பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256

தட்டிக்கழித்தல்

தட்டிக்கழித்தல் வி. (v.) பணியை முடிக்காமல் சாக்குப்போக்குச் சொல்லுதல் ; to give lame excuses. தட்டிக்கொடுத்தல் வி. (v.) 1. ஊக்கப் படுத்துதல்; to cheer, encourage, urge on, as by patting. 2. ஒருவர் மீது தட்டிக் குறிப்புக் காட்டுதல்; to indicate or betray a person by taping him. தட்டிப்பறித்தல் வி. (v.) I. அடித்துப் பிடுங்குதல்; to rob by force. 2.கவர்ந்து செல்லுதல்; to snatch away. தட்டிப்பார்த்தல் வி. (v.) தேங்காய், சுட்ட பானை முதலியவற்றைச் சுண்டிப் பார்த்து வரும் ஒலியிலிருந்து அவற்றின் இயல்பை அறிதல்; to test the soundness, as of coconut or genuineness, as of coin, by tapping or flipping with the fingers.

தட்டிப்புடைத்தல் வி. (v.) முறத்தாற் கொழித்து நெல், பதர் முதலிய வற்றைப் பிரித்தெடுத்தல்; to separate grain from chaff by winnowing. தட்டிப்போடுதல் பெ. (n.) இடித்து அல்லது நசுக்கிப்போடுதல்; stricking or pounding flat and putting as drugs to

prepare decoction. தட்டியழைத்தல் வி. (v.) தொலைவில் உள்ளவரைத் தட்டிக் கூப்பிடுதல்; to

call by clapping the hands. தட்டியளத்தல் வி. (v) தலையை வழித்துக் கூலம் முதலியவற்றை அளத்தல்; to measure grain, etc., stricking off the


heaped-up part at the top of a measure. தலை தட்டி மூன்று படி நெல் போடு. தட்டியெழுப்புதல் வி. (v.) தூங்குகிற வனைத் தட்டியெழுப்புதல் ; to make a sleeping man rise by tapping him. தட்டியோட்டுதல் வி. (V) மாட்டையடித்து வண்டியை விரைவாகச் செலுத்துதல்; to drive bullocks by beating.

தட்டுக்கூடை பெ. (n.) அகன்ற கூடை வகை; broad, shallow basket. தட்டுப்பலகை பெ. (n.) 1. இளகியத்

தரையைக் கெட்டிக்குங்கட்டை; rammer plank. 2. கூரை வீடுகளில் கூரை வேயும்போது, தட்டையைச் சரி செய்யப் பயன்படும் மரப்பலகை; a. wooden plank used for levelling hay. தட்டுப்பாடு பெ. (n.) போதுமான அளவிற் குறைவு; shortage. தட்டுமாற்றுதல் வி. (v.) 1. பட்டிழை அணியம் செய்யும்போது அல்லது பட்டுப்பூச்சி வளர்ப்பின்போது,

தட்டைத் தூய்மை செய்து மாற்றுதல்; to clean the plate in sericulture. 2. LDGMT உறுதியின்போது இரு வீட்டாரும் பழத்தட்டை மாற்றி இசைவு தெரிவித்தல்; exchange of fruit trays at the time of marriage fixation by the two families.

தட்டைக்கரும்பு பெ. (n.) சுவையற்ற கரும்பின் மேற்பகுதி; tasteless upper part of sugarcane.

தட்டைப்புழு பெ. (n.) உண்ணும் இறைச்சி மூலம், மாந்த உடலினுள் சென்று வாழும் ஒருவகைப் புழு;

tape - wom. தட்டோடு பெ. (n.) கூரையை மூடுமாறு இடும் வளைவுள்ள ஓடு; common country tile.

தட்பவெப்பநிலை பெ. (n.) ஒரு பகுதியில்

நிலவும் வெப்பம், காற்று, குளிர் முதலியவற்றின் நிலை; climate, climatic

condition.

தட்பவெப்பமாற்றம் பெ. (n.) பருவ நிலையில் ஏற்படும் மாறுபாடு ; climatic change.

தடகளப்போட்டிகள் பெ. (n.) தடங்களின் வழியாக நடத்தப்படும் போட்டிகள்; track and field events.

தடநார் பெ.(n.) பனையேறிகள் காலில்

மாட்டிக்கொள்ளும் பனைநாரினாற்