பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214

சச்சரவு

சச்சரவு பெ. (n.) கலகம்; quarrel,

disturbance.

சட்டக்கல்லூரி பெ. (n.) சட்டக் கல்வி கற்பிக்கும் கல்லூரி; law college. சட்டசபை பெ. (n.) சட்டப் பேரவை; legislative assembly. சட்டத்துறை பெ. (n.) சட்ட நுணுக்கங்கள் பற்றிய துறை; law department. சட்டதிட்டம் பெ. (n.) I. சட்ட ஒழுங்கு; code or regulation. 2. உறுதிப்பாடு; accuracy, preciseness.

சட்டம்' பெ. (n.) 1. பாராளுமன்றத் தாலோ சட்டமன்றத்தாலோ பொது மக்கள் நலன் கருதி இயற்றப் படுவது; act. 2. மக்களின் நலனுக்காக இறை யாண்மை வகுக்கும் நெறிமுறை; law. சட்டம்' பெ.(n.) நாற்காலி, மேசை, கதவு போன்ற மர அறைகலன்கள் செய்வ தற்காக அளவாக வெட்டப்பட்ட மரத்துண்டு; piece of wood cut to size. சட்டமன்றம் பெ. (n.) மாநிலத்துக்கான சட்டங்களை இயற்றும் சட்டப் பேரவையையும் மேலவையையும் கொண்ட, அரசின் மூன்று உறுப்பு களில் ஒன்று; legislature. சட்டமாக்குதல் வி. (v.) ஒரு தீர்மானத்தை எல்லோரும் பின்பற்ற வேண்டிய நெறியாக சட்டமன்றம் அல்லது பாராளுமன்றம் ஏற்பிசைவு

அளித்தல்; enact; legislate. சட்டமூலம் பெ. (n.) சட்டமன்றம் நாடாளுமன்றம் முதலியவற்றில் ஒன்றைச் சட்டமாகச் செய்வதற்கு உறுப்பினர்களால் அல்லது அரசால் கொண்டுவரப்படும் திட்டம்

முதலியவை அடங்கிய குறிப்பு, திட்ட வரைவு; bill (in a legislature or parliament).

சட்ட மேலவை பெ. (n.) மக்களால் நேரிடையாகத் தேர்ந்தெடுக்கப் படாத அவை; legislative council. சட்டயாப்பு பெ. (n.) அரசமைப்புச்சட்டம்; constitution.

சட்டவல்லுநர் பெ. (n.) சட்டத் தொடர் பானவற்றில் நுட்ப அறிவுடையவர்; expert in law.

சட்டவிரோதம் பெ. (n.) சட்டத்துக்குப்

புறம்பானது அல்லது சட்டத்தை மீறியது; violation of law, transgression. சட்டவிளக்கு பெ. (n.) கோயிலில் சட்டத்தில் அமைத்து இடும் விளக்கு வரிசை; rows of lamps fixed to a frame, as in a temple.

சட்டி பெ. (n.) I. அகன்றவாயுள்ளதும் அடிப்பக்கம் தட்டையாகவுள்ளது மான மட்பாண்டம்; broad mouthed flaten earthen pot. 2. சமையற்கலம்; vessel in general.

சட்டிக்கரணை பெ. (n.) காறாக்கரணை; a

tuberous rooted herb.

சட்டிச்சோறு பெ. (n.) 1. கோயிற் பணியாளர்க்கும் சிவனடியார்க்கும் சட்டி அளவிட்டுக் கொடுக்கும் சோறு; food offerings distributed as a perquiste to temple servants.

சட்டி கரண்டு வி. (v.) சாப்பாட்டுக்கே துன்பப்படுதல்; scrape the barel. சட்டித்தலை பெ. (n.) I. பெருந்தலை; pot head. 2. வழுக்கைத்தலை; bald head. சட்டிப்பானை பெ. (n.) சமையல் முதலிய வற்றிற்கு உதவும் மட்பாண்டங்கள்; pots and pans, cooking utensils, crockery. சட்டுவம் பெ. (n.) 1. தோசைத்திருப்பி; spatula. 2. கரண்டி; ladle. 3. அன்ன வெட்டி; ladle used to serve cooked rice. சட்டை பெ. (n.) மெய்ப்பை; jacket, coat,

gown.

சட்டமேதை பெ. (n.) சட்ட வல்லுநர் சட்டைக்காரன் பெ. (n.) ஐரோப்பிய

பார்க்க.

ருக்கும் இந்தியருக்கும் பிறந்து