பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரிதல் வி. (v.) காய்கறி, பழம் போன்ற வற்றை சிறு சிறு துண்டுகளாக நறுக்குதல்; cut vegetables or fruits into pieces, chop up. 'கீரையை ஆய்ந்து அரிந்து வை. அரிது பெ. (n.) 1.எப்போதாவது ஒரு முறை காணக்கூடியது அல்லது நிகழக்கூடியது; that which is unusual; a rarity. 'வால் விண்மீன் (நட்சத்திரம்) அரிதாகத் தோன்றும்'. 2. வாய்ப்புக் குறைவு; being unlikely. அரிப்பு பெ. (n.) 1. அரிச்சல் பார்க்க. 2. அரிக்கப்படுவதால் ஏற்படும் சிதைவு; erosion. 'கடல் அரிப்பைத் தடுக்க முயற்சி மேற்கொள்ளப் படுகிறது. 3. விடாத தொல்லை; pestering. 'அவனுடைய அரிப்பைத் தாங்க முடியாமல் பணம் கொடுத்து விட்டேன். அரிவாள் பெ. (n.) பெரும்பாலும் மரக் கைப்பிடியோடு வளைவான வெட்டும் பரப்புடைய எஃகினால் ஆன கருவி; sickle. அரிவாள்மணை பெ. (n.) காய்கறி முதலியன நறுக்கப் பயன்படும் 'உ' போன்று வளைந்த தகட்டைக் கொண்ட சமையல் அறைக் கருவி; kitchen gadget with a curved blade fixed to a base and used for cutting vegetables etc., அருகதை பெ. (n.) தகுதி; competence, fitness. 'அவரைக் கூற உனக்கு அருகதை யில்லை'. அருகாமை பெ. (n.) அண்மை (அருகில்); proximity, neamess. 'ஊருக்கு வெகு அருகாமையில் ஒரு சிற்றாறு ஓடுகிறது. அருகுதல் வி. (v.) குறைதல்; become rare; dwindle. மரங்கள் வெட்டப்படு வதால், மரங்களின் எண்ணிக்கை அருகி வருகிறது'. அருமை பெ. 17 (n.) பண் அருங்காட்சியகம் பாட்டுக்கும் வரலாற்றுக்கும் சான்றாகும் பொருள்கள், அறிவியல் விளக்கப் பொருள்கள் முதலியன காட்சிக்காக வைக்கப்பட்டிருக்கும் இடம்; museum. அருணாக்கயிறு பெ. (n.) அரைஞாண் கயிறு பார்க்க. அருந்துதல் வி. (v.) I. குடித்தல்; drink. 2.உணவு உண்ணுதல்; (of food) eat, take, have. அரும் பெ.அ. (adj.) 1. அரிய; precious, valuable. 2. (இலக்கியத்தில்) எளிதில் புரிந்து கொள்ள முடியாத தாக இருக்கும்; (of literature) difficult to understand. அரும்பதவுரை பெ. (n.) இலக்கிய, இலக்கண நூல்களில் உள்ள கடினச் சொற்களுக்குத் தரப்படும் பொருள் விளக்கம்; the meaning of difficult words (in literary texts). அரும்பாடுபடுதல் வி. (v.) பெரு முயற்சி செய்தல்; make great effort, strive hard. அரும்பு பெ. (n.) மொட்டு ; bud of a flower. அரும்புதல் வி. (v.) 1. துளிர்த்தல்; bud, sprout. 2. புன்னகை மற்றும் வியர்வை முதலியன தோன்றுதல்; beg in to appear. அருமந்த பெ.அ. (adj.) விருப்பமான; dear, darling. 'அருமந்த பிள்ளை அவன்'. அருமருந்து பெ. (n.) மிகச் சிறந்த மருந்து; effective remedy. 'நோய்வாய்பட்ட போது என் குடும்பத்தாரின் அன்பு தான் அருமருந்தாக இருந்தது. அருமை பெ. (n.) I. பாராட்டும் படியானது, உயர்வாகச் சொல்லக் கூடியது; being praise worthy. 2. மதிப்பு, உயர்வு; value, worth.