பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எடுத்துக்கொள்ளுதல்; take possession; confiscate. 2. போர், வன்முறை போன்றவற்றின் மூலம் ஒரு இடம், நாடு நகரம் போன்றவற்றைத் தன் வசமாக்கிக் கொள்ளுதல்; capture (a country, seixe; annex. 3. அதிகாரம், பதவி முதலியவற்றை முயன்று அடைதல்; எடுத்துக்கொள்ளுதல்; wrest; grab. 4. தேர்தல், விளையாட்டுப்

போட்டி போன்றவற்றில் தொகுதிகள், கோப்பைகள் போன்றவற்றை

வெல்லுதல்; win in a competition. கைப்பிடிச் சுவர் பெ. (n.) படிக்கட்டு, பாலம் முதலியவற்றின் பக்கங்களில் தடப்பவர் விழுந்துவிடாமல் இருப் பதற்கு உதவியாகப் பக்கவாட்டில் அமைக்கப்படும் உயரம் குறைவான சுவர்; wall similar to railing on both the sides of a staircase bridge. கைப்பிடித்தல் வி. (v.) 1. திருமணம் செய்துகொள்ளுதல்; marry. 2. மண் வெட்டி போன்ற சில வகைக் கருவி களிலும் ஏனங்களிலும் பிடித்துக் கொள்வதற்கு ஏதுவாக ஏற்படுத்தப் பட்ட தண்டு அல்லது வளையம்; handle. 3. கையால் அள்ளும் அல்லது கைக்குள் கொள்ளும் அளவு; handful. கைப்பிள்ளை பெ. (n.) பார்க்க; கைக்குழந்தை. கைபேசி பெ.(n.) கம்பிகள் வழியாக இணைக்கப்பட்டிருக்காமல் ஒலி அலைகளை நேரடியாகப் பெறுவதும் எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் சென்று பேசும் வகையில் இருப்பது மான தொலை பேசிக் கருவி; mobile phone; cellular phone.

கைம்பெண் பெ. (n.) கணவனை இழந்த பெண்; விதவை; widow.

கைமருந்து பெ.(n.) வீட்டில் இருக்கும் பொருள்களைக் கொண்டே உருவாக்கிக்கொள்ளும் மருந்து; homemade remedy.

கையும் களவுமாக

211

கைமறதியாக வி.அ. (adv.) நினை வில்லாமல்; forgetfully.

கைமாற்று பெ. (n.) உடனடித் தேவை களுக்காகத் தெரிந்தவர்களிடம் வாங்கிக்கொள்ளும் வட்டி, கடன் இல்லாத சிறு தொகை; a small sum borrowed from friends in a contingency. கைமாறுதல் வி. (v.) உரிமை, தொகை முதலியவை ஒருவரிடமிருந்து மற் றொருவருக்குச் செல்லுதல்; change

hands.

கைமாறு பெ. (n.) செய்த உதவிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் செய்வது; a return (made out of gratitude). கைமீறுதல் வி. (v.) சிக்கல் கட்டுப் பாட்டுக்கு உட்படாத அல்லது நிறை வேற்ற முடியாத நிலையை அடைதல்; get out of hand.

கையடக்கம் பெ. (n.) எளிதாகக் கையில்

எடுத்துச்செல்லக் கூடிய அளவில் இருப்பது; being handy. 'கையடக்க அகராதி.

கையாடல் பெ.(n.) மோசடி; defalcation.

கையாள்-தல் வி. (v.) 1. ஒன்றை உரிய முறையில் பயன்படுத்துதல்; use, adopt; handle. 2. குறிப்பிட்ட செயல், பணி போன்றவற்றை மேற்கொள் ளுதல்; deal with handle.

கையிருப்பு பெ. (n.) உடனடியாகப் பயன்படுத்திக்கொள்ளும் நிலையில் தற்போது ஒருவர் வயம் சேமிப்பாக இருப்பது; something in hand; readily available for use; saving.

கையும் களவுமாக வி.அ. (adv.) குற்றம் அல்லது தவறு செய்யும் அதே நேரத்தில்;

red-handed. 'கையூட்டு வாங்கும்போது கையும் களவுமாகப் பிடிபட்டார்.