பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216

சதுக்கம்

சதுக்கம் பெ. (n.) I. பெரும்பாலும் நான்கு சாலைகள் கூடும் இடத்தி லுள்ள சதுர வடிவத் திறந்தவெளி; road junction; cross roads; square. 2. மறைந்த தலைவரின் நினைவாக எழுப்பப்படும் சதுர மேடையுடன் கூடிய நினைவுச் சின்னம்; memorial built for famous persons.

சதுப்பு நிலம் பெ. (n.) எல்லாப் பருவங்களிலும் ஈரமும் சேறுமாக இருக்கும் நிலப்பகுதி; marsh.

சதுரம் பெ. (n.) ஒத்த அளவுடைய நான்கு பக்கங்களையும் கோணங்களையும் கொண்ட வடிவம்; square. சதை பெ. (n.) I. உடலில் தோலுக்குக் கீழ் எலும்பைச் சுற்றியுள்ள கொழுப்பு நிறைந்த மென்மையான பகுதி; flesh; muscle. 2. பழம், தண்டு போன்ற வற்றில் தோலுக்குக் கீழ் உள்ளே அமைத்திருக்கும் திரட்சியான, மென்மையான பகுதி; fleshy part (of fruit).

சதைப்பற்று பெ. (n.) சதை நிறைந்துள்ள நிலை; the state of being fleshy. சதைப்பிடிப்பு பெ. (n.) சதை நிறைந்துள்ள நிலை; the state of being fleshy. சதைபோடுதல் வி. (v.) I. பருத்தல்; to stout. 2. குண்டாதல் ; to plump. சந்தப்பாட்டு பெ. (n.) நான்கெழுத்து முதல் இருபத்தாறெழுத்து வரை யுள்ள அடிகள் நான்கு கொண்ட பாவகை; stanza of four lines with twenty six syllables to a line.

சந்தம் பெ. (n.) செய்யுளில் தாளகதியைத் தோற்றுவிக்கும் ஓசை நயம்; musical or rhythmic flow.

சந்தனக்கல் பெ. (n.) சந்தனம் அரைக்கப் பயன்படுங்கல்; stone for grinding

sandal.

சந்தனக்காப்பு பெ. (n.) சந்தனத்தைக் கடவுளின் திருமேனியில் வழிபாட்டுக் காகப் பூசுகை; anointing an idol with sandal paste.

சந்தனக்குச்சி பெ. (n.) மணக்குச்சி (ஊது பத்தி); incense stick; scented stick. சந்தனக்கூடு பெ. (n.) முகமதியப் பெரியவர்களுக்காக நடத்தப்படும் திருவிழாவில் சிறு தேரின் நடுவில் வைத்து எடுத்துச் செல்லும் சந்தனக் குடம் ; a small pot filled with sandalpaste kept in a temple chariot taken act in procession in honour of muslim saints. சந்தனக்கோல் பெ. (n.) சந்தனக் குச்சி; stick.

சந்தனத்திரி பெ. (n.) சந்தனம் முதலிய மணப்பொருள்களால் செய்யப்படும் மணக்குச்சி (ஊதுவத்தி);

wick or thin stick coated with sandal or other perfumed paste for diffusing odour while burning joss-stick.

சந்தனநலங்கு பெ. (n.) திருமணத்திற்கு முன்னால் பெண்ணுக்கும் மாப் பிள்ளைக்கும் அவரவர் வீடுகளில் அரைத்த சந்தனம் முதலியவற்றைப் பூசி நலங்கு வைக்கின்ற சடங்கு; a ceremony prior to marriage in which nalangu is performed in the respective houses of the bride and bridegroom. சந்தனநீராட்டு பெ. (n.) கடவுள் திருமேனிக்குச் சந்தனக் குழம்பால் செய்யும் நீராட்டு; anointing an idol with sandal paste.

சந்தனப் பலகை பெ. (n.) சந்தன மரத்தாலான மணைப் பலகை; well polished seats made of sandal wood.

சந்தனப்பொட்டு பெ. (n.) சந்தனக் குழம்பால் நெற்றியில் வைக்கும் பொட்டு ; acircular mark of sandal paste

worn on the forhead.