பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவ்வப்போது வி.அ. (adv.) நேரம் கிடைக்கும்போதெல்லாம்; சில சமயங்களில்; from time to time; periodically. அவ்வளவாக வி.அ. (adv.) (எதிர்மறை வினைகளோடு மட்டும்) குறிப் பிட்டுச் சொல்லும் அளவுக்கு; much. அவநம்பிக்கை பெ. (n.) நம்பிக்கை யின்மை; disbelief. அவப்பெயர் பெ. (n.) நற்பேறின்மை; கெட்ட பெயர்; badname. அவிழ்த்துவிடுதல் வி. (v.) அளவுக்கு அதிகமாக (பெரும்பாலும் உண்மை அல்லாததை) வெளிப்படுத்துதல்; reel off (esp. untruth etc., அவிழ்தல் வி. (v.) கட்டு, முடிச்சு முதலியவை பிரிதல்; (of a knot, etc.) become untied, become loose. 'கூந்தல் அவிழ்ந்தது'. அவை பெ. (n.) I. அஃறிணைப் பொருள்களைச்சுட்டும் பெயர்; plural neutar distal pronoun they; those. 2.பலரும் கூடும் அரங்கம் (சபை); Assembly, Auditorium. அவைக்குறிப்பு பெ. (n.) தாடாளுமன்றம், சட்டமன்றம் போன்றவற்றின் கூட்டத்தில் நடந்த தீர்மானங்கள், பேச்சுகள் அடங்கிய தொகுப்பு; minutes of the proceedings in a legislative body. அவைத்தலைவர் பெ. (n.) மக்களவை, சட்டமன்றம் ஆகியவற்றின் நடவடிக் கைகளை நடத்தும் பொறுப்பு வகிப்பவர், அவைத்தலைவர் (சபாநாயகர்); speaker of parliament or of the state legislative assembly. அவையடக்கம் பெ. (n.) அவையில் தன்னை முதன்மைப்படுத்திக் கொள் ளாத பணிவு; modesty; humility (particularly in a gathering). அமுகல் 19 அழகு பெ. (n.) 1. கண்ணால், காதால், மனத்தால் துய்க்கும் மகிழ்ச்சி, இனிமை; beauty. 2. தகுதியான தன்மை; proper conduct. 3. ஒழுங்கு நிறைந்த தன்மை; systematic and orderly way, neatness. அழகுக்கலை பெ. (n.) உடலைப்பொலி வாக்குங் கலை; the art of beautician. அழகுகாட்டுதல் வி. (v.) நாக்கை நீட்டுதல், முகத்தைச் சுளித்தல் போன்ற செய்கையால் பழித்துக் காட்டுதல்; make faces at some one. அழகுநிலையம் பெ. (n.) ஒப்பனை செய்யுமிடம்; beauty parlour. அழிச்சாட்டியம் பெ. (n.) முரண்டு, ஒட்டாரம்; stubborn behaviour; obstinacy. அழித்தல் வி (v.) ஒரு வடிவத்திலிருக்கும் பொருளை மற்றொரு வடிவத்துக்கு மாற்ற உருச்சிதைத்தல்; reduce to basic material (in order to make something new). அழிதல் வி. (v.) 1. சிதைதல், கெடுதல்; to decay, to be mutilated, to collapse. 2.மனந்தளர்தல், மனமுடைதல்; to be disheartened. களை அழிப்பான் பெ. (n.) எழுதியதை அழித்து மீண்டும் எழுதுவதற்கும், எழுத்து அழிக்கப் பயன்படும் தொய்வை (ரப்பர்) துண்டு; eraser. அழிவு பெ. (n.) சீர்குலைவு; destruction, ruin. 'பலத்த மழையால் பயிர்கள் அழிவுக்கு உள்ளாயின. அழுக்காகுதல் பெ. (v.) உடை, உடல் முதலியவற்றில் சேரும் தூய்மைக் கேடு; dirt on clothes, body, etc., அழுகல் பெ. (n.) பழம், முட்டை, காய் முதலிய பொருள்களின் தன்மை