பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262

தமுக்கடித்தல்

தமுக்கடித்தல் வி. (v.) தமுக்கு என்னும் பறையைச் சாற்றிச் செய்தி அறிவித்தல்; to tom tom, publish orders by beat of drum.

தமுக்கு பெ. (n.) செய்தி தெரிவிக்க முழக்கும் ஒரு கட்பறை; a musical instrument in use for collecting people to pass on a message. தமுக்குப்போடுதல் வி. (v.) செய்தி கூறுவதற்காக மக்களைத் திரட்ட, தமுக்கு என்னும் ஒரு கட்பாறையில், ஒலி எழுப்புதல்; to raise sound by beating the tamukku to collect people for propagation of a news. தயிர் பெ. (n.) பால் உறைவிட்ட பின்னர் உறைந்த பண்டம்; curds, tyre.

தயிர்வடை பெ. (n.) தாளித்த தயிர் ஊறிய வடை; cake of blackgram pulse soaked

in curds.

தரகர் பெ. (n.) தரகு வேலை செய்பவர்; commission agent.

தரகுக்கூலி பெ. (n.) தவசம் வாங்கு வோன், அளப்பவனுக்கு வழங்கும் கூலி; wages for a person who measures the grain in a sale. தரப்படிக்கணக்கு பெ. (n.) சிற்றூர் நிலங்களின் தகுதி, விளைச்சல், இறையிலி, வரி முதலியவற்றைக் குறிக்கும் கணக்கு; account of the village lands distinguishing the varieties of soil, produce and tenure, and the ancient dues

தரைச்சக்கரம் பெ. (n.) தரையில் சுழலும் ஒருவகை வெடி; a cracker with a knob that spins on the floor.

தரைத்தளம் பெ. (n.) முதல்தளம்;

ground- floor.

தரைதட்டுதல் வி. (v.) கப்பல் தரையில் மோதுதல்; to run a ground, as a ship. தரைப்பங்கு பெ. (n.) விளைச்சலில், நில உரிமையாளனுக்குரியது; owner's share in the produce.

தரைப்பாலம் பெ. (n) (ஆற்றின் குறுக்கே தாழ்வான பகுதியில்) தண்ணீர் போவதற்கு ஏதுவாகப் பெரிய குழாய்களைப் பதித்து, அவற்றின் மேல் தரை மட்டத்திலேயே அமைக்கப்படும் சாலை; causeway. தரைமட்டம் பெ. (n.) கட்டுமானக் காலங் களில், கட்டங்களின் சுற்றுப்புறத்தில் அமையும் புதிய மட்டம்; newly designed ground level around newly constructions.

தரையிறங்குதல் வி. (v.) வானூர்தி ஓடு தளத்தில் இறங்குதல்;

to land touch - down (of planes).

தரையோடு பெ. (n.) தரையிற் பாவுதற் குரிய ஓடு; flooring tiles. தலக்காவல் பெ. (n.) கொள்ளைக் காரர்களுக்கு இடங்கொடாது செய்யும் நாட்டுக்காவல்; system of guarding a tract of country.

and perquisities ofthe village office and தலகாணி பெ. (n.) தலையணை; pillow.

servants.

தரிசு பெ.(n.) பயிரிடப்பெறாத நிலம்; land lying waste or fallow. தருக்கம் பெ. (n.) சொற்போர்; controversy, dispute, logic, contention, wrangling.

தரைக்காற்று பெ. (n.) தரையிலிருந்து கடல் நோக்கி வீசுங்காற்று;

land -

breeze, as dist. from sea breeze.

தலபுராணம் பெ. (n.) புனை கதைகள் மூலம் ஊர்ப்பெருமைகளையும், வரலாற்றுச் சிறப்புகளையும் கூறும் நூல். இது பெரும்பாலும் கோயில் சார்ந்ததாக அமையும்; literature to adore a place, particularly temple towns, with imaginative historical fame.

தலம் பெ. (n.) 1. இடம்; place, site. 2. வணங்கும் தூய இடம்; sacred place, shrine.