பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலையணை பெ. (n.) தலைவைத்துப் படுப்பதற்குப் பஞ்சு முதலியன அடைத்துத் தைத்த பை; pillow. தலையலங்காரம் பெ. (n.) தலையை அழகு செய்தல்; decoration of the head. தலையாட்டம் பெ. (n.) தலைநடுக்கம்; trembling of the head, as from palsy. தலையாட்டிப் பொம்மை பெ. (n.) எதற்கும் இணங்கி நடப்பவன் (இங்கு மங்கும் தலையசைந்தாடும் பொம்மை போல இருப்பவன்); lit., a doll moving it's head to and from a service person. தலையாடி பெ. (n.) திருமணமானபின் வரும் முதல் ஆடிப் பண்டிகை; the first adi month after marriage in which the bridegroom while receive gifts from father in law.

தலையாரி பெ.(n.) ஊர்க்காவற்காரர்;

village - watchman.

தலையாறு பெ. (n.) ஆற்றின் தோற்று வாய்; source of a river. தலையிடுதல் வி. (v) தேவையில்லாமல், பிறர் செயலில் புகுதல்; to meddle, interfere in other's affairs. தலையில் இடி விழுதல் வி. (v.) கடும் அதிர்ச்சி அடையும் அளவுக்கு ஒருவருக்குத் தீங்கு நேர்தல்; receive a rude shock.

தலையிலெழுதுதல் வி. (v.) தலைவிதி யமையும் நிலை; to predetermine one's fate or destiny, as writing on one's head. தலையுடைத்துக்கொள்(ளு)தல் வி. (v.) பெரும் முயற்சி எடுத்தல்; to take great trouble, as breaking the head over a work. தலையுதிர்நெல் பெ. (n.) பெரும் பான்மையும் விதைக்குப் பயன் படுத்தும், முதலடிப்பில் எடுக்கப் படுவதுமான நெல்; the paddy collected at the first threshing and used generally as seeds. தலையெடுத்தல்

வி. (v.) இழந்த நிலையைத் திரும்பவடைதல்; to recover, as a lost position.

தலைவழிதல்

267

தலையெலும்பு பெ. (n.) மண்டை யெலும்பு; cranial bone. தலையெழுத்து பெ. (n.) வாழ்க்கையை அமைவதாகக் கருதப்படும் விதி; ஊழாற்றல்; விலக்க இயலாத முடிவு;மாற்றமுடியா அமைவு; fate

destiny.

தலைவணங்குதல் வி. (v.) உரிய முறையில் மதித்து வணங்குதல்; to do homage; to bow the head.

தலைவர் பெ. (n.) 1. அணி, கட்சி முதலிய வற்றின் செயற்பாடு, போக்கு, நிருவாகம் ஆகியவற்றிற்குக் கரணிய மாகவிருந்து அனைவரையும் நன் முறையில் வழி நடத்திச் செல்பவர்; leader, head of an organization, party, etc., கட்சித்தலைவர். 2. வயதில் மூத்தவ ராகவும், பொருளீட்டுவதில் வல்லவ ராகவும் இருந்து, குடும்பத்தைதன்மேற் பார்வையில், கட்டிக்காக்கும் தலைவர்; head of a family.

தலைவலி பெ. (n.) 1. தலைநோவு; head ache, cephalalgis. 2. தொந்தரவு தருகிற ஆள்; a person who action cause headache.

தலைவலிமருந்து பெ. (n.) தலை வலியைப்

போக்கும் பொருட்டு பயன்படுத்தப் படும் மருந்து; that which is acting remedically on the head; any medicine for head ache.

தலைவழித்தல் வி. (v.) முகத்தல் அளவை களில், கூம்பு வரை முழுமையாக அளக்காமல், விளிம்பு வரை மட்ட மாகத் தட்டி அளத்தல்; to strike off the excess of grain at the top of measure, in measuring. 'தலைவழித்து ஒருபடி அரிசி கொடுத்தான்'.

தலைவழிதல் வி. (v.) நிரம்பிவழிதல்; to overflow. 'தலைவழிந்தது'.