பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206

கூர்தல்

கூமுட்டையாக வாங்கி வந்திருக் கிறான்.2. விவரமறியாதவன்-வள்; innocent person.

கூர்தல் வி. (v.) காட்டுதல்; செலுத்துதல்; கொள்ளுதல்; (mostly in past forms) have (

love - mercy, pity, ect. on others). என் மேல் அன்புகூர்ந்து இதை முடித்துத் தர வேண்டும்.

மனம் இல்லாமல் வேலை செய்தல்; do a mercenary's work; do one'

s work half- heartedly'. 'என் திறமைக்கு ஏற்ற வேலை இது அல்ல ஏதோ கூலிக்கு மாரடிக்கிறேன்.

கூலிப்பட்டாளம் பெ. (n.) கூலி வேலை செய்து பிழைப்பு நடத்துபவர்கள்; (when used derogato rily) wage slaves; hirelings. 'நாங்கள் கூலிப்பட்டாளம் தான். ஆனால், எங்களுக்கும் தன்மானம் உண்டு'

கூர் பெ. (n.) 1. குத்தும் அல்லது கூலிப்படை பெ. (n.) 1. பணம் கொடுத்துத்

வெட்டும் முனை; pointed tip; sharp edge. கூர் உடைந்த ஊசி'.2. கரிக்கோலின் எழுதும் முனை; tip (of apencil). கரிக்கோலின் கூர் உடைந்து விட்டது.

கூர்மை பெ. (n.) I. வெட்டும் பதம்; கிழிக்கும் அல்லது குத்தும் தன்மை; sharpness; pointedness. மாட்டின் கொம்பு கூர்மையாக இருந்தது'. 2. நுட்பமானதையும் உன்னிப்பாகக் கவனிக்கும் அல்லது பற்றிக் கொள்ளும் தன்மை; sharpness; keermess. கூர்மையான பார்வை. கூரை பெ. (n.) சாய்வாகவோ சமதளமாகவோ அமைக்கப்படும் கட்டடத்தின் மேல் பகுதி; ceiling, roof. கூரை ஓவியம் பெ. (n.) கூரைப் பகுதியின் உட்பக்கத்தில் வரையப்படும் ஓவியம்; mural on the inner surface of the roofs of a palace or temple.

கூலி பெ. (n.) 1. நாள் அல்லது வார அடிப்படையில் தரும் பணம்; வேலைக்கான பணம்; daily or weekly wage; payment. 'நாற்று நட்டதற்குக் கூலி இரண்டு மரக்கால் நெல் அல்லது 150 ரூபாய் பணம் தர வேண்டும்'. 2. வண்டியைப் பயன்படுத்தியதற்குத் தரவேண்டிய பணம்; fare, freight; hire charge. 'வண்டிக்கூலி.

கூலிக்கு மாரடித்தல் வி. (v.) ஏனோ தானோவென்று வேலை செய்தல்;

தற்காலிகமாக அமர்த்தப்படும் படை; mercenary force. 'அந்நியக் கூலிப் படையைச் சேர்ந்த தீவிர வாதிகள் பத்து பேர் காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்டனர் 2. பணம் பெற்றுக்கொண்டு வன்முறையில் ஈடுபடும் ஆட்கள்; goons; goondas. அரசியல்வாதியைக் கொலை செய்த கூலிப்படையினரைப்

பிடிக்கத்

தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது'. கூலியாள் பெ. (n.) கூலி வேலை செய்ய அமர்த்தப்படுபவர்; hired labourer. கூலியாட்களை வைத்தாவது வேலையை முடி!'. கூவுதல் வி. (v.) 1. ஒலி எழுப்புதல்; call; CTOW. முதல் கோழிகூவியதும் கிழவர் விழித்துக் கொண்டார். 2. சத்த மிடுதல்; cry; shout. 'மீனோ மீன் என்று கூவிக்கொண்டே போனாள்.

கூழ் பெ. (n.) 1. சில தவசங்களின் மாவைக் கொதித்த நீரில் போட்டுத் தயாரித்த, சற்றுக் குழைத்திருக்கும் நீர்ம உணவு; oridge like preparation from the flour of certain millets. இன்று காலையில் கேழ்வரகுக் கூழ்தான் குடித்தான். 2. மரத்தூள் குழம்பு; pulp. கூழ் ஊற்றுதல் வி. (v.) கூழைக் காய்ச்சிப்

படைத்து எல்லோருக்கும் வழங் குதல்; distribute to the public the ritual offering of porridge made to village deities as a form of worship. 'ஊரில் மாரியம்