பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனுக்கு கிறார்கள்.

நாளை கூழ் ஊற்று

கூழாங்கல் பெ. (n.) வழவழப்பான சிறிய உருண்டைக் கல்; pebble (found on seashore and on river beds).

கூழைபெ. (n.) குட்டை; short, puny. 'ஆள் கூழையாக இருக்கிறான்.

கூழைக்கும்பிடு பெ. (n.) போலியான நன்னடப்பு; obsequiousness. 'முதலா ளிக்குக் கூழைக்கும்பிடு போட்டே அவன் மகனுக்கு வேலை வாங்கி விட்டான்.

கூளம் பெ. (n.) I. நெல்மணிகள் நீக்கிய வைக்கோல்; bits of straw. மரத்தடியில் மாடுகளைக் கட்டி விட்டுக்கூளம் அள்ளிப் போட்டான்'. 2. கழிவுப்பொருள்; farm waste; refuse. குப்பை, சாணம், வேளாண் கூளங்கள்.

கூற்று பெ.(n.) (ஒருவர்) சொன்னது; (ஒருவரால்) கூறப்பட்டது; something said by a person. 'உன் கூற்றுப்படி எதுவும் நடக்கவில்லை'.

கூறுதல் வி. (v.) (பேச்சு அல்லது எழுத்து மூலமாக)(பிறர்) அறியச் செய்தல்; சொல்லுதல்; say; tell; state. 'நீங்கள் போகலாம் என்று கூறிவிட்டு அவர் வேலையில் ஈடுபட்டார்.

கெட்டிமேளம்

207

பாலும்) அரக்கு நிறத்தில் இருக்கும் சேலை; saree, usually in deep crimson colour, wom by the bride during wedding rituals. 'சின்னாளப்பட்டி கூறைப் புடவை விலை அதிகம்'

கூன் பெ. (n.) (முதுகுத்தண்டின்) முன்னோக்கிய வளைவு (முதுகுத் தண்டில் ஏற்படும்); round shoulers / hump on the back. 'இந்த வயதில் உனக்குக் கூன் விழுந்துவிட்டதே!'.

கூனன் பெ. (n.) கூன் விழுந்தவன்; (male) hunch back.

கூனி பெ. (n.) கூன் விழுந்தவள்; (female

hunch back.

கூனிக்குறுகுதல் வி. (v.) (அவமானம், குற்றம் போன்றவற்றால்) உடல் சுருங்குவது போல் உணர்தல்; fee1 small. 'குற்ற உணர்வு உடலைக் கூனிக் குறுக வைத்தது'.

கூனுதல் வி. (v.) (ஒருவரின் உடல்) முன் புறமாக வளைதல்; stoop. 'குனிந்தே வேலை செய்து இடுப்பு கூனி விட்டது.

கெ

கெட்டகோபம் பெ. (n.) கட்டுப்படுத்த முடியாத சினம்; seething rage. 'அவர் பேசும்போது குறுக்கே பேசாதே அவருக்குக் கெட்ட கோபம் வரும்'. கெட்டிக்காரன் பெ. (n.) திறமைசாலி; அறிவுமிக்கவன்; திறமையுள்ளவன்; capable man, smart man. கெட்டித்தல் பெ. (n.) 1. நிலம் முதலியவற்றை இறுக்கப்படுத்துதல்; to harden, strengthen. 2. துமுக்கி (துப்பாக்கி)யில் மருந்திட்டுக் கெட்டிப்படுத்துதல்; charge or load a

கூறு பெ.(n.) 1. சிறப்புக்கூறு; aspect; feature. 'மொழியின் அடிப்படைக் கூறு 'சொல்' ஆகும். 2. கண் திட்ட மாகவோ குறிப்பிட்ட அளவிலோ பிரித்து வைக்கப்பட்ட குவியல்; portion of something; division, share. கத்தரிக்காய்க் கூறு ஒவ்வொன்றின் விலையும் 10 ரூபாய் தான்'. கூறுபாடு பெ. (n.) தற்கூறு; feature. இவை அனைத்துக்கும் உள்ள பொதுவான கூறுபாட்டை அவர் விளக்கினார். கூறைப்புடவை பெ. (n.) திருமணச் சடங்குகளின் போது மணமகள் கெட்டிமேளம் பெ. (n.) திருமணத்தின் சில அணிந்து கொள்ளும் (பெரும் முகாமைச்சடங்குகளில் குறிப்பாகத்

fire arm.