பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204

கூடிக்குலாவுதல்

கனத்த உரப்பத் துணியை விரித்து இழுத்துக் கட்டி அமைக்கும் கூம்பு வடிவ அமைப்பு; tent. 'வெள்ளத் துயர் துடைப்புப் பணிகளை மேற்கொள்ள வந்திருக்கும் படைத்

துறையினர் கூடாரம் அடித்துத் தங்கியுள்ளனர்' . 2. வீரதீர விளை யாட்டுகளைப் பொது மக்கள் பார்ப் பதற்காக அமைக்கும் அமைப்பு (வட்டரங்குக் குழுவினர்); tent (put up by circus). இந்த வட்டரங்கு கூடாரத்தில் ஒரே நேரத்தில் ஆயிரம் பேர் உட்கார்ந்து பார்க்கலாம்'. கூடிக்குலாவுதல் வி. (v) (தேவைக்கு அதிகமாக ஒருவருடன்) நெருங்கி உறவாடுதல்; (

jocularly or disappro- vingly) be close to someone. 'நேற்று கூடிக் குலாவிக் கொண்டிருந்தீர்கள். இன்று ஆளுக்கொரு திசையில் போய்க் கொண்டிருக்கிறீர்களே?'. கூடியமட்டும் வி.அ. (adv.) (ஒருவரால் ஒன்றைச் செய்ய) முடிந்த அளவு; as far as possible. கூடிய மட்டும் கடன் வாங்காமல் காலம் கழிப்போம்'. கூடிய விரைவில் வி.அ. (adv.) மிகக் குறுகிய காலத்தில்; வெகு விரைவில்; at the earliest; as soon as possible. கூடிய விரைவில் தேர்தல் நடக்கும் என்று அறிவித்துள்ளார்கள்'.

கூடிவருதல் வி (v) ஒத்து வருதல் அல்லது ஏற்றதாக அமைதல்; be appropriate be propitious. நேரமும் காலமும் கூடி வந்தால் எல்லாம் நடக்கும்'. கூடுதல் வி. (v.) I. வந்து சேர்தல்; குழுமுதல்; gather, come together; meet at. 'நாடகத்தைப் பார்க்க மக்கள் பெரும் திரளாகக் கூடியிருந்தனர். 2. குறிப்பிட்ட நோக்கத்திற்காக முறையாகச் சந்தித்தல்; meet; assemble. பாராளுமன்றம் நாளை கூடுகிறது' 3. ஒன்று சேர்தல்; பொருந்துதல்;join;

get set. 'சின்னப் பையன்தானே உடைந்த எலும்பு கூடிவிடும்'. கூடு பெ. (n.) I. (பறவை, தேனீ, பூச்சி முதலியவை) அமைத்துக்கொள்ளும் வசிப்பிடம்; nest, hive, web of birds, insects, etc., பறவைகள் தங்கள்

கூட்டிற்குத் திரும்பின . 2. பத்தாயம்; (நெல் கொட்டிவைக்கும்); receptable for grain. 3. வண்டியில் கூரை போல் போடப்படும் தடுப்பு; hood of a cart. வண்டிக்குக் கூடு கட்ட வேண்டும். கூடுமான பெ.அ. (adj.) இயன்ற அல்லது முடிந்த (அளவில்); to the extent possible. கூடுமான வரைக்கும் அதிகச் செலவாகாமல் பார்த்துக்கொள்'.

கூடை பெ. (n.) மூங்கில், பிரம்பு, தார் முதலியவற்றால் பின்னிச் செய்யும் அகன்ற வாய் உடைய பெட்டி; basket (made of bambu, cane, wire, etc.,). கூடையில் சாப்பாட்டு ஏனங்களை வைத்தாள்.

கூடை நாற்காலி பெ. (n.) கூடை போன்ற அமைப்பில் செய்த ஒருவகை நாற்காலி; char with a basket like seat. கூடைப்பந்து பெ. (n.) ஆடுகளத்தின் இருபுறமும் அமைக்கப்பட்டிருக்கும் கம்பத்தில் உள்ள கம்பி வளையத் திற்குள் பந்தை (இரு அணியினராகப் பிரித்து ) போடும் விளையாட்டு;

basket ball.

கூண்டில் ஏற்றுதல் வி. (v.) (ஒரு சிக்கல்) மறுப்பீடு,சண்டை போன்றவற்றின் கரணியமாக ஒருவர் மீது) வழக்குத் தொடர்தல்; sue someone. 'வாடகை பாக்கி தரா விட்டால் கூண்டில் ஏற்றி விடுவேன்.

கூண்டு பெ. (n.) 1. கம்பி அல்லது கம்புகள் கொண்டு ஏற்படுத்தப்பட்ட அமைப்பு;

cage, coop, pej, cage - like structure. 'புலிக்கூண்டு'. 2. (அற மன்றத்தில் குற்றவாளி அல்லது சான்றாளி ஏறி நிற்க வேண்டிய)