பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 அமைதல் இணைத்தல், பொருத்துதல்; build in, connect, install. இந்த எந்திரத்தில் அமைக்கப்பட்டுள்ள மின் இணைப்பு களின் வரைபடம்'. அமைதல் வி. (v.) I. நிறுவப்படுதல், உருவாக்கப்படுதல்; form, be established. 2. குறிப்பிட்ட முறையில் வடிவத்தில் அல்லது தன்மையில் இருத்தல்; be (with the stated quality). தோடி பண்ணில் அமைந்த பாடல்'. 3. தேடும் ஒன்று கிடைத்தல்; come to be had. *என் பெண்ணுக்கு மாப்பிள்ளை அமைந்துவிட்டது'. அமைதி பெ. (n.) 1. ஒலி இல்லாத நிலை; silence. 2. மனத்தில், முகத்தில் குழப்பமற்ற நிலை; undisturbed mind, peace. 3. தொல்லையின்மை; absence of trouble. அவருக்கு அமைதியான வாழ்க்கை அமைந்தது'. 4. போர், கலகம் இல்லாத நிலை; peace calmness. 5. அடக்கம்; modesty quietness. 6. (கலையில்) இசைவு; harmony. மரபுக் கவிதையின் யாப்பில் காணப்படும் ஓசை அமைதி'. 7. நெறிக்கு மாறாக இருந்தாலும் விலக்காக ஏற்கத் தகுந்தது; in grammar through anomalous accepted as a permisible deviation from ules. 'வழுவமைதி' அமைதிப்படுத்துதல் வி. (v.) 1. ஒலி யில்லாமல் இருக்குமாறு செய்தல்; pacify, calm. 2. பதற்றம், சினம் முதலியவற்றைத் தணித்தல்; calm down. அமைப்பு பெ. (n.) பல்வேறு கூறுகள் இணைந்து நிற்பது; structure. அயர்ச்சி பெ. (n.) 1. அசதி, களைப்பு; fatigue, tiredness. 2. மனத்தளர்ச்சி; depression. அயர்வு பெ. (n.) அயர்ச்சி பார்க்க. அயல்நாடு பெ. (n.) வெளிதாடு; foreign country. அயல்பணி பெ. (n.) ஓர் அரசு அதிகாரி தான் சார்ந்த துறையல்லாத வேறோர் அரசுத்துறையில் குறுங் காலிகமாக (தற்காலிகம்) ஆற்றும் பணி; Short term service by a govemment official in a department (or public undertaking) other than the one to which he or she was originally assigned; deputation; foreign service. அயலார் பெ. (n.) வெளியூரார்; town or village other than one's own. அரக்கபரக்க வி.எ. (inf.) விரைந்து விரைந்து வேலை செய்வது; hurriedly; in haste. அரங்கேற்றம் பெ. (n.) ஒரு புதிய கலைப் படைப்பைப் பார்வையாளர்களின் முன் முதல் முறையாக அளிக்கும் நிகழ்ச்சி; premiere, debut. என் மகளுக்கு நாட்டிய அரங்கேற்றம் நடை பெறுகிறது'. அரசல்புரசல் வி.அ. (adv.) அரைகுறை நிலையில் முழு விளக்கத்துடன் இல்லாமலிருப்பது; in a way one cannot specify, vaguely. அரசாங்கம் பெ. (n.) அரசு பார்க்க. அரசாட்சி பெ. (n.) அரசனுடைய ஆளுகை, அரசன் நடத்தும் திருவாகம்; rule or reign of a king. அரசியல் பெ. (n.) 1. ஆட்சி, அதிகாரம் பற்றிய கோட்பாடுகளும் நடை முறைகளும்; politics. 2 ஒரு அமைப்பு, அணி போன்றவற்றில் அதிகாரத்தைக் குறிவைத்துச் செயல் படும் போக்கு; politics (as an activity concerned wih acquisition of authority). அரசியல்பண்ணுதல் வி. (v.) தனக்கோ, தன்னைச் சார்த்தவர்களுக்கோ அதிகாரம் கிடைப்பதற்காகச் செயல் படுதல்; play politics.