பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218

சந்தைப்படுத்துகல்

சந்தைப்படுத்துதல் வி. (v.) துகர்வோரைச் சென்றடையும் வகையில் தகுந்த ஏற்பாடுகளைச் செய்து பொருள்கள், விற்பனைக்குக் கிடைக்கச் செய்தல்; market a product, service, etc..). சப்பனாங்கட்டுதல் வி. (v.) அட்டணைக் காலிடுதல்; to sit cross legged. சப்பணம் பெ. (n.) அட்டணைக் காவிடுகை; act of sitting flat and cross legged.

சப்பளக்கட்டை பெ. (n.) இசையுடன் கதை கூறுவோர் நான்கு விரல்களில் ஒன்றும் கட்டை விரலில் ஒன்றுமாகக் கோத்துக் கொள்ளும் சிறு மணிகள் இணைக்கப்பட்ட தாளக்கட்டை; being held in between the fingers, pair of wooden pieces with tiny bells for marking time by the performers of religious songs.

சப்பாணி பெ. (பே.வ.) (n.) நொண்டி; cripple, lame person. சப்பாணிப்பருவம் பெ. (n.) பின்ளைத் தமிழில் இலக்கியத்துக்கு உரிமை பூண்ட குழந்தையைக் கைகொட்டி விளையாடுமாறு வேண்டும்

பருவம்;

section of pigar-tami, which describes the stage when a child begins to clap hands.

சப்பி பெ. (n.) பதர்;chatt (யாழ்ப்.). சப்புதல் வி. (v.) 1. உண்ணும்போது தாக்கினால் அல்லது உதடுகளால் 'சப்' என்ற ஒலி உண்டாக்குதல்; to make sound 'sap' either with tongue or lips while eating. 2. சுவைத்து ஒன்றன் சாறை உறிஞ்சிக் குடித்தல்; tosip, suck. 3. குதப்புதல்; to mumble in eating; to

munch.

சப்புக்கொட்டுதல் வி. (v.) சுவை மிக்க தின்பண்டங்களைச் சுவைக்கும் போது நாக்கினால் ஒலி எழுப்பிச் சுவையின் அருமையை வெளிப்

படுத்துதல்; to relish a dish or an item of food by making a click.

சப்பௌல் பெ. (n.) 1. சுவையின்மைக் குறிப்பு; onom, expr. signifying insipidity. 2. முற்றிலும் நீங்குதலைக் குறிக்கும் ஒலிக்குறிப்பு; mon, expr. signifying complete removal. வீக்கம் சப்பென்று குறைந்துவிட்டது.

சப்பை பெ. (n.) 1. தட்டை; flat.

2.தட்டையான தொடைப் பகுதி; flank. சப்பைக்கட்டு பெ. (n.) I. தவறான காரணம், நொண்டிச் சமாதானம்; lame excuse. 2, உறுதி யில்லாத முடிச்சு; uncertain knot. சப்பைக்கட்டை பெ. (n.) வலை மிதவைக் கட்டை; floating log of fishing net. சப்பைப்பிடிப்பு பெ. பெ. (n.) இடுப்புப் பக்கத்தில் உண்டாகும் ஊதை வகை; rheumatism in the hips, hip gout. சப்பைமூக்கு பெ (n.) தட்டையான மூக்கு: flat pug nose.

சப்பையான் பெ. (n.) பயனற்றவள்;

worthless person.

சப்பையெலும்பு பெ. (n.) இடுப்பெலும்பு: hip bone.

சப்பைவேலை பெ. (n.) இழிவானதாகக் கருதப்படும் பணி; work of inferior quality.

சம்பல் பெ. (n.) தேங்காய், மிளகாய், புளி முதலியவற்றைச் சேர்த்து அரைத்த துவையல்; akind of tuvaiyal. சம்பளம் பெ. (n.) செய்த வேலைக்குப் பெறும் கூலி; salary, சம்பளம்போடுதல்

வி. (v.) கூலி கொடுத்தல்; to pay wages. சம்பா பெ. (n.) பெரும்பாலும் சுறவ (தை) மாதம் அறுவடையாகும், ஐந்து மாதக் கால நெற்பயிர்; a crop of paddy of five months duration harvested sometime in thai.