பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210

கைகொட்டிச்சிரித்தல்

எண்ணங்கள் வெற்றிகரமாக நிறை வேறுதல்; materialize; come to fruition. கைகொட்டிச்சிரித்தல் வி. (v.) இகழ்ச்சியை வெளிப்படுத்துதல்; laugh at; mock at; deride. கைகொடுத்தல் வி. (V.) துன்ப நிலையில் இருக்கும்போது உதவி செய்தல்; துணையாக இருத்தல்; help aperson in distress give a helping hand.

கைச்சுத்தம் பெ. (n.) திருடுதல், கையூட்டு (இலஞ்சம்) வாங்குதல் முதலிய செயல்களில் ஈடுபடாத நேர்மை யான குணம்; probity, rectitude.

கைச்செலவு பெ. (n.) செலவு (பயணம்)

செய்யும்போது அல்லது அன்றாட

வாழ்க்கையில் ஏற்படும் சிறு செலவு;

minor or incidental expenses. கைத்தடி பெ. (n.) 1. அகவை முதிர்ந்தோர் நடக்கும்போது ஊன்றிக் கொள்ளப் பயன்படும் மரக்கம்பு; walking stick. 2.ஒருவரின் கையாள்; crony. கைத்தறி பெ. (n.) கையால் இயக்கப்படும் தறி; handloom. கைத்திறன் பெ. (n.) கைவேலையில் வெளிப்படும் திறமை, நுணுக்கம் முதலியவை; craftsmanship; dexterity. கைதட்டல் பெ. (n.) பாராட்டும் வகையில் இரு கைகளையும் தட்டி எழுப்பும் ஒலி ; applause. கைதூக்கிவிடுதல் வி. (v.) பொருளியல் வழியாக நல்ல நிலைக்குக் கொண்டு வருதல்;உயர்த்துதல்; help a person in dire straits; rescue from sinking. கைதேர்ந்த பெ.(n.) கலையில், தொழி லில் திறமையானவர்; adept. கைநழுவுதல் வி. (v.) கிடைக்கும் என்று நம்பிக் கொண்டிருந்த ஒன்று கிடைக் காமல் போதல்; slip out of one's hand. கைநனைத்தல் வி. (v.) ஒருவர் வீட்டில் உறவை நிலைநாட்டும் அல்லது உறுதிப்படுத்தும் முறையில் உணவு உண்ணுதல்; dine in someone's house (as

a token of establishing or confirming good relations).

கைநாட்டு பெ. (n.) 1. எழுதப் படிக்கத் தெரியாததால் கையெழுத்துக்குப் பதிலாக இடதுகை கட்டைவிரல் வரிகையை மையில் தொட்டுப் பதித்தல்; impression of one's left thumb recorded on a document as subscription. 'இவர் அரசுப் பணியில் கை நிறைய சம்பளம் வாங்குகிறார்'.

கைநிறைய வி.அ. (adv.) பணிப்பணம் போதுமான அளவுக்கும் அதிகமாக; (of income, remuneration) substantially. இவர் அரசுப்பணியில் கைநிறைய சம்பளம் வாங்குகிறார்’.

கை நீட்டுதல் வி. (v.) உதவி செய்யும்படி

கேட்டல்; ask for (monetary) help. கை நீள்தல் வி. (v.) கட்டுப்பாட்டை மீறி ஒருவரைக் கையால் அடித்தல்; strike intemperately.

கைப்பக்குவம் பெ. (n.) 1. உணவு, மருந்து

பதமாக உருவாக்குவதில் ஒருவருக் குள்ள திறமை; of cooking, making homemade remedies preparation that has an initable flavour. 'என் அம்மாவின் கைப்பக்குவம் சமையலில் தெரியும்'. 2. வீட்டிலேயே மருந்து உருவாக்கிப் பயன்படுத்தும் முறை; using homemade remedies.

கைப்பந்து பெ. (n.) நடுவில் வலைகட்டிப் பந்தை ஓர் அணியினர் கையால் அடிக்க, அதை எதிர் அணியினர் தரையில் பட்டுவிடாமல் திரும்பிச் செல்லும் வகையில் அடித்து விளை யாடும் விளையாட்டு; volleyball. கைப்பழக்கம் பெ. (n.) கையால் செய்யப் படும் வேலைகளைக் குறிக்கும் போது திரும்பத் திரும்பச் செய் வதனால் ஏற்படும் பயிற்சி; practice leading to the acquisition of a skill. சித்திரமும் கைப்பழக்கம்

கைப்பற்று பெ. (n.) I. சட்ட நடவடிக்

கைகள் அல்லது பிற நடவடிக்கை களின் மூலமாக ஒன்றைத் தன்வயம்