பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுருள்பாக்கு பெ. (n.) கொட்டைப் பாக்கி லிருந்து எந்திரத்தால் சுருளாகச் சீவப்பட்ட பாக்கு; dried shavings of


areca-nut.

சுருள்பூச்சி பெ. (n.) நிலக்கடலைச் செடியை அரித்துக் கெடுக்கும் இலைப்பூச்சிவகை; insect which blight groundnut plant.

சுரை பெ. (n.) 1. சுரக்கை; streaming, flowing, as of milk. 2. பெற்றம் முதலியவற்றின் மடி; udder, teat of cow and other animals. 3. ஒருவகைக் கொடி; calabash, climber. சுரைக்காய் பெ. (n.) வயிற்று வலியை ஆற்றுவதும், நுண்ணுயிரிகளை அழிப்பதும், உருண்டையானதடித்த அடிப்பகுதியையும் சிறுத்த மேற் பகுதியையும் உடைய வெளிர்பச்சை நிறக்காய்; fruit of bottle gourd which reduces the stomach pain, kills germs. சுவடி பெ. (n.) 1. ஏட்டுப் புத்தகம்; ölai book.2.பொத்தகம்; book in general. 3.பழங்காலத்தில் எழுத்தாணியால் எழுதி வைப்பதற்குப் பயன்படுத் தப்பட்ட சற்று நீளமான, அகலக் குறைவானபனை ஓலை ஏடு; palmlcaf used for writing.

சுவடியியல் பெ. (n.) சுவடிகளைப் படித்தல், படியெடுத்தல், பாது காத்தல், பதிப்பித்தல் ஆகியவற்றைக் குறித்து கற்றுக்கொடுக்கும் துறை; the discipline of studying and preserving palm leaf manuscripts, manuscriptology. சுவடு பெ. (n.) I. அடித்தடம்; track; foot stop. 2. அடையாளம்; sing, indication. சுவர் பெ. (n.) மேற்கூரையைத் தாங்கி நிற்பதற்கோ, காப்பு ஏற்படுத்து வதற்கோ, அறைகள் ஆக்குவதற்கோ எழுப்பப்படும் தடுப்பு; wall. சுவர்க் கடிகாரம் பெ. (n.) சுவரில் மாட்டக்கூடிய பொழுது காட்டும் கருவி (கடிகாரம்); wall clock.

சுழல்

239

சுவர்க்கோழி பெ. (n.) பெரும்பாலும் பார்வையில் படாமல் இருப்பதும் சுவர் இடுக்கில் வாழ்வதும், நீண்ட நேரம் ஒலி எழுப்பக்கூடியதுமான சிறிய பழுப்பு நிறப்பூச்சி; cricket. சுவர்மாடம் பெ.(n.) I. சுவர்ப்புரை; niche, vaulted recess in house walls.

2.மாடக்குழி ;

aplaned niche on the wall intenden to light a small lamp for the sake of light - worship and forefather'

s - worship.

சுவரொட்டி பெ. (n.) 1.பலரும் பார்க்கக் கூடியதாகச் சுவர்களில் ஒட்டப்படும் படம், விளக்கம் முதலியவை அச்ச டிக்கப்பட்ட அல்லது எழுதப்பட்ட பெரிய அளவிலானதாள்;

wall-poster. 2.ஆட்டின் மண்ணீரல்; spleen of goat. சுவரோவியம் பெ. (n.) பெரும்பாலும் கோயில், அரண்மனை போன்ற வற்றின் சுவர்களில் பயிரிச் (தாவரச்} சாயங்களைப் பயன்படுத்தி வரையப் பட்ட ஓவியம்; mural painting.

கவை' பெ. (n.) 1. சுவையறிதல்; to taste. 2.உண்ணுதல்; to eat, chew, suck. 3. முத்தமிடுதல்; to kiss. சுவை? பெ. (n.) I. சுவையும் மணமும்; taste and flavour. 2. இனிமைத்தன்மை; sweetness. 3. இனிமையானது; that which is pleasing or gratifying to the senses. 4. புலன்களுள் நாவின் உணர்வு;

the sense of taste one of ai-

m- pulan. 5. அறிவால் உணரப்படும் மெய்ப்பாடு; taste which is understand by brain.

சுவைஞர் பெ. (n.) இலக்கியம், கலை ஆகியவற்றை ஆழ்ந்து நுகரும் பண்புடையவர்; connoisseur of

literature.

சுழல்' பெ. (n.) ஒரு பொருள் அதன் அச்சில் வட்டமாகவும் தொடர்ச்சி