பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 அரைஞாண்கயிறு அரைஞாண்கயிறு பெ. (n.) ஆண்கள் இடுப்பில் கட்டக்கூடிய கயிறு; thin cord wom around the waist by men and children. அல்லல் பெ. (n.) துன்பம்; trouble. அல்லாடுதல் வி. (v.) அலைதல்; to wander from place to place. 'அவன்தனியாளாக அல்லாடுகிறான். அல்லும்பகலும் வி.அ. (adv.) இடை விடாமல், எப்போதும்; night and day; always. 'அல்லும்பகலும் உழைத்து சம்பாதித்த காசு'. அல்லோலகல்லோலம் பெ. (n.) (பே.வ.) பலர் இருக்குமிடத்தில் ஏற்படும் பெரும் பரபரப்பு; பெருங் குழப்பம்; great commotion. தீ பற்றிக் கொண் டதும் அப்பகுதி ஒரே அல்லோல கல்லோலப்பட்டது'. அலக்கழித்தல் வி. (v.) அலைக்கழிப்பு பார்க்க. அலக்காக வி.அ. (adv.) சுமையைத் தூக்கும் சூழலில் மிகவும் எளிதாக, வருத்திக் கொள்ளாமல் ஈடுபடுவது; effortlessly. அலங்கமலங்க வி.அ. (adv.) அச்சத்தாலோ குழப்பத்தாலோ வருத்தப்பட்டு என்ன செய்வதென்று புரியாமல் விழிப்பது; confusedly not knowing what to do. அலசல் பெ. (n.) 1. அடர்த்தியின்மை, நெருக்கமின்மை ; sparseness. 'இப் புடவை ரொம்ப அலசலாயிருப் பதால் உடம்பு தெரியும்'. 2. பல்வேறு கூறுகளையும் உள்ளடக்கிய ஆய்வு; threadbare analysis. 'தேர்தல் முடிவு களைப் பற்றி ஓர் அலசல்'. அலசுதல் வி. (v.) 1. துணிகளை நீரில் இட்டு கசக்கிக் கழுவுதல்; to rinse as soaked cloth. 2. ஆராய்தல்; to analyse. அலட்டுதல் வி. (v.) வீண் பேச்சு பேசுதல்; to talk vainly or incessantly. அலம்புதல் வி (v.) கழுவுதல்; wash, clean. அலறுதல் வி (v.) அச்சத்தால் திடுமென்று கதறுதல்; to cry aloud due to sudden fright. அலுப்பு பெ. (n.) சோர்வு; tiredness. வேலை அதிகம் என்பதால் அலுப்பு தாங்க முடியவில்லை'. அலுவல் பெ. (n.) வேலை; work. பக்கத்து ஊருக்கு ஒரு அலுவலாகப் போய் வந்தேன். அலுவலகம் பெ. (n.) பணி செய்யுமிடம்; office. அலுவலர் பெ. (n.) பணி செய்பவர்; office staff. அலைக்கழிப்பு பெ. (n.) அலைச்சல், மனவருத்தத்தை முடிவெடுக்க இயலாத சிக்கல் போன்றவற்றால் நேரும் துன்பம்; hassle. வேலை தேடி சென்னைக்கு வந்ததில் அலைக் கழிப்புதான் மிச்சம். அலைச்சல் பெ. (n.) அலைந்து திரிகை; wandering. அலைபாய்தல் வி. (v.) நிலை கொள் ளாமல் தவித்தல்; waver; oscillate. கண் இடைக்கும் நேரத்தில் ஆயிரம் சிந்தனைகள் அலைபாய்கிறது'. 2.கூட்டம் திரண்டு வருதல்; (of crowd surge (up). அலைமோதுதல் வி. (v.) அலைபாய்தல்- 2 பார்க்க. அலைவரிசை பெ. (n.) 1. ஒலிபரப்புக் காகவோ ஒளிபரப்புக்காகவோ அலைநீளத்தின் அடிப்படையில் பல அலைகளை மின்காந்த அலைகளின் தொடர்/மேற்குறிப்பிட்ட முறையில் ஒலிபரப்பும் அல்லது ஒளிபரப்பும் அமைப்பு; (radio) frequency/(T.V.) channel.