருவுற்ற) 2

i - ஆவது கிழமையிலிருந்து 37-ஆவது கிழமைக்குள் பிறக்கும் குழந்தை;

premature delivery.

குறைமாதம் பெ. (n.) (பிள்ளைப் பேற்றி) நிறை மாதத்திற்கு முந்திய காலம்; (of the birth of a baby) prematurity. 'குறை மாதத்தில் பிறந்த பிள்ளை. குறைவு பெ. (n.) I. குறைந்து காணப்படும் நிலை; கம்மி; being low; being less than nomal. 'நான் பார்க்கும் வேலைக்கு