பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268

தலைவழுக்கை

தலைவழுக்கை பெ. (n.) தலையை வழுக்கையாகச் செய்யும் நோய் வகை; baldness, Alopecia தலைவளர்த்தல் வி. (v) நோன்பு முதலிய வற்றில், தலைமுடி வளர்த்தல்; நேர்த்திக் கடனுக்காக முடி வளர்த்தல்; to let the hair grow as required ceremonially.

தலைவறட்சி பெ. (n.) சூட்டினாவ் ஏற்படும் தலைவறட்சி; எண்ணெய் தடவா மயிர்; dryness in the head due to excess of constitutional heat. தலைவன் பெ. (n.) 1. முதல்வன்; chief, headman, lord. 2. கணவன்; husband, 3. அகப்பொருட்கிழவன்; hero of a love poem.

தலைவாங்கி பெ. (n.) 1. தூக்குப் போடு வோன்; hangman. 2. கேடு விளை விப்பவன்; villain,

தலைவாசல் பெ. (n.) முதல் வாயில்; mai:

gate, as of a city, house.

தலைவாய் பெ. (n.) முதல் மடை; main sluice.

தலைவாரி பெ. (n.) சீப்பு; comb. தலைவாருதல் வி. (v.) தலைமுடி வாருதல்; to comb the hair. தலைவாருகை பெ. (n.) முதன்முறை கருவுற்ற பெண்ணுக்கு 4 அல்லது 6-ஆம் மாதத்தில், கணவன் வீட்டார் செய்யும் தலைக்கோலச் சடங்கு; ceremony of adoming the head of a

woman at the house of her father in law in the fourth or six month of her first pregnancy. தலைவாழையிலை பெ. (n.) துளியோடு கூடிய வாழையிலை; plantain leaf with pointed end. 'மாப்பிள்ளைக்குத் தலைவாழையிலையில் விருந்து போடுதல், இன்றும் காணப்படும். மரபாகும்'.

தலைவி பெ. (n.) 1. தலைமைப் பெண்; lady, mistress, matron. 2. மனைவி; wife. 3.அகப்பொருட்கிழத்தி; heroine of a love poem. 4. கதைத்தலைவி; heroine of a story .

தலைவிதி பெ (n.) ஊழ்: fate, தலைவிரிகோலம் பெ. (n.) தலைமுடியை வாரி முடியாமல் விரித்துப்போட்ட நிலை; சினக் குறியுடைய பெண்; dishevelled hair, as of persons in fright or

sorrow.

தலைவிரிச்சான் சோளம் பெ. (n.) மாட்டுத் தீனியின் பொருட்டு மானாமாரி யாய்ப் பயிரிடும் சோனவகை; a varicty of millet that is rainfed and grown for fodder.

தலைவிரித்தாடுதல் பெ. (n.) வற்கடம், கையூட்டு, வன்முறை முதலியவை கட்டுக்கடங்காமல் பரவிக் காணப் படுதல் அல்லது நிலவுதல்; (of famine, bribe, etc.,) to be rampant.

தலைவிலை யெ. (n.) 1. களத்தில் விற்கும் தவச விலை: price of grain fixed a the threshing floor. 2. அறுவடைக்கு முன் முடிவு செய்யும் நெல்விலை; price of paddy fixed before harvest. தலைவிளை பெ. (n.) வயலின் முதல் விளைச்சல்; first crop of a cultivated

field.

தலைவெட்டிக்கருவாடு பெ. (n.) தலை யில்லாது விற்கும் ஒருவகைக் கருவாடு; the headless trunk of a (karuvadu) dried fish. தலைவெட்டுதல் வி. (v.) தலைமுடி திருத்தல்; to crop one's hair.

தலைவைத்தல் வி. (v.) நீர் முதலியன பாயத் தொடங்குதல்; to begin to flew. தலைவைத்துப்படுத்தல் வி. (v.) (பெரும் பாலும் எதிர்மறையில்) (ஒருவருடன்) தொடர்ந்து தொடர்பு வைத்துக் கொள்ளுதல்; go near, have business

with.