பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சான்றொப்பம் பெ. (n.) ஓர் ஆவணத்தின் நகலையும் அசலையும் ஒப்பிட்டுப் பார்த்து நகல் உண்மையானது என்று சான்றளிக்க (அரசு ஒப்பளிப்பு செய்துள்ள அதிகாரி) இடும் கை யெழுத்தும், முத்திரையும்; attestation. சான்றோன் பெ. (n.) அறிவொழுக் கங்களால் சிறந்தவன்; a wise, leamed and respectable man.

சி

சிக்கல் பெ. (n.) 1. தாறுமாறு; tangle. 2. பின்னல்; plaiting. 3. கோளாறு; complication.4. அருமைப்பாடு, முட்டுப்பாடு;difficulty. 5. குழப்பம், தடுமாற்றம்; embarrassment. 6. மாட் டிக் கொள்ளல்; entangling. சிக்கவைத்தல் வி. (v.) மாட்டிவிடுதல்; to cause oneself to be caught. சிக்கறுத்தல் வி. (v.) 1. நூல் முதலிய வற்றில் சிக்குவிடுவித்தல்; to untie a knot, disentangle. 2. சிக்கலானதைத் தீர்த்தல்; to settle an intricate business. 3. துறவறம் புகுதல்; to give up wordly attachment.

சிக்கித்திணறுதல் வி. (v.) 1. சிக்கலில் மாட்டிக்கொண்டு இன்னலுறுதல்; struggle. 2. சொற்களில் தடுமாற்றம்;

stammer out.

சிக்குதல் வி. (v.) வெளியில் வர முடியாத அளவுக்கு அல்லது விடுபட முடியாத அளவுக்கு மாட்டிக் கொள்ளுதல்; get stuck.

சிக்கு பெ. (n.) 1. எண்ணெய்ச்சிக்கு; stickiness of hair, due to oil. 2.சிக்குநாற்றம்; rancid smell of oil or ghee on clothes. சிக்குண்டாக்குதல்

வி. (v.) சிக்கு ஏற்படுத்துதல்; to cause to become entangled or ensued.

சிக்குவாங்கி பெ. (n.) மயிர்களின்

சிக்குகளை

எடுக்குங் கருவி;

ஒருவகைச் சீப்பு ; a kind of comb.

சித்தமருந்து

229

சிக்குவாங்குதல் வி. (v.) 1. மயிர் முதலியவற்றில் சிக்கெடுத்தல்; to disentagle. 2. முடிச்சவிழ்த்தல், தளர்த் துதல்; uravel.

சிக்கெடுத்தல் வி. (v.) சிக்குவாங்குதல்; பார்க்க. சிக்கெனப்பிடித்தல் வி. (v.) 1. உறுதி யாகப் பிடித்தல்; to catch firmly. 2. இறுக்கமாகப் பிடித்தல்; to catch tightly.

சிட்டாய்ப்பறத்தல் வி. (v) சிட்டுக்குருவி

போல விரைந்தோடிப்போதல்; torun or fly like a house sparrow.

சிட்டிகை பெ. (n.) I. கைத்தொடி; snap of the fingers. 2. கைந்நொடிப்பொழுது; moment, as measured by snap of the finger. 3. விரற்பிடியளவு; a pinch, as of snuff.

சிடுசிடுப்பு பெ. (n.) I. சினக்குறி; knitting the brow in anger, frowning. 2. காய்ச்சும் எண்ணெய்யில் நீரிருப்பதை உணர்த் தும் ஒலிக்குறிப்பு; onom, expr. of hissing noise.

சிடுமூஞ்சி பெ. (n.) கடுகடுத்த முகம்; flowning face.

சிணுங்குதல் வி. (v.) 1. மூக்காலழுதல்; to whine, whimper. 2. விட்டுவிட்டு மழை தூறுதல்; to drizzle intermittently. 3.கொஞ்சுதல்; to caress.

சித்தமருத்துவம் பெ. (n.) சித்தர்கள்

கையாண்ட மருத்துவ முறை; akind of healing art ascribed to šittar; sittar medicine.

212

சித்தமருந்து பெ. (n.) சித்த முறைப்படி மூலப்பொருள்களினின்று செய்யும் மருந்துகள்; medicines in sittar system are prepared from out of the mineral substances which are 212 in number.