பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228

சால்"

சால்' பெ. (n.) I.உழும்போது நிலத்தில் கொழு ஏற்படுத்தும் நீள்வட்டமான பள்ளம்; furrow. 2. நிலத்தை ஒரு முறை கலப்பை கொண்டு செய்யும் உழவு; one round of ploughing.

சால்பு பெ. (n.) நிறைந்த பண்பு ; மேன்மை; excellence.

சாலை பெ. (n.) 1. ஊர்திகள் செல்லவும் மக்கள் நடக்கவும் ஏற்றதாக அமைக்

கப்படும் பாதை; (public) road; (paved) way. 2. பெரும்பாலும் கூட்டுச் சொற்களில் (ஏதேனும் ஒன்றுக்காக ஏற்படுத்தப்பட்ட) கூடம் என்ற பொருள் தரும் இடைச்சொல்; particle occuring in compounds meaning a

structure.

சாலை நடவு பெ. (n.) வரிசையாக பயிர் நடவு வகை; transplantation of seedling.

சாலை வரி பெ. (n.) ஊர்தி உரிமை யாளர்கள் சாலையைப் பயன்படுத்து வதற்காக அரசுக்குச் செலுத்தும் வரி; road tax.

சாவி பெ.(n.) மணிபிடியாமற் பதராய்ப் போன பயிர்; withered crop, brighted empty grain.

சாவு பெ. (n.) உயிர் இழப்பு, இறப்பு; death (in accident, etc.,).

சாவுக்குருவி பெ. (n.) கூகை; கோட்

LITT; barn owl; screech owl. சாவுத்தீட்டு பெ. (n.) உறவினரின் இறப்பால் நேரும் தீட்டு; pollution on

the death of a relative.

சாவுமணி பெ. (n.) I. ஒருவர் இறப்பைத் தெரிவிக்கும் வகையில், கிறித்துவர் கோயிலில் அடிக்கப்படும் மணி; knell; death bell in a church. 2. ஒன்றின் முடிவு; end.

சாவுவீடு பெ. (n.) இறப்பு (மரணம்) நிகழ்ந்த வீடு; house where somebody has died.

சாளரம் பெ.(n.) பலகணி; (latticed) window.

சாறு' பெ. (n.) பழம், இலை, தண்டு போன்றவற்றைப் பிழிந்து எடுக்கும் சாறு; juice; extract.

சாறு' வி. (v.) நிலத்தை மேலாகக் கொத்துதல்; turm over the top layer of the soil; dig.

சான்றளி வி. (v.) சான்றிதழ் உண்மை யானது என்று கையெழுத்தும் முத்திரையும் போட்டு உறுதி யளித்தல்; attest (a copy of a document). சான்றாண்மை பெ. (n.) 1. பெருந்தன்மை நற்குணங்கள் பல்லாற்றானும் அமைதல்; nobility greatness. 2. பொறுமை; பல குணங்களாலும் நிறைந்து அவற்றை ஆளுத்தன்மை;

self-control, patience.

சான்றாதாரம் பெ. (n.) 1. துணைநூற் பட்டியல்; bibliography. 2. சான்று;

evidence.

சான்றிதழ் பெ. (n.) ஒருவரின் பிறப்பு,

இறப்பு, கல்வி, திருமணம் முதலி யவை பற்றி குறிப்பிட்ட விளக் கத்தைத் தந்து உரிய அதிகாரி அல்லது அமைப்பு அதிகாரச் சான்றாவணமாக வழங்கும் எழுத்து வடிவிலானசான்று; testimonial certificate.

சான்று பெ. (n.) கண்டசான்றாளி (சாட்சி); witness, evidence.

சான்றுரை பெ. (n.) சான்றுக்காகச் சொல்லும் உரை; evidence, demonstration.

சான்றுறுதி பெ. (n.) எழுத்து மூலம் அளிக்கும் உறுதி; testimony. சான்றோர் பெ. (n.) 1. அறிவொழுக் கங்களால் நிறைந்த பெரியோர்; the great, the learned, the noble.