பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202

கூட்டமைப்பு

கூட்டம் நாளை நடைபெறும்'. 3. பொது மக்களை ஒரு இடத்தில் கூடச் செய்து, தலைவர் பேசும் ஏற்பாடு; public meeting. 'தலைமை அமைச்சர் பேசும் கூட்டத்திற்குப் வலுத்த பாதுகாப்பு போடப்பட் டிருந்தது'. 4. தீய செயலில் ஈடுபடுபவர்களின் குழு; gang. கொள்ளைக் கூட்டம்.

கூட்டமைப்பு பெ. (n.) ஒன்றுக்கு மேற்பட்ட அமைப்புகளின் இணைப்பு; federation (of unions and associations). தொழிற்சங்கக் கூட்டமைப்பு இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் மேற்கொண்டது.

கூட்டல் பெ.(n.) ஒரு எண்ணோடு மற்றொரு எண்ணைச் சேர்த்து மொத்தமாக்கும் கணித முறை; addition in arithmetic). 'ஆரம்ப வகுப்புகளில் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் போன்றவை கற்றுத் தரப்படுகின்றன.

கூட்டறிக்கை பெ. (n.) (நாடுகள் அல்லது அமைப்புகள்) ஒன்றாகச் சேர்ந்து விடுக்கும் அறிக்கை; joint communique.

கூட்டாஞ்சோறு பெ. (n.) சிறுவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் வீட்டி லிருந்து அரிசி, காய்கறிகள் போன்ற வற்றைக் கொண்டு வந்து விளை யாட்டாகச் செய்யும் சமையல்; cooking done by children as a play with rice and vegetables brought from each one's home.

கூட்டாட்சி பெ. (n.) ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிகள் இணைந்து அமைக்கும் அரசு; கூட்டணி ஆட்சி; coalition govemment. 'மத்தியில் கூட்டாட்சி என்பதே எங்கள் கட்சியின் நோக்க மாகும்'.

கூட்டாளி பெ. (n.) 1. தீய செயலில் ஒருவருக்குத் துணையாக ஈடு படுபவர்; accomplice. 'இந்த வட்டா ரத்தில் பழங் கள்வனையும், அவனது கூட்டாளியையும் காவல் துறை கைது செய்தது. 2. வணிகம் முதலியவற்றில் பங்கு போட்டு பணி செய்யும்போது இணையும் பங்காளர்கள்; partner. கூட்டாளிகளிடமிருந்து விலகித் தனியாகத் தொழில் செய்கிறேன்'. 3.நண்பன்; friend. 'கூட்டாளிகளோடு அவன் கும்மாளமடித்துக் கொண் டிருந்தான்.

கூட்டிக் கழித்துப்பார் வி. (v.) எல்லா நிலவரங்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ளுதல்; make an assessment; take everything into account.

கூட்டிலை பெ. (n.) (உயிரி) ஒரு நடுக் காம்பில் சிறு இலைகள் பலவற்றைக் கொண்ட தொகுப்பு; compound leaf. வேப்பிலை கூட்டிலை வகையைச் சேர்ந்ததாகும்'.

கூட்டுதல் வி. (v.) 1. ஒன்று சேர்த்து அகற்றுதல்; பெருக்குதல்; gather up; sweep. 'தெருவில் சேர்ந்திருக்கும் குப்பையைக் கூட்ட இன்னும் ஆட்கள் வரவில்லை.2. ஒன்று சேர்த்தல்; திரட்டுதல்; bring together; collect. வேப்பங் கொட்டையைக் கூட்டிக் குவித்தாள் .3.(உறுப்பினர்களை} வருவித்துக் கூட்டம் நடத்துதல்; convene (a meeting) collect (a crowd). சட்டப் பேரவையை எப்போது கூட்டுவது?.

கூட்டு பெ. (n.) I. பங்கு அல்லது துணை; partnership complicity. 'என் நண்பனை வணிகத்தில் கூட்டு சேர்த்துக் கொண்டேன்.2. ஒரு காய்கறியை நறுக்கி வேக வைத்துப் பருப்பு, தேங்காய் முதலியவை சேர்த்து செய்யப்படும் ஒரு தொடு கறி;

a semi- solid dish of vegetable cooked with lentils,