பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208

கெடு

தாலிகட்டும்போது இசைக் கருவிகள் அனைத்தையும் கூட்டாக எழுப்பும் உரத்த (மங்கல) ஒலி; simultaneous and rapid playing of all musical instruments

at certain important stages of the wedding

ceremony.

கெடு பெ.(n.) ஒரு செயலை முடிக்கத் தரப்படும் கால வரம்பு; கால எல்லை; deadline; last date or due date; date of expiry.

கெடுதல் வி. (v.) 1. ஒன்று அல்லது ஒருவர், இழிவான நிலையை அல்லது தன்மையை அடைதல்; சீர்குலைதல்; get affected; deteriorate. 2. வறுமை யுறுதல்; to fall on evil days. 3. ஒழுக்கங்

கெடுதல்; to degenerate. 4. கெடுதல்; to be elided, dropped. 5. காய்கறி முதலியன அழுகுதல்; to rotting of vegetables.

கெடுபிடி பெ. (n.) நெறி(விதி) முறைகள், கட்டளைகள் ஆகியவற்றை நிறை வேற்றுவதில் காட்டப்படும் கடுமை; severity in enforcement of order, regulations.

கெண்டி பெ. (n.) குழந்தைகளுக்குப் பால், நீர் முதலியவற்றைக் கொடுப்பதற்குப் பயன்படுத்தும் சற்று நீண்ட குழல் போன்ற குவளை; a small cup like vessel with a spout.

கெந்துதல் வி. (v.) 1. தத்துதல்; to hop,

skip.2. கிட்டிப் புள்ளடித்தல்; to strike the stick in the game of tipcat. 3. ஒற்றைக்கால் ஊன்றியும் மறுகால் ஊன்ற முடியாமலும் கெந்தி கெந்தி நடத்தல்; walk with one lep pressed and other leg not capable of pressing.

கே

கேட்டுக்கொள்தல் வி. (v.) ஒன்றைச் செய்யுமாறு அல்லது செய்ய வேண் டாம் என்று ஒருவரை வேண்டிக் கொள்ளுதல்; ask politely; make an appeal; request.

கேட்பாரற்று வி.அ. (adv.) கவனிப் பதற்கோ

கண்காணிப்பதற்கோ

கொண்டாடுவதற்கோ

உரிமை

தட்டிக்

கேட்பதற்கோ யாரும் இல்லாமல் இருத்தல்; uncared for; unclaimed.

கேடு பெ. (n.) 1. அழிவு;ruin, destruction. 2.இழப்பு; loss waste. 3. வறுமை; adversity, indigence. 4. குற்றம்; defect. 5.இறப்பு ; death. 6. தீமை; evil, injury. 7. அழகின்மை; ugliness. கேடுகாலம் பெ. (n.) அழிவுறுங்காலம்; bad time. 'நல்ல தலைமை இல்லாத இந்த அமைப்பிற்குக் கேடுகாலம் தொடங்கிவிட்டதோ என சிலர் ஐயங்கொண்டனர். கேடுகெட்ட(வன்) பெ. (n.) சீரழித்த, மட்டமான, நிலைமையழிந்த(வன்); wretched, despicable.

கெடுதி பெ. (n.) 1. அழிவு, கெடுதல்; ruin; damaging. 2. தவணை; time limit for a payment. அவன் சொன்ன கெடுதிக்குள் நீபணம் கொடுத்துவிட வேண்டும்.

கெத்து பெ. (n.) தன்னுடைய உயர்வையும் பெருமையையும் காட்டிக்கொள்ளும் போக்கு; being haughty, proud bearing. புதிய தலைவர் அல்லவா; அதனால் கெத்தாக இருக்கிறார்.

கேழ்வரகு பெ. (n.) உணவாகப் பயன்

படுத்தும் கடுகு போன்ற உருண்டை யான செம்பழுப்பு நிறத் தவசம்; a kind of millent; ragi.

கேள்தல் வி. (v.) I. குறிப்பிட்ட செய்தி சொல்லும்படி ஒருவரிடம் வின வுதல் ; (கேள்வி) எழுப்புதல்; ask; enquire. 2. பாடங் கேட்டல்; to leam, be instructed in. 3. வேண்டுதல்; torequest. 4.கேள்விப்படுதல்; to be infomed of. 5.ஒலி, பேச்சு, இசை முதலியவை கவனத்தில் படும்படி செவிப் புலனால் உணர்தல்; listen to music, etc., 6. ஒருவருடைய இசைவைக்