பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தளம் பெ. (n.) I. செங்கல், கருங்கல், சுதை மா பாவிய தரை; floor or pavement, as of brick, stone or cement. 2. மொட்டை மாடி; terrace roof, upper open space room or balcony. 3. அடுக்கு மாடிகளில் முதல் தளம், இரண்டாம் தளம் என்றமைந்த குடியிருப்புகள்; various floors in residential flats or any building or tower.

தளர்ச்சி பெ. (n.) களைப்பு, சோர்வு; weakness, in firmity, decrepitude,

faintness, langour, depression of spirits.

தளர்நடை பெ. (n.) முதலில் குழந்தைகள் தடுமாறி நடக்கும் நடை; tottering walk, wobbling, as of a child. தளர்வு பெ. (n.) தெகிழ்கை, இளைப் பாறுகை; growing slak, relaxing.

தளவாடம் பெ. (n.) வேலை செய்வதற்கு வேண்டிய கருவி முதலியன; tools, materials, requities tackle, furniture. தளிகைபோடுதல் வி. (v.) கடவுளுக்குப் படைத்தல் பொருட்டு, பழங்கள் சோறு முதலியவற்றைக் கொணர்ந்து படைத்தல்; to take boiled rice, etc., for

offering to idols. தளிகைவிடுதல் வி. (v.) கோயிலில் தேங்காய்ச்சோறு, புளிச்சோறு, தயிர்ச்சோறு முதலிய தாளித்த சோற்று வகையைக் கலந்து இடுதல்; to offer variety rice to idols in temples.

தளிர் பெ. (n.) விதையிலிருந்து

முளைக்கும் மெல்லிய இலை; sprout, tender shoot, bud.

தளும்புதல் வி. (v.) கலம் அசைவதால் நீர் தெறித்து கீழே விழுதல்; to wabble, flap, fluctuate, as water in a moving

vessel.

தளை பெ. (n.) 1. கட்டு ; tie, fastening, bandage.2. கயிறு; cord, rope. தளைநார் பெ. (n.) பனையேறுவோர் காலில் மாட்டிக்கொள்ளுங் கயிறு;

foot brace for a palm tree - climber.

தன்னடக்கம்

271

தற்காத்தல் வி. (v.) I. தன்னைக் காத்துக்கொள்ளுதல்; to take care of oneself, protect oneself. 'தற்காத்துத் தற்கொண்டாற் பேணி (குறள்.56)'. 2.பாதுகாத்துக்கொ ள்ளல்; to preserve, protect.

தற்காப்பு பெ. (n.) தன்னைக் காத்துக் கொள்ளுகை; self protection.

தற்காலம் பெ. (n.) 1. நிகழ்காலம்; present

time. 2. குறித்த காலம்; exact or precise time of an action or occurrence. தற்காலிகம் பெ. (n.) காலவரையறைக் குட்பட்டது; temporary.

தற்காவல் பெ. (n.) I. தன்னைக் காத்துக் கொள்ளல்; self protection. 2. கற்பு நிலை; chastity.

தற்குறி பெ. (n.) எழுதத் தெரியாதவன். தன் கையெழுத்தாக இடும் இடது கைப் பெருவிரல் அடையாளம்; signature mark of an illiterate person. தற்கொலை பெ. (n.) தன்னுயிரைத்தானே மாய்த்துக்கொள்ளுகை; suicide.

தற்செருக்கு பெ. (n.) தன்முனைப்பு; self

conceit.

தற்பெருமை பெ. (n.) தன்னைக் குறித்துப் பெருமையாகப் பேசுவது; boasting (of oneself or one own people). தறித்தல் வி. (v.) துணித்தல், வெட்டுதல்; to lop, chop off, cut down. தன்பொறுப்பு பெ. (n.) தன்னதாக ஏற்றுக் கொள்ளும் கடமை; personal responsibility.

தன்மானம் பெ. (n.) தன்மதிப்பு; self respect; self dignity. தன்னடக்கம் பெ. (n.) 1. தன்னை ஒறுக்கை; selfrestraint, self denial, self prossession. 2. அமைதி; modesty, in regard to learning, wealth, etc.,