பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவு பெ. (n.) 1. பட்டறிவு, படிப்பு, சிந்தனை போன்றவற்றின் மூலமாகத் தெரிந்துகொள்ளுதல்; know; get to know. 'பல தரப்பட்ட செய்திகளை நாம் அறிந்துகொள்ள நூல்கள் உதவும். 2. ஒரு துறையைப் பற்றி ஒருவருக்கு இருக்கும் புலமை; knowledge (in a field or in general); scholarship, erudition. அறிவுக்கொழுந்து பெ. (n.) பெரும் பாலும் அறிவற்ற செயலைச் செய் பவரைப் பற்றிக் கூறுவதாகும்; (sarcastically) genius. 'அந்த அறிவுக் கொழுந்து பேச்சைக் கேட்டியா? உருப்பட்டமாதிரிதான். அறிவு கெட்டவன் பெ. (n.) அறிவு இல்லாதவர்; ignoramus. அறியாத்தனம் பெ. (n.) அறியாமை பார்க்க. அறியாமை பெ. (n.) அறிவு இல்லாமை; மடமை; ignorance. அறிவாளி பெ. (n.) கூர்ந்த அறிவு உடையவர்; man of knowledge; savant. படித்து நல்ல அறிவாளியாக வர வேண்டும். அறிவிலி பெ. (n.) அறிவு கெட்டவன் பார்க்க. அறிவுடைமை பெ. (n.) ஒரு செயலைச் செய்வதற்குத் தேவையான அறிவைப் பெற்றிருக்கும் தன்மை; good sense; sensibleness. அறிவுரை பெ. (n.) நன்மை விளைவிக்கும் நோக்குடன் ஒருவர் மற்றொருவருக்கு வழங்கும் கருத்து; புத்திமதி; advice, counsel. அறிவுறுத்துதல் பெ. (n.) கூறியபடி நடந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளுதல்; பணித்தல்; instruct, advise; exhort. அறுத்தல் வி (v.) I. நூல், கயிறு முதலியன துண்டாதல்; cause, something to snap; அறை 21 break. 'நூலைப் பிடித்து இழுத்து அறுத்துவிட்டான். 2. ஒரு பொருளின் மீது கத்தி வைத்து வெட்டுதல்; cut with a saw, knife, etc., 'கத்தியால் பழத்தை அறுத்திட இயலவில்லை'. 3. மருத்துவத்தில் உறுப்பைக் கீறுதல்; நறுக்குதல்; cut open. 4. ஒன்றைத் திரும்பத் திரும்பக் கூறிப் படிப் பவருக்கு அல்லது கேட்பவருக்குச் சலிப்பு உண்டாக்குதல்; bore (a person by tedious dull talk). அறுத்துக் கட்டுதல் வி. (v.) கணவனையிழந்தோ தீர்வை செய்யப்பட்டோ தாலி நீங்கிய பின், மறுதாலி கட்டி மணத்தல்; to remany. அறுந்தவால் பெ. (n.) குறும்புக்காரன்; mischievous person. அறுப்பு பெ. (n.) அறுவடை; reaping; harvest. அறுபதாம் கல்யாணம் பெ. (n.) கணவருக்கு அறுபது அகவை நிறைவடையும் போது, அக்கணவன் மனைவியருக்கு அவர்களுடைய பிள்ளைகளால் நடத்தப்படும் திருமணம்; ritual marriage of a married couple performed by the children on the husband completing sixty years. அறுவை பெ. (n.) 1.நோயுற்ற உறுப்பைக் குணப்படுத்த அறுத்துச் செய்யப் படும் மருத்துவம்; surgery. 2. சலிப் பூட்டுவது; boredom. 'இந்த அறுவை படத்தைப் பார்க்கத்தான் என்னைக் கூட்டி வந்தாயா?'. அறை பெ. (n.) 1. மாந்தர்கள் விரித்த கையாலும் விலங்குகள் முன்னங் காலாலும் ஒரு பரப்பில் விரைவுடன் கொடுக்கும் அடி; slap. 'முதுகில் பலமாக ஓர் அறை விழுந்தது'. 2.வீட்டில் தனித்தனியாகத் தடுக்கப் படும் இடம்; room.