பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240

சுழல்"

யாகவும் ஒரேதிசையில் இயங்குதல்; சுற்றுதல்; whirl; rotate. 2. சுற்றித் திரிதல்; to roam, wander. 3. மனங் கலங்குதல்; to be agitated troubled, distressed in mind.

சுழல்' பெ.(n.) ஆற்றில் அல்லது கடலில் குறிப்பிட்ட பகுதியில் நீர் சுழன்று சுற்றியுள்ள பொருள்களை உள்ளி ழுத்துக்கொள்ளும் வகையில் விசை யுடன் சுழலும் நிலை; whirlpool;

vortex.

சுழல்காற்று பெ. (n.) பெரும்பாலும் நிலத்தில் அல்லது பாலைவனத்தில் உருவாகும் புழுதி பறக்கச் சுழன்று சுழன்று வீசும் காற்று; whirl wind. சுழல் துப்பாக்கி பெ. (n) ஒரு கையில் வைத்துக்கொண்டு சுழன்று சுட ஏதுவாக உள்ளதும் ஒன்றுக்கு மேற்பட்ட குண்டுகளைப் போடக் கூடியதுமான ஒரு வகைத் துமுக்கி;

revolver, machine-gun. சுழல் நாற்காலி பெ. (n.) சுற்றிடும் நாற்காலி; rotating chair.

சுழல் முறை பெ. (n.) (தலைமைப் பதவிக்கான அமர்த்தத்தின்போது) குறிப்பிட்ட காலத்திற்கு ஒருவர், பிறகு மற்றொருவர் என்னும் அடிப்படை; (of appointment) rotation.

சுழலி பெ. (n.) மின்னாக்கிச் சக்கரத்தைச் சுழல வைப்ப தற்கான எந்திரம்;

turbine.

சுழற்சி பெ. (n.) 1. ஒன்றை அச்சாக அல்லது (மையமாகக்) கொண்டு சுழலும் நிலை; rotation. 2. ஒரே வரிசையில் அல்லது குறிப்பிட்ட கால

இடைவெளியில் திரும்பத் திரும்ப

நிகழ்வது அல்லது செய்வது; cycle. சுழற்பந்து வீச்சு பெ. (n.) ஆடுகளத்தில்

பட்டு எழும்போது இடது பக்கமோ

திசைமாறிச்

செல்லும்

சற்றுத் வகையில் சுழலுமாறு பத்து வீசும் முறை; spin bowling.

சுழற்றி பெ. (n.) 1. சுழற்றுகருவியின் கைப்பிடி; handle, as of a spinning wheel. 2. துளையிடுங்கருவி; brace and bit. சுழற்றுதல் வி. (v.) 1. ஒன்றைச் சுழலச் செய்தல்; சுற்றுதல்; swing around; swirl (of telephone) dial. 2. சுற்றி வீசுதல் அல்லது ஆட்டுதல்; brandish. கழித்தல் வி. (v.) I. குறிப்பிட்ட எழுத்து களில் வட்டமான குறி போடுதல்; make a circle. 2. அலையச் செய்தல்; to cause to roam. 3. சினத்தல்; to be angry. 4.மறைத்தல்; to conceal, deposit, to

hide.

சுழிக்காற்று பெ. (n.) சூறைக்காற்று;

whirl - wind.

சுழியம் பெ. (n.) எண் வரிசையில்

எண்மதிப்பற்ற எண்; zero.

சுழியன் பெ. (n.) I. ஏமாற்றுப் பேர்வழி; deceiver. 2.இனிப்புப் பண்ட வகை; deep fried round sweet with a filling of coconut and jaggery.

சுழியோடு வி. (v.) I. முக்குளித்தல்; to dive into water. 2. மனத்தை ஆராய்தல்; to study one's mind.

கள்ளி பெ. (n.) உலர்ந்த சிறு குச்சி; dry twig.

சுள்ளெறும்பு பெ. (n.) செந்நிறக் கொள்ளியெறும்பு; a species ofred ant.

களகு பெ. (n.) வாய்ப்பகுதி குறுக லாகவும் கீழ்ப்பகுதி அகலமாகவும் இருக்கும்படி ஓலை முதலிய வற்றால் பின்னப்பட்ட முறவகை; a kind of winnowing fan for separating chaff from grain.

களித்தல் வி. (v.) முகத்தை சுருக்குதல்;

சுழித்தல்; screw one's face. களிரென்று வி.அ. (adv.) வலி, வெயில்

முதலியவை உடலைத் தாக்கும்