பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேடை போன்ற இடம்; box (for witnesses).

கூண்டு வண்டி பெ. (n.) மேல்புறம் வளைவான கூரை போடப்பட்ட மாட்டு வண்டி; (bullock) car with a

hood.

கூண்டோடு வி.அ. (adv.) (குறிப்பிடப்

படும் சூழலில்) தொடர்புடைய அனைவரும்; பூண்டோடு; totally. குல(சாதி)ச்சண்டையில் கூண்டோடு அழிந்த குடும்பங்களும் உண்டு. கூத்தாடி பெ. (n.) I.ஆர்ப்பாட்டமாக நடந்து கொள்ளுதல்; create anoisy scene; behave in an unruly way. 'குடித்துவிட்டு வந்து கூத்தாடிக்கிறான். 2.கூத்தில் ஆடிப்பாடி நடிப்பவர்; sing and dance. கூத்தாடு வி. (v.) (நாட்டுப்புறக் கூத்தில்) ஆடிப் பாடி நடித்தல்; act, sing and dance (in folk play).

கூத்து பெ.(n.) வசனம், பாட்டு, அடவுகள் போன்றவற்றைக் கொண்டு நடிக்கும் நாட்டார் கலை; a fam of folk theatre with song, dialogue and movements, enacting stories from mythology. தமிழகத்தின் வட மாவட்டங்களில் பாரதக் கதை கூத்தாக ஆடப் படுகிறது. 2. நாடகம்; drama play. இயல், இசை, கூத்து என்ற மூன்று பிரிவுகளில் கூத்துத் தமிழ் நூல்கள் கிடைக்கவில்லை.

கூதல் பெ. (n.) குளிர்; chill. 'கூதல் காற்று'. கூந்தல் பெ. (n.) (பெண்ணின்) தலை முடி; hair (of a woman). 'எவ்வளவு நீளமான கூந்தல்.

கூப்பாடு பெ. (n.) I. பரவலாகக் கேட்கும்படிக்கூப்பிடுதல்; shout; yell. தெருவில் நின்றுகொண்டு அம்மா, அம்மா என்று ஏன் கூப்பாடு போடுகிறாய்?'. 2. (ஒருவரை) கண் டிக்கும்போது அல்லது (ஒருவருடன்) சண்டை போடும் போது போடும் கூச்சல்;yell. அடகு வைத்த நகையை

கூமுட்டை

205

இன்னும் மீட்கவில்லை என்று என் மனைவி கூப்பாடு போடுகிறாள். கூப்பிடுதல் வி. (v.) 1. ஒருவர் கேட்கும்படி சொல்லுதல்; அழைத்தல்; call; call out; address. 'தெருவில் விளையாடிக் கொண்டிருந்த பையனைக் கூப்பிட்டு முருகன் கோயில் எங்கிருக்கிறது என்று கேட்டார்.2. வரும்படி வேண்டுதல்; invite. அவரே நேரில் வந்து என்னை கூப்பிட்டதால் போகிறேன்.3. தொடர்பு கொள் ளுதல் ; call. சரியாக பத்து மணிக்குத் தொலைபேசியில் என்னை கூப்பிடு வதாக நண்பர் சொல்லியிருந்தார். 4.கூவுதல்; crow (at day break). இன்னும் கோழி கூப்பிடவில்லை'. கூப்பிடு தூரம் பெ. (n.) குறைந்த தொலைவு; hailing distance. 'கூப்பிடு தூரத்தில் உள்ள கடைக்குப் போய் வர இவ்வளவு நேரமா?

கூப்புதல் வி. (v.) (வணங்கும்போது) உள்ளங்கை ஒன்றோடு ஒன்று தொடும்படி (கைகளை) மார்புக்கு நேராக இணைத்தல்; join (one's palms together and bring them in front of the chest as in paying one's respects or praying). கை கூப்பி வணங்கினார். கூப்பு பெ. (n.) குத்தகைக்கு விடும் குறிப்பிட்ட பகுதியில் உள்ள மரங்களின் தொகுப்பு; trees in an area of forest market as a unit for leasing. இந்த ஆண்டும் மூங்கில் கூப்புகள் காகித ஆலைக்கே வழங்கப்படும்'. கூம்புதல் வி. (v.) ஒன்றாக இணைதல்; குவிதல்; foldup. 'காலையில் மலரும் தாமரை சூரியன் மறைந்ததும் கூம்பிவிடும்.

கூமுட்டை பெ. (n.) I.அழுகிய முட்டை; addled egg. 'கடைக்குப் போய் முட்டை வாங்கி வா என்றால்