பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278

தாளித்தநெய்

தாளித்தநெய் பெ. (n.) நெடுங்காலம் இருத்தற்கு வேண்டிக் காய்ச்சி வைத் திருக்கும் நெய்; ghee mixed with spices and boiled with a view to preserve it. தாளித்தல் வி. (v.) கடுகு, உளுத்தம் பருப்பு முதலியவற்றை நெய்யில் வறுத்துக் குழம்பு முதலியவற்றிற்கு நறுமண முண்டாக இடுதல்; to season and flavour curry, etc, with spices fried in ghee or oil.

தாற்றுக்கோல் பெ. (n.) 1. மாடுகளை வேகப்படுத்தும் இரும்பு முட்கோல்; ox goad. 2. யானைத் துறட்டி (அங்குசம்); elephant goad. தாறு பெ. (n.) I.வாழை முதலியவற்றின் குலை; bunch, cluster, as of plantains, dates areca nuts. 2. உண்டை நூல் சுற்றுங்கருவி; weaver's bobbin, reel. தாறுமாறாய்ப்பேசுதல் வி. (v.) முன்பின் மாறுபடப் பேசுதல்; to speak incoherently or inconsistently. தான்தோன்றி பெ. (n.) தானாகத் தோன்றியது;

that which is self - existent.

தான்தோன்றித்தனம் பெ. (n.) தன் விருப்பம் போல் செயல்படுகை;

free- wheeling.

தானி பெ. (n.) மூன்று சக்கரங்களை யுடையதும் எந்திரப் பொறியா லியங்குவதுமான பயணிகள் ஊர்தி; auto riksha.

தானியங்கி பெ.அ. (adj.) மாந்தனால் தொடர்ந்து இயக்கப்படாமல் தானாக இயங்கக் கூடிய; automatic. தானை பெ. (n.) படை; amy.

திக்குதல் வி (v.) I. சொற்கள் தடைபடத் தெற்றிப் பேசுதல்; to stutter, stammer.

2. சொல் குழறுதல்; to error hesitate as in recitationreading etc.,

திக்குத்திக்கெனல் பெ. (n.) 1. அச்சத்தால் நெஞ்சடித்தற் குறிப்பு; onom expr. of throbbing or beating of the heart through fear. 2. எதிர்பார்ப்பில் நெஞ்சடித்தற் குறிப்பு;onom, expr. of throbbing or beating of the heart through anxiety. திக்குப்பேச்சு பெ. (n) தெற்றிப்பேசும் பேச்சு; stammering speech, stuttur. திக்குமுக்காடுதல் வி. (v.) 1. மூச்சுவிட முடியாமல் முட்டுப்படுதல்; to be choked, smothered, strangled. 2. மகிழ்ச்சியில் ஏற்படும் திளைப்பு; happiness.

திக்குவாய் பெ. (n.) திக்கிப்பேசும் முறை; stammering.

திக்குவாயன் பெ. (n.) தெற்றிப்

பேசுபவன்; stammerer, stutturer. திக்கென்றது பெ.எ. (part.) திடீரென உண்டாகும் அச்சம்; get a fright.

திகிரிக்கல் பெ. (n.) ஆட்டுக்கல்; grinding stone, rubbing stone.

திகில் பெ. (n.) 1. அச்சம்; fright. 2. திடீர் அச்சம்; sudden fear.

திகிலெனல் பெ. (n.) திடுக்கிடுதற் குறிப்பு; expr. signifying unexpected terror. திகைத்தல் வி. (v.) நிலை மறத்தல்; (அசத்தல் (பிரமித்தல்) மயங்குதல்; to be astonished, amazed.

திங்கள் பெ. (n.) 1. மதி; moon. 2. மாதம்; month, lunar month.

திசைக்கல் பெ. (n.) எல்லைக்கல்; boundary stone.

திசைதப்புதல் வி. (v) வழி தவறுதல்; to miss the road, lose one's way, as a vessel. திசைமானி பெ. (n.) எப்போதும் வடக்குத் திசையையே காட்டும் முள்ளை உடைய கருவி; compass.