பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270

தவறுதல்

தவறுதல் வி. (v.) 1. தப்பிவிழுதல்; to slip, miss, fall, tumble over, trip lose one's hold.2. வெற்றிவாய்ப்பிழத்தல்; tobe

unsuccessful.

தவறு பெ. (n.) I. நெறிதவறுகை; fault, delinquency. 2. பிழை; mistake, eror, blunder.

தவிட்டுக்கிளி பெ. (n.) ஒருவகை வெட்டுக்கிளி; grasshopper, Attilabus as brandbrown.

தவிட்டுப்புறா பெ. (n.) தவிட்டு நிறமுள்ள சிறுபுறாவகை; little brown dove, Turtur cambayensis.

தவிடு பெ.(n.) நெல் முதலியவற்றைக்

குத்தி அரிசி முதலியன எடுத்த பின், உமியொழியக் கழிந்த பகுதி; bran. தவிடுபொடியாதல் வி. (n.) 1. பொடிப் பொடியாதல் ; to be broken into minute pieces. 2. நிலைகுலைதல் ; to be ruined beyond recovery.

தவித்தல் வி. (v.) இல்லாமை பற்றி வருந்துதல்; to be distressed, to pant for. தவில் பெ. (n.) மேளவகை; a kind of two headed drum.

தழல் பெ. (n.) 1. நெருப்பு; fire. 2. தணல்; live coals of fire, embers.

தழும்பு பெ. (n.) I. வடு; scar, cicatrice, bruise, weal. 2. குறி; mark, impression, dent made in the skin.

தழை பெ. (n.) 1. தளிர்; sprout, shoot. 2.இலை; leaf, foliage.

தழைச்சத்து Gu. (n.) 1. இலை தழைச்சாறு; juice from leaves. 2. இலை தழைகளான இயற்கை உரம்; green

manure.

தழைத்தல் வி. (v.) 1. செழித்தல்; to flourish, thrive, grow luxuriantly, as plants. 2. வளர்தல்; to grow, prosper, as a family, people, state. தழையுரம் பெ.(n.) அடியுரமாக இடப் பெறும் மரங்களின் தழை; green

manure.

தள்ளாடுதல் வி. (v.) தடுமாறுதல்; to stagger, real, as a drunkard. தள்ளாதகாலம் பெ. (n.) முதுமைக்காலம்; time of infirmity, old age.

தள்ளாதவன் பெ. (n.) 1. வலுவில்லா தவன்; infirm person. 2. எதையும் வேண்டாம் என ஒதுக்காதவன்; person who does not avaid anything. தள்ளிப்போதல் வி. (v.) ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சி நிகழாமல் போதல்; காலந்தாழ்த்தல்; to get put off; delayed.

பின்னால்

தள்ளிப்போடுதல் வி. (v.) குறிப்பிட்ட

காலத்தில் செய்ய வேண்டியதைச் செய்யாமல் காலத் தாழ்த்துதல்; to postpone things to be done immediately. தள்ளிவிடுதல் வி. (v.) உரிய விலை வாரா

விடினும், குறைந்த விலைக்குப் பொருள்களை விற்று தீர்த்துவிடுதல்; to sell to lower price and push the products out.

தள்ளிவைத்தல் வி. (v.) 1. தள்ளிப் போடுதல்; to postpone. 2. இடம் விட்டு வைத்தல்; to remove a little further off, shift. 'புத்தகத்தைத் தள்ளிவை. 3. மனம் ஒத்துப் போகாத தால் மனைவியை ஒதுக்கிவைத்தல்; disowning or discarding one's wife. தள்ளுபடிசெய்தல் வி. (v.) 1. புறந்தள்ளல்

(நிராகரித்தல்); to reject. 2. நீக்கச் செய்தல் (விலக் குதல்); to write off. தள்ளுபடிவிற்பனை பெ. (n.) கழிவு விலை விற்பனை; discount sale.

தள்ளுவண்டி பெ. (n.) I. கையால் தள்ளிச் செலுத்தும் சிறுவண்டி; wheel barrow, perambulator. 2. சிறுகுழந்தை நடந்து பழக உதவியாக உள்ள, சிறுவண்டி; small cart.

தளதளத்தல் வி. (v.) விரிவடைதல், பருத்தல்; to plump, full, sleek, as the body.

தளபதி பெ. (n.) படைத்தலைவன்; captain, general, marshal, commander in chief.