பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244

சூடுகொடுத்தல்

சூடுகொடுத்தல் வி. (v.) (ஒருவருக்குத் திருப்பியடி கொடுக்கும் வகையில்) காட்டமாகப் பேசுதல் அல்லது எழுதுதல்; admonish severely; give someone a dressing down.

சூடுசுரணை பெ. (n.) உணர்ச்சி; feeling or sensibility.

சூடுதல் வி. (v.) 1. அணிதல்; to wear, especially on the head. 2. பெயர் முதலியன சூட்டிக்கொள்ளுதல்; to be

invested as with a title.

சூடுபறக்கத் தேய்த்தல் வி. (v.) உடம்பில் மருந்தெண்ணெய் பூசிச் சூடு உண்டாகும்படி தேய்த்தல்; nubbing with hand forcibly after apply ing ointment to the affected part so as to create heat,

சூடுபிடித்தல் வி. (v) தொழில் ஏரணம், (விவாதம்) முதலியவை விரைவு அடைதல்; (of business, discussion)

warm up; pick up. 'நண்பர் வந்த பிறகுதான் (விவாதம்) ஏரணம் சூடுபிடித்தது'.

சூடுபோடுதல் வி. (v.) பழுக்கக் காய்ச்சிய கம்பியை அல்லது எரியும் கட்டையை (தோல் வெந்துபோகும் படி) உடம்பில் வைத்து எடுத்தல்; brand;

cauterize.

சூடுமிதித்தல் வி. (v.) மாடுகளைக்

கொண்டு கதிர்ச்சூடடித்தல்; thresh paddy by beating or walking bullocks over the sheaves.

சூடேற்றுதல் வி. (v.) ஒருவரை சின மடையச் செய்தல்; provoke; incense. சூத்தை பெ. (n.) கெட்டுப்போனது ; சொத்தை; of fruits rotten; of tooth decayed.

சூதாட்டம் பெ. (n.) 1. சூதாடுகை; gambling. 2. நுண்ணுத்தி (சூழ்ச்சி}, கரவு; trick.

சூதாடி பெ. (n.) சூதாடுவோன்; gambler. சூதாடுதல் வி. (v.) பணம்; பொருள் ஈடாக வைத்து ஆடுதல்; gamble by betting money or materials. சூதானம் பெ. (n.) பாதுகாப்பு; safe. சூது பெ.(n.) 1. ஏமாற்றுகை; cheat. 2. சூதாட்டம்; gambling. 3. வெற்றி; victory, success. 4. நுண்ணுத்தி (சூழ்ச்சி); trick.

சூதுவாது பெ. (n.) கள்ளங்கபடம்; guile; cunning.

சூப்பி பெ. (n.) 1. குழந்தைகள் வாயில் வைத்துச் சுவைத்தற்கு முலைக்காம்பு போல் அமைந்த குமிழ்; artifical nipple for a child to suck. 2. கைவிரலைச் சப்பும் சிறுகுழந்தை; a child sucking its finger.

சூப்புத்தடி பெ.(n.) குச்சியில் செருகி யிருக்கும் ஒருவகை இனிப்புப் பண்டம்; a variety of candy.

சூப்புதல் வி. (v.) சப்புதல்; to suck, sip.

சூம்பு பெ. (n.) 1. கை, கால் முதலிய உறுப்புகள் நோய் கரணியமாக மெலிதல்; of limbs be or become thin. 2. முகம் வெறுப்பின் கரணியாகச் சிறுத்தல்; சுருங்கிப் போதல்; offace be

shrunk.

சூரப்புலி பெ. (n.) அஞ்சா மறவன்; dauntless hero, generally used in contempt.

சூரன் பெ. (n.) 1. திறமை படைத்தவன்; extraordinarily smart person. 2.நெருப்பு; fire. 3. அரிமா; lion. சூரிக்கத்தி பெ. (n.) கூர்மையான ஒருவகைக் கத்தி; a kind of sharp knife. சூல் பெ. (n.) 1. கரு; conception, pregnancy.

2. முட்டை; egg. 3. முகில் நீர் நிரம்பியிருக்கை; wateriness of clouds. சூலம் பெ. (n.) நீண்ட மாழைத் தண்டின் நுனியில் மூன்று கூரிய முனைகளை உடைய வேல்; trident.