பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

coconut, etc., புடலங் காய்க் கூட்டு' கூட்டுக் குடும்பம் பெ. (n.) மணமான பிள்ளைகள் பெற்றோர்களுடன் ஒரே வீட்டில் இணைந்து வாழும் குடும்ப முறை; joint family (with undivided property). 'கூட்டுக் குடும்பத்தில் இருந்துகொண்டு தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்கக் கூடாது'. கூட்டுச்சொல் பெ. (n.) தனிப் பொருளைத் தரும் இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட சொற்களின் கூட்டு; compound (word). அறுவை' என்ற சொல்லும் 'பண்டுவம்' என்ற சொல்லும் சேர்ந்து அறுவைப் பண்டுவம்' என்ற கூட்டுச்சொல் உருவாகிறது'.

கூட்டுசேராக் கொள்கை பெ. (n.) வல்லரசு நாடுகளுடன் சேராமல் தனித்துச் செயல்படுவதைக் கடைபிடிக்கும் கொள்கை;

the policy of non-alignment. கூட்டு நுண்ணோக்கி பெ. (n.) (இயற்.) மிகச் சிறிய பொருள்களையும் நுண்ணுயிரிகளையும் பல ஆயிரம் மடங்கு பெரிதாகக் காட்டும் ஒரு வகை நுண்ணோக்கி; compound microscope.

கூட்டுப்பண்ணை பெ. (n.) பலர் ஒன்று சேர்ந்து கூட்டுறவு முறையில் சேர்ந்து ஊதியத்தைப் பிரித்துக் கொள்ள அமைத்த வேளாண் பண்ணை;

co-operative farm.

கூட்டுப்பிணை Gu. (n.) ஒருவர் தன்னுடைய கடனுக்காக அளிக்கும் கூட்டு உறுதிப்பாடு; collateral. சிறு தொழில் நிறுவனங்கள் ஐந்து இலக்கம் ரூபாய் வரை பெறும் வங்கிக் கடனுக்குக் கூட்டுப் பிணைதர வேண்டிய தில்லை என்ற புதிய விதி வந்துள்ளது'. கூட்டுச்சாலை பெ. (n.) ஊருக்கு வெளியே சாலைகள் இணையும் இடம்; junction of roads on the outskirts of a town, village, etc., 'எங்கள் சிற்றூர்க்குப்

கூடாரம்

203

போக கூட்டுச்சாலை (கூட்டு ரோடு) இறங்கி ஒரு மாத்திரி (கிலோ மீட்டர்) தூரம் நடக்க வேண்டும்' கூட்டுவட்டி பெ. (n.) (கடன் தொகைக்கு)

ஒவ்வொரு ஆண்டுக்கான வட்டியும் முதலும் சேர்க்கப்பட்டு அந்தக் கூட்டுத் தொகைக்குக் கணக்கிடப் படும் வட்டி; compound interest. கூட்டுறவு பெ. (n.) I. ஒன்று சேர்ந்து செயல்படும் தன்மை அல்லது நிலை;

co-operation. 'உலக நாடுகளிடையே கூட்டுறவை வளர்க்க வேண்டும். 2.உறுப்பினர்களே உடைமையாளர் களாக இருந்து கூட்டாகச் செயல்படும் நிர்வாக முறை;

co-operative. தொழிலாளர் கூட்டுறவு அங்காடி'. கூடக்குறைய வி.அ. (adv.) அதிகமாக வேறுபடாமல்; a littlemore or a little less. விலை கூடக்குறைய இருந்தாலும் சரி, வீட்டை வாங்கி விடுவோம்'. கூடப்பிறத்தல் வி. (v.) ஒரே பெற்றோ ருக்குப் பிறத்தல்; உடன்பிறத்தல்; be bom of the same parents. 'இவன்ஒன்று விட்ட தம்பியல்ல, என்கூடப் பிறந்த தம்பி.

கூடம் பெ. (n.) I. குறிப்பிட்ட நோக்கத் திற்கான இடம் அல்லது கட்டடம்; நடுவம்; மையம்; a building or a place for the purpose specified. 'ஆய்வுக் கூடம். 2. இடப்பரப்பு உள்ள வீட்டின் நடுப்பகுதி; spacious central hall of a house. 'முன்பெல்லாம் வீட்டுக் கூடத் திலேயே திருமணங்கள் நடக்கும்'. கூடமாட வி.அ. (adv.) (ஒருவர் செய்யும்) செயலுக்குத் துணையாக; lending a helping hand. அம்மாவுக்குக்கூடமாட இருந்து உதவி செய். கூடாரம் பெ. (n.) 1. (இடைக்காலமாகத் தங்குவதற்கு) கழிகளை நட்டு அவற்றின் மேல் தண்ணீர் புகாத