பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்தச் சம்பளம் குறைவுதான்'. 2 போதிய அளவு இல்லாதிருத்தல்; insufficiency; deficiency. 'தேனீரில் சக்கரை குறைவாக இருக்கிறது'. குறைவைத்தல் வி. (v.) ஒருவர் குறையாக உணரும் வகையில் ஒன்றைச் செய்தல்; cause something to be dissatisfied. படிப்புப் பணியில் உனக்கு நான் என்ன குறை வைத்தேன்?'.

குன்றுதல் வி. (v.) I. குறைந்த நிலைக்கு வருதல்; குறைதல்; become less (than what it was) diminish. அகவையாகி விட்டாலும் வலிமை குன்ற வில்லை'. 2 உடல் சிறுத்து விட்டதைப் போல் உணர்தல்/ (மனம்) கூசுதல்; feel small. தன்னைப் பற்றிய அவதூறுகளைக் கேட்டு உடலும் உள்ளமும் குன்றிய நிலையில் அவர் இருந்தார்.

குன்று பெ. (n.) தொடர்ச்சியாக இல்லாத (உயரம் குறைந்த) சிறுமலை; hill. குன்றின் உச்சியில் ஒரு முருகன் கோயில் இருக்கிறது'.

குனிதல் வி. (v.) (தலை அல்லது உடல்)

கீழ் நோக்கி வளைதல்; (of head or body) bend; bow down. 'குனிந்தும் நிமிர்ந்தும் உடற்பயிற்சி செய்தான். குனியக் குனியக் குட்டுதல் வி. (v.) மேலும் அதிகாரம் செலுத்துதல்; தொடர்ந்து ஒடுக்குதல்; harass more the more one submits. அவன்சொல்வதை எல்லாம் செய்வாய் என்று தெரிந்தால் நீகுனியக் குனியக் குட்டுவான்'.

கூ

கூக்குரல் பெ.(n.) 1. உரத்த ஒலி; கூச்சல்; scream; shout (of someone or many). ஒரு பெண்ணின் கூக்குரல் கேட்டுக் குரல் வந்த திசை நோக்கி ஓடினோம்' . 2. எதிர்ப்பு, முறையீடு, கண்டனம் போன்றவற்றை வெளிப்படுத்துவது; outcry. 'பத்திரிக்கைச் சுதந்திரம் தடை செய்யப்படுகிறது என்ற கூக்குரல் எங்கும் கேட்கத் தொடங்கிவிட்டது.

கூட்டம்

201

கூச்சநாச்சம் பெ. (n.) தயக்கமும் வெட்கமும்; (usually in the negative) sense of shame. 'கூச்சநாச்சமின்றி வெளிப்படையாகப் பொய் சொல்லு

வான்.

கூச்சம் பெ. (n.) 1. தயக்க உணர்வு, வெட்கம்; shyness. மேடையில் பேச இவ்வளவு கூச்சமா? . 2. ஒவ்வாத கிளர்ச்சி உணர்வு; tickling sensation. இடுப்பைத் தொடாதே. கூச்சமாக இருக்கிறது.

கூசுதல் வி. (v.) 1. மனத்தில் ஒவ்வாத உணர்வு ஏற்படுதல்; feel delicate; shrink back. கெட்ட சொற்களால்திட்ட வாய் கூசவில்லையா?. 2. (அதிக ஒளியால் கண்) பார்க்க முடியாமல் சுருங்குதல்; (of eyes) be dazzled (by the brightness of light). (கண்கூசும் மின்விளக்கு அலங்காரம்.

கூட்டணி பெ. (n.) தனித்தனியாக இயங்கும் சங்கம், கட்சி போன்றவை குறிப்பிட்ட ஒரு நோக்கத்திற்காக இணைந்து செயல்பட ஏற்படுத்தப்பட்டகூட்டான அமைப்பு; alliance of political parties; front consisting of association. 'ஊதிய உயர்வு கேட்டு ஆசிரியர் கூட்டணி நடத்தும் வேலை நிறுத்தம் இன்னும் தொடர்கிறது.

கூட்டத்தொடர் பெ. (n.) (பாராளுமன்றம், சட்டமன்றம் போன்ற அமைப்பு களில்) உறுப்பினர்கள் குறிப்பிட்ட காலம் வரை நாள்தோறும் கூடும். JaLLib; session (of parliament, etc.,). நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்கியது'. கூட்டம் பெ. (n.) 1. திரண்டிருக்கும் மக்கள் தொகுதி; crowd; gathering. பொங்கலை முன்னிட்டுக் கடை வீதியில் கூட்டம் அலைமோதியது'. 2.கூடுதல்; meeting. 'அமைச்சரவைக்