பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212

கையேடு

கையேடு பெ. (n.) I. ஒரு துறையில் பணிபுரிவோருக்குப் பயன்படும் வகையில் செயல் முறைகளைக் கூறும் சிறிய நூல்; hand book, manual.

2.

அன்றாட நிகழ்ச்சிகளைக் குறித்துவைத்துக்கொள்ள உதவும் சிறிய குறிப்பேடு; diary. 3. தேர்வு எழுதுபவர்களுக்குப் பயன்படும் வகையில் வினா விடைகளைக்

கொண்ட நூல்; a book of reference with questions and answers. கையைக் கட்டுதல் வி. (v.) ஒன்றைச் செய்யவிடாமல் ஒருவரைக் கட்டுப் படுத்துதல்; bind someone hand and foot. கையைக்கடித்தல் வி. (v.) 1. எதிர் பார்த்ததற்கும் மேலாகச் செலவாகி வருத்தத்தை ஏற்படுத்துதல்; suffer more loss than what one can afford. 2.இழப்பு ஏற்படுத்துதல்; cause to;

incur loss.

கைராசி பெ. (n.) ஒருவருக்கு உள்ளங் கையில் உள்ள கைவரைகளால் இருப்பதாக நம்பப்படும் நன்மை விளைவைத்தரும் தன்மை; auspiciousness associated with. 'நல்ல கைராசியான மருத்துவர். கைவசம் பெ. (n.) குறிப்பிட்ட நேரத்தில் ஒருவரின் வயம் இருப்பது; being in one's possession; being available with

some one. என் வங்கிக் கணக்கில் குறைந்தளவு பணமே கைவசம் உள்ளது'.

கைவண்ணம் பெ. (n.) கலைப் படைப்பு கைவினைப்பொருள்கள்ஆகிய வற்றை உருவாக்குவதில் ஒருவருடைய கைத் திறன்; craftsmanship; artistry. கைவந்தகலை பெ. (n.) ஒருவருக்கு இருக்கும் திறமை கரணியமாக மிகவும் எளிதாகச் செய்யக்கூடியது; being adept in something. பேச்சால் பிறரை மயக்கிவிடுவது அவனுக்குக் கைவந்த கலை'.

கைவரிசை பெ. (n.) கண்டிக்கத் தக்க செயலைச் செய்வதில் காட்டும் திறமை; sleight of hand; smartness; cleverness.

கைவிடுதல் வி. (v.) குறிப்பிட்ட முடிவு, திட்டம், எண்ணம் முதலியவற்றை மேற்கொண்டு தொடராமல் இருத் தல்; drop; give up. 'மழையின் காரணமாகப் போட்டி கைவிடப் பட்டது.

கைவிரித்தல் வி. (v.) ஓர் உதவிக்காக ஒருவரை மிகவும் நம்பிக்கையுடன் நாடும்போது அவர் இயலாது என்று தெரிவித்தல்; express one's inability to give a much expected help. திருமணத்துக்கான உதவிகளைச் செய்வதாகச் சொல்லிவிட்டுக்கடைசி நேரத்தில் கை விரித்து விட்டார். கைவிலங்கு பெ. (n.) காவல்துறையினர், தாம் கைது செய்தவனைக் கைகளைப் பிணைத்து மணிக்கட்டில் மட்டும் இரண்டு வளையங்கள் இணைக்கப் பட்ட விலங்கு; handcuffs. கைவேலைப்பாடு

பெ. (n.) நகை, தச்சுத்தொழில், பூத்தையல் போன்ற வற்றில் நுணுக்கமாக வெளிப்படும் திறன்; workmanship.

கைவைத்தியம் பெ. (n.) நோய்கள் நீங்க மருத்துவரிடம் போகாமல் அன் றாடம் பயன்படுத்தும் உணவு, பச்சிலை போன்றவற்றைப் பட்டறி வின் வாயிலாகத் தெரிந்து கொண்டு வீட்டிலேயே செய்யும் (மரபு வழி) வைத்தியம்; treatment using home made remedies.

சக்கரநாற்காலி பெ. (n.) தடக்க முடியாதோர் இடம் விட்டு இடம் செல்லப் பயன்படுத்தும் சக்கரங்கள் பொருத்தப்பட்ட நாற்காலி; wheel

chair.