பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266

தலைமடங்குதல்

தலைமடங்குதல் வி. (v.) கதிர் முதலியன விளைந்து சாய்தல்; to bend, bow, as ears of grain.

தலைமடை பெ. (n.) நீர்ப்பாசனம் தொடங்கும் முதல் மடை; course ofa channel where irrigation first begins. தலைமதகு பெ. (n.) ஏரி, கால்வாய் முதலியவற்றிலிருந்து தண்ணீர் திறந்துவிடுவதற்கான கதவுள்ள, கட்டுமானம்; head sluice provided in the tanks and channel to let out water

for irrigation, which has control to regulate supply of water. தலைமயிர்வாங்குதல் வி. (v) கைம்பெண் தலைமயிரை முதலில் எடுப்பித்தல்; to shave a womans head for the first time on her widowhood. தலைமழித்தல் வி. (v.) மொட்டை யடித்தல்; to tonsure. தலைமறைதல் வி. (v.) I. ஒளித்துக் கொள்ளுதல்; to be concealed, 2.மறைந்துபோதல்; to abscond. தலைமறைவாகுதல் வி. (v.) ஒனித்து வாழுதல்; to go underground or into hiding abscond.

தலைமறைவு பெ. (n.) (காவல்துறை யினரால் அல்லது எதிரிகளால் தேடப்பட்டு வரும் ஒருவர் அல்லது அரசால் தடை செய்யப்பட்ட இயக்கம்) கமுக்கமாகச் செயல் படுகை; (bcing secret of organization). தலைமாடு பெ. (n.) படுக்கையில் தலைப்பக்கம்: head of a bed. தலைமாணாக்கன் பெ. (n.) முதல் மாணவன்; ideal pupil. தலைமாந்தநோய் பெ. (n.) தலை, கழுத்து, வீங்கி உடலில் வலியை உண்டாக்கும் செரியாமை நோய்; a kind of dyspepsia attended with swelling of the head and the neck and pain all over the body.

தலைமுடி பெ. (n.) 1. தலையினுச்சி; எrown of the had. 2. தலைச்சிகை; lock ofhair. தலைமுழுக்கு பெ. (n.) 1. மெய்முழுதுங் குளிக்கை; bathing head and all. 2. எண்ணெய்முழுக்கு; bathing with; oil. தலைமுழுகாமலிருத்தல் வி. (v.) கருப்பமாயிருத்தல்; to be pregnant. தலைமுழுகுதல் வி. (v.) 1. உறவை வெட்டிக்கொள்ளல்; to server one's connection with, as a relative. 2. கைவிடுதல்; to give up as irrecoverable, as a loan.

தலைமுறை பெ. (n.) கால்வழி, வழிவழி; generation, lineal descent,

தலைமை பெ. (n.) அதிகாரங்கள் நிறைத்த முதன்மைப் பணியாளர்; leadership. தலைமை உரை பெ. (n.) கூட்டத்திற்குத் தலைமை தாங்குபவர் நிகழ்த்தும் உரை; address of the president.

தலைமைச் செயலகம் பெ. (n.) அரசின் முதன்மை அலுவலகம்; head quarters,

secretariat.

(V.) தலைமைதாங்குதல் வி. (vi) வழிநடத்தும் பொறுப்பேற்றல்; preside over. தலைமையாசிரியர் பெ. (n.) பள்ளிக்குத் தலைமையேற்பவர்; headmatr, தலையங்கம் பெ. (n.) 1, செய்தித்தான் ஆசிரியர் எழுதுங்கட்டுரை; (editorial); leader, leading article, prevailing immediately after the harvest. 2. செய்தித் தாளின் தலைப்பில் செய்திகளைக் குறிப்பாக எடுத்துக்காட்டும் செய்திச் சுருக்கம்; heading, headline. தலையடிநெல் பெ. (n.) நெற்கதிரின் முதலடி நெல் (நெல்லை); paddy obtained at the first threshing of sheaves, considered superior.

தலையணி பெ. (n.) 1. தலைப்பாகை; head dress. 2. தலைக்கவசம்; helmet.