பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 அரப்பு அரப்பு பெ. (n.) இலுப்பைக் கொட் டையை அரைத்து எண்ணெய் எடுத்த பின் எஞ்சும் பிண்ணாக்கை அவித்துக் காயவைத்து, அரைத்துப் பெறும் தூள்; powdered oil cake of lluppa that is soaked, steamed and dried. அரம் பெ. (n.) இரும்பை அராவுவதற்குப் பயன்படுத்தும் முப்பட்டை முதலான வடிவங்களில் நெருக்கமான கோடு களைக் கொண்ட இரும்பால் ஆனசிறு கருவி; file. அரவணைத்தல் வி. (v.) அன்போடு அணைத்தல்; take some one in one's am with affection, protection; hug. அரவணைத்துக் கொண்டு போதல் வி. (v.) அன்பும் பரிவும் காட்டி நடத்தல்; carry on by being tolerant and willing to make concessions. *கழகத்திலுள்ள (சங்கத்தி லுள்ள) உறுப்பினர்களை அரவணைத் துப் போனால்தான் கழகம் நல்ல படியாக நடக்கும்'. அரவணைப்பு பெ. (n.) பாதுகாப்பு, தாங்கள்; protection, support. 'தந்தை இறந்து விட்டதால் தாயின் அரவணைப்பிலேயே வளர்ந்தவன்'. அரவம் பெ. (n.) I. ஆள், விலங்கு நடமாட்டத்தால் ஏற்படும் ஒலி; noise (made by the movement of human beings, animals). ஆள் அரவம் இல்லாத வீடு'. 2.பாம்பு; snake. 'அரவம் தீண்டி மரணமடைந்தார்'. அரவாணி பெ. (n.) உடல் அமைப்பைக் கொண்டு ஆண் என்றோ பெண் என்றோ விளக்க முடியாத மாந்தர்; transgender, third gender. அரவை பெ. (n.) அரிசி, கோதுமை போன்ற தவசங்களை மாவாகவும், யாகவும் அரைப்பது; milling (rice, dry chillies, etc.,) or husking paddy. அரளிச்செடி பெ. (n.) வழிபாட்டுக்குப் பயன்படும் கருஞ்சிவப்பு, இளஞ் சிவப்பு,மஞ்சள், வெள்ளை போன்ற நிறங்களில் பூக்கும் பூச்செடி; oleander (the flower and the plant). அரற்றுதல் வி. (v.) 1. துக்கம் தாங்காமல் புலம்பி அழுதல்; cry out in grief. அம்மா இறந்த துக்கத்தால் அரற்றியவண்ணம் இருந்தான்'. 2. மனக் குறைகளைக் கூறி வருத்தப் படுதல்; lament. 3, வலியால் முனகுதல், காய்ச்சல் முதலிய நிலைகளில் உளறுதல்; groan (with pain). அராவுதல் வி. (v.) ஒரு பரப்பை வழவழப்பாக்க அல்லது கூராக்க அரத்தால் தேய்த்தல்; file; file away . அரிச்சல் பெ. (n.) நமைச்சல் ஏற்படுதல்; itch. உடலெல்லாம் அரிக்கிறது. அரித்தல் வி. (v.) I. புழு, கறையான் முதலியன சிறிது சிறிதாகக் கடித்துச் சிதைவுபடுத்துதல்; of worms, ants, etc., eat away; gnaw away. 'கறையான் அரித்து மரக்கட்டை உளுத்துப் போனது.2.நீர்,காற்று,புளிமம் (அமிலம்) முதலியன ஒரு பொருளைச் சிறிது சிறிதாகக் கரையும்படி செய்தல்; erode; corode. மழை நீர் கரையை அரிக்காமல் மரங்களின் வேர்கள் தடுக்கின்றன.' 3. கவலை, துக்கம், வருத்துதல்; (of wonny) gnaw at (one's heart). பணத் தட்டுப்பாடு மனத்தை அரித்துக் கொண்டிருந்தது'. 4. சல்லடை முறம் போன்றவற்றைப் பயன்படுத்தி தவசங்களிலிருந்து தூசி, குப்பைகளைப் பிரித்தல்; sift out using (a winnowing pan, sieve, etc.,). மிளகாய் மல்லி போன்றவற்றைப் அரிதட்டு பெ. (n.) சல்லடை; fine sieve te பொடியாகவும், நெல்லை அரிசி (sift flour, grains, etc.,).