பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230

சித்திரம்

சிந்திரம் பெ. (n.) 1. ஓவியம்; picture, painting. 2. சிறப்பு; excellence, 3. அழகு; beauty. 4. அணியழகு ; decoration. 5. ஒரு சிற்ப நூல்; a treatise on architecture.

சித்திரக்கவி பெ. (n.) நால்வகைப் பாக்களுள் சித்திரத்தில் அமைத்துப் பாடும் இறைப்பா;a variety of metrical composition filled into fanciful tigures,

one of nä

r-pā.

சிதறுதல் வி. (v.) 1. இறைத்தல்; to fall in different places. 2. சிறிய பொருள் களாய்த் தெரித்தல்; to be strewn in small particles. 3. சிறுதுண்டுகளாக உடைந்து போதல்; to be broken into pieces, to explode.

சிந்தனை பெ. (n.) 1. எண்ணம்; thought, idea. 2. படித்த பாடத்தை மீண்டும் Benardana; revision of lessons. 3. ஊழ்கம் (தியானம்) meditation. 4. கவலை; care, concem grief. சிந்தித்தல் வி. (v.) அறிவால் பகுத்துக் காணுதல்; think about.

சிந்துதல் வி. (v.) தண்ணீர், தவசம் முதலியவை பரவலாகக் கீழே விழுதல்; of water, grain, etc., spill

scatter water, etc.,

சிப்பம் பெ. (n.) I, பொட்டலம்; parcel. 2. சிறுமூட்டை; bundle. சிப்பி பெ. (n.) முத்து முதலியவை பொதிந்திருக்கும் ஓடு; shell; pearl

oyster.

சிரித்தல் வி. (v.) 1.ஒலியெழுப்பியோ முகக்குறிப்பின் மூலமோ பல் தெரிய உதடுகளை விரிப்பதன் மூலமோ மகிழ்ச்சி, ஏளனம் முதலியவற்றை வெளிப்படுத்துதல்; 2.மலர்தல்; to bloosom.

to

laugh.

சிராய்ப்பு பெ. (n.) பெரும்பாலும் தோலில் கரடு முரடான பரப்பு

கூர்மையான

அல்லது முனை; உராய்வதால் அல்லது தேய்ப்பதால் ஏற்படும் அழுத்தமான கீறல்; scratch. சிரிப்புக்காட்டுதல் வி. (v.) வேடிக்கை யான பேச்சு, செய்கை மூலம் சிரிப்பை உண்டாக்குதல்; சிரிக்க வைத்தல்; make laugh by mimicry, etc., சிரிப்பாய்ச்சிரித்தல் வி. (v.) I. இகழ்தல்; to laugh at. 2. நிலை கெட்டுத்திரிதல்; to lead a despicable life. சில்லறை பெ. (n.) 1. சிறுசிறு பகுதி

களாகக் கிடப்பவை; things scattered here and there in small quantities or amounts. 2. காசு (நாணயம்); change as of coin.

சில்லறைச்சாமாள் பெ. (n.) உதிரிப் பொருள், மளிகைப்பொருள்; sundry articles of commerce, as grain, etc.,

சில்லறைச்செலவு

பெ. (n.) சிறிய

தொகைக்கான செலவு; the non descriot petty expenses.

சில்லறைத்தனம் பெ. (n.) தகுதிக்குச் சற்றும் பொருந்தாது கீழ்த்தரச் செய்கை; meanness.

சில்லறைப்புத்தி பெ. (n.) 1. சிறுமைத் தனம்; silliness, mean mindedness. 2.கூடாவொழுக்கம்; adultery.

சில்லாக்கோல் பெ. (n.) எலி, பாம்பு போன்றவற்றைக் கொல்ல கூரான கொம்பு பொருத்தப்பட்ட மூங்கில் கழி; stick.

சில்லிக்கரண்டி பெ. (n.) மரம் அல்லது இரும்பினாலாகியதும், துளைகள் அமைத்ததும், நீர் வடிகட்டப் பயன் படுவதுமான சிறிய அகப்பை; a wooden or iron spoon with small holes for filtering.

சில்லு பெ (n.) 1. சிறுதுண்டு; small piece, as of broken glass. 2. ஒட்டுச்சீவை; small patch of cloth. 3. வட்டமானது; any thing flat and round. 4. உருளை; wheel, as of a

cā.