பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242

சுற்றுச்சூழல்

சுற்றுச்சூழல் பெ. (n.) உயிரினங்கள் வாழும் பகுதியில் உள்ள காற்று, நீர் போன்றவை அடங்கிய இயற்கைச் சூழ்நிலை; environment.

சுற்றுதல் வி. (v.) 1. சுழன்று செல்லுதல்; to revolve, circulate, tum around spin, whirl. 2. அலைதல்; to move here and there, roam, wander about. 3. வளையக் கட்டுதல்; to coil up, as rope. 4.கிறு கிறுத்தல்; to begiddy, dizzy. 5. மனங் கலங்குதல்; to be perplexed with difficulties.

சுற்றுப்பயணம் பெ. (n.) 1. அதிகார முறையில் அதிகாரிகள் பலவூர் களுக்கும் சென்று வருகை; circuit, tour, as of an officer. 2. பணிநிமித்த மாகவோ, கல்வி தொடர்பாகவோ பல ஊர்களுக்கும் சென்றுவரல்; tour according to duty or education.

சுற்றுப்பாதை பெ. (n.) I. சுற்றுவழி; நேரற்ற பாதை; way which is not short cut. 2. மாற்றுவழிப்பாதை;

by-pass. சுற்றுப்புள்ளி பெ.(n.) கோலம் போடத் தொடங்கும்போது அதன் வெளி எல்லையைக் கணிக்க வைக்கப்படும் புள்ளி ; dots marking the outer limits. சுற்றுப்புறம் பெ. (n.) I. அயலிடம்; adjacent place, neighbourhood, vicinity. 2. குறிப் பிட்ட இடத்தை ஒட்டியுள்ள அல்லது சார்ந்த பகுதி; surroundings. சுற்றுமுற்றும் கு.வி.எ. (adv.) நான்கு பக்கமும்; சுற்றிலும்; on all sides; all around.

சுற்றுலா பெ. (n.) பொழுதுபோக்காக மேற்கொள்ளும் சுற்றுச் செலவு; tour,

excursion.

சுற்றுலாத்தளம் பெ. (n.) சுற்றுலா மேற்கொள்ளுமிடம்; place of tourist

importance.

சுற்றுலாத்துறை பெ. (n.) சுற்றுலா மேற்கொள்ளும் அயல்நாட்ட வரையும் உள்நாட்டவரையும் ஆற்றுப் படுத்தும் ஓர் (அரசுத்) துறை; a department intended to increase the tourism from the people as well as foreigners.

சுற்றுலாமாளிகை பெ. (n.) சுற்றுலாச் செல்வோர் தங்கும் விடுதி, விருந்தினர் விடுதி; tourist lodge or hotel government's guest house. சுற்றுலாவிடுதி பெ. (n.) சுற்றுலா மாளிகை

பார்க்க.

சுற்றுவட்டப்பாதை பெ. (n.) (விண் வெளியில்) ஒரு கோள் அல்லது செயற்கைக்கோள் சுற்றி வரும் நீள்வட்டப் பாதை; orbit. சுற்றுவட்டாரம் பெ. (n.) சுற்றுப்புறச் சிற்றூர்கள்; surrounding country or villages.

சுற்றுவழி பெ. (n.) தேரற்ற பாதை; round

about or circuitous way, indirect course. சுற்றுவாடை பெ. (n.) சுற்றுப்புறம்; அண்டை அயல் பகுதிகள்; nearby places.

சுற்றுவீதி பெ. (n.) கோயிலைச்சுற்றியுள்ள தெரு; streets surrounding a temple. சுற்றுவேலை பெ. (n.) பெரும்பாலும் வீட்டில் முகாமையான வேலை களோடு தொடர்புடைய சிறு சிறு வேலைகள்; odd jobs.

சுறட்டன் பெ. (n.) தொந்தரைக்காரன்; a obstinate person one who creates trouble. சுறட்டுக்கோல் பெ. (n.) துறட்டுக் கோல்; an iron crook.

சுறட்டுப்பிடி பெ. (n.) (பிடிவாதம் பிடித்தல்)

முரட்டுத்தனம்; stubbomess, obstinacy.

சுறா பெ. (n.) பல வரிசைகூரிய பற்களைக் கொண்டதும் உருவத்தில் பெரியதும் வலிமை மிக விரைவாக