பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232

சிறப்பாசிரியர்

2.கடவுளர்; Gods. 3. உறவினர்; relatives. 4. துறந்தோர்; ascetics. சிறப்பாசிரியர் பெ. (n.) I. பத்திரிகையின் குறிப்பிட்ட இதழை மட்டும் தொகுத்து வெளியிடும் பொறுப்பை ஏற்பவர்; guest editor of a joumal. அழைப்புக்கு இணங்கிப் பெருமைப்படுத்தும் வகையில் ஆசிரியராக இருப்பவர்; honorary editor.

2.

சிறப்பு பெ. (n.) 1. சிறந்த முறையில் அமைந்திருப்பது; excellent. 2. தனித் தன்மை ; தனித்துவம்; excellence; outstanding quality. 3. பெருமை, புகழ், மதிப்பு; renown; esteem. சிறப்புச்செய்தல் வி. (v.) 1.ஒப்பனை செய்தல், அழகுபடுத்துதல்; to embellish. 2. வரவேற்று முகமன் கூறுதல், விருந்தோம்பல்; to welcome show hospitality.

சிறப்புத் தமிழ் பெ. (n.) 11, 12ஆம் வகுப்புகளில் எல்லோருக்கும் பொது வாக உள்ள தமிழ்ப் பாடம் அல்லாமல் மாணவர் விருப்பப் பட்டுத் தேர்ந்தெடுக்கும் மற்றொரு தமிழ்ப் பாடம்; advanced Tamil, an optional subject for higher secondary students.

சிறப்புப் பெயர் பெ. (n.) பண்பு, குணம், செயல் முதலிய சிறப்பால் பெறுகிற பெயர்; appellation; descriptive name. சிறப்பு விருந்தினர் பெ. (n.) ஒரு நிகழ்ச்சியைச் சிறப்பிப்பதற்காக அல்லது நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றுவதற்காக அழைக்கப்படுபவர்; guest of honour,

சிறப்பு ழகரம் பெ. (n.) ல, ள என்னும் ஒலிகளிலிருந்து வேறுபடும் ழ'

சிறார் பெ. (n.) சிறுவர்கள்; children. சிறிது பெ. (n.) உருவம், வடிவம் போன்றவற்றில் குறைந்த அளவைக் கொண்டது; (of size, quantity) small. சிறுகதை பெ. (n.) பெரும்பாலும் ஒரு மையக் கருவை அல்லது பட்டறிவைக் கதையாக உரைநடையில் எழுதும் ஓர் இலக்கிய வகை; short story. சிறுகிழங்கு பெ. (n.) உணவாகப் பயன் படும் பழுப்பு நிறத்தில் உருண்டை யாக இருக்கும் ஒருவகைக் கிழங்கு;a variety of yam.

சிறுகீரை பெ. (n.) சமையலில் பயன்படும்

குறைந்த நீளமுள்ள தண்டையும் சிறுசிறு இலைகளையும் கொண்ட ஒருவகைக் கீரை; a kind of greens. சிறுகுடல் பெ. (n.) இரைப்பை முதல்

பெருங்குடல் வரையுள்ள உணவுக் குழாயின் பகுதி; small intestine. சிறுசு பெ. (n.) (பே.வ.) 1. சிறிது; small in size. 2. சிறுகுழந்தை;kid. சிறுசேமிப்பு பெ. (n.) வைப்பகத்திலோ அஞ்சலகத்திலோ தொகை குறை வாக இருந்தாலும் அவ்வப்போது செலுத்திச் சேமிக்கும் முறை; small savings scheme offered by a bank or post office.

சிறுக்கி பெ. (n.) இழிநடத்தையுடை யவள்; woman of meniel behaviour. சிறுதானியம் பெ. (n.) சோளம், தினை, வரகு போன்ற புன்செய் நிலத் தவசங்களில் ஒன்று; millets.

சிறுதெய்வம் பெ. (n.) சிற்றூர் தெய்வம்; village deity.

சிறுதொழில் பெ. (n.) குறைந்த அளவில் முதலீட்டையும் ஊழியர்களையும் கொண்டு நடத்தப்படும் தொழில்; small scale industry.

என்னும் ஒலி; the sound 'ழ' which is சிறுநீர் பெ. (n.) 1. மூத்திரம்; urine.

unique to the Tamil language.

2. குறைந்த அளவு நீர்; little water.