பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சந்தனப்பொடி பெ. (n.) நறுமணச்சந்தனத் தூள்; $

weet - scented sandalwood powder.

சந்தனம் பெ. (n.) மணம் மிகுந்த எண்ணெய் எடுக்கவும் மணப் பொருள்கள் உருவாக்கவும் பயன் படும் மரம்; sandal wood.

சந்தனமுழுக்கு பெ. (n.) இறைவன் திருமேனிக்குச் சந்தனத்தில் செய்யும் முழுக்கு; anointing an idol with sandal paste. சந்தனவில்லை

பெ. (n.) சந்தன உருண்டை ; sandal tablet, small cake of sandal paste.

சந்தி பெ. (n.) I. சாலைகள்கூடும் இடம்; junction; cross roads. 2. இரண்டு சொற்கள் அல்லது இடைச்சொற்கள் சேரும்போது அவற்றின் இறுதி எழுத்தும் அடுத்து வருவதன் முதல் எழுத்தும் இணையும்போது ஏற்படும் மாற்றம் முதலியவை; sandhi. சந்திக்கிழு-த்தல் பெ. (n.) மானக்கேடு உண்டாக்கும் நோக்கத்தோடு ஒருவரின் குறைகளைப் பலரும் அறியச் செய்தல்; to expose to public, ridicule, drag somebody through the mud. சந்திசிரித்தல் வி. (v.) பலருடைய ஏளனத்திற்கு உள்ளாகுதல்; become the object of public ridicule.

சந்தித்தல் வி. (v.) I. ஒருவரைக் குறிப்பிட்ட இடத்தில் திட்டமிட்ட படியோ தற்செயலாகவே பார்த்துப் பேசுதல்; meet. 2. ஆறுகள், சாலைகள் கூடுதல்; இரண்டு கோடுகள் ஒரு புள்ளியில் சேருதல்; ஒன்று சேர்தல்; of rivers flow together, of roads join. சந்திப்பு பெ.(n.) 1.ஒருவர் மற்றொரு வரைச்சந்திக்கும் செயல்; meeting with a person. 2. சாலைகள் சேரும் இடம்; junction. இரண்டுக்கு மேற்பட்ட திசைகளில் போகும் இருப்புப்

சந்தை கூடுதல்

217

பாதைகள் உள்ள இடத்தில் அமைத் திருக்கும்.

சந்தியில்போடுதல் வி. (n.) சந்தியி லிழு-த்தல் பார்க்க.

சந்தியில்விடுதல் வி. (v.) ஒருவன் குடும்பத்தைப் போக்குப் புகலில் லாதவாறு செய்தல்; தெருச்சந்தியில் ஒருவனை விடுதல்; lit., to leave one at the cross roads, to desert as one's family. சந்தியிலிழுத்தல் வி. (v.) ஒருவனது குற்றங்குறைகளை வெளிப்படுத்திப் பலர்பழிதூற்றுமாறு செய்தல்; lit., to drag one the cross rods to expose publically to ridicule and shame. சந்தியில் நில்தல் (சந்தியில் நிற்றல்) வி.(v.) அனைத்தையும் இழந்து தெருச் சந்தியில் நிற்றல்; be driven to helplessness.

சந்து பெ. (n.) I. அகலம் குறைவானதெரு அல்லது வழி; narow street; lane. 2. குறுகிய இடைவெளி; இடுக்கு; narrow gap; cleft; chink. சந்துக்கட்டு பெ. (n.) I. செயல் திகழுங் காலம்; period, duration. 2. நெருக்கடி யான நேரம்; crisis, critical juncture. சந்துபொந்து பெ. (n.) 1. மூலை முடுக்கு; nook and comer. 2. பொந்துபுடைகள்;

interstices.

சந்தை பெ. (n.) 1. குறித்த காலங்களில் பொருள்களை விற்கவும் வாங்கவும் பலரும் கூடுமிடம்; shandy, fair, a market functioning on specified occasion. 2. கூட்டம்; multitutude, herd, flock. 3. இரு புருவமுங் கூடுமிடம்;

themid- point between the eye brows. சந்தை கூடுதல் வி. (v.) பொருள்களை விற்க ஓரிடத்தில் கூடுதல்; to assemble in a particular place to sell goods.