பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 அன்பர் அன்பர் பெ. (n.) 1. ஒருவர் மீது தன் அன்பை வெளிப்படுத்திக் கொள் பவர்; அன்பிற்கு உரியவர்; well wisher, a friend. தலைவர் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டதை அறிந்ததும் அன்பர்கள் பலர் வந்து பார்த்தனர்'. 2. ஒரு துறையில் ஆர்வமுடையவர்; enthusiast (in a particular field). சென்னையில் டிசம்பர் மாதத்தில் இசை அன்பர்கள் கூட்டம் எங்கும் காணப்படும்'. அன்பளிப்பு பெ. (n.) I. ஒருவர் மீது கொண்டுள்ள அன்பைத் தெரி விக்கும் வகையில் அவருக்குக் கொடுக்கப் படும் பொருள் அல்லது பணம்; பரிசு; gift, present. 2. ஒரு பொருளை வாங்கு பவருக்கு அதனோடு கூட விலை இல்லாமல் அளிக்கப்படுவது; இலவயம் (இலவசம்); free gift given with a purchase. 'நான்கு புடவை வாங்குபவருக்கு ஓர் அழகிய பை அன்பளிப்பாகத் தருகிறார்கள். அன்றாடங்காய்ச்சி பெ. (பே.வ.) (n.) ஒவ்வொரு நாளும் கிடைக்கும் வருமானத்தில் வாழ்க்கை நடத்தும் ஏழை; a poor person who lives solely on daily wages; a person who has no resources to fall back on. அன்றாடம் வி.அ. (adv.) ஒவ்வொரு நாளும்; தாள் தவறாமல்; daily everyday. அன்றி வி.அ. (adv.) 1. தவிர; தவிர்த்து; except. 'பாகனன்றி வேறு யாராலும் யானையிடம் நெருங்க முடியாது'. 2.இல்லாமல்; அல்லாமல்; without. அவளன்றி அவனுக்கு வாழ்க்கை இல்லை. அனல் கக்குதல் வி. (v.) பேச்சு, பார்வை கடுங்கோபம் முதலியவற்றில் வெளிப்படுதல்; show violent anger (in one's speech, look, etc.,). 'தலைவரின் அனல்கக்கும் பேச்சிற்குத் தொண்டர்கள் கைதட்டினர். அனல் காற்று பெ. (n.) கோடைக் காலத்தில் தொடர்ந்து நிலவும் அதிக வெப்பமான வானிலை; heat wave. கோடைக் காலத்தில் வீசும் அனல் காற்று தாங்க முடியவில்லை'. ஆ ஆக்கம் பெ.(n.) 1. உதவி; help, support. மதுவை ஒழிக்க எதிர்த்துப் போராடுபவர்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளிப்பது நம் கடமை'. 2. முன்னேற்றம், வளர்ச்சி; progress. 3. நன்மை தரும் முறையிலானது; benefit something constructive. படைப்புத்திறன்; creativity. 5. இலக்கியப் படைப்பு; literary work. இணைய இதழுக்குத் தங்கள் ஆககங்களை அனுப்பும் படைப் பாளிகள், அவற்றைத் தட்டச்சு செய்து அனுப்ப வேண்டாம்'. 4. ஆக்கியோர் பெ. (n.) பா, இலக்கணம் முதலியவற்றை இயற்றியவர்,ஆசிரியர்; author (of a poem, book, etc.,). ஆக்குதல் வி. (v.) 1. படைத்தல், உண்டாக்குதல், உருவாக்குதல்/ மொழி பெயர்த்தல்; create, produce, cause to come up. 2. இயற்றுதல், எழுதுதல்; write (a book, etc.,). 3. நெறிமுறைகளின் அடிப்படையில் ஒன்றை நிறைவேற்றுதல்; cause to become (the stated thing). 'அந்த எழுத்தாளரின் படைப்புகள் அனைத்தும் நாட்டுடைமையாக்கப் பட்டன. 4.உணவு சமைத்தல்; cook food. 5. ஒன்றை அல்லது ஒருவரைக் குறிப்பிட்ட நிலைக்குக் கொண்டு வருதல்; cause to be, cause to become. ஆகக்கூடி இ.சொ. (int.) ஆக மொத்தம் பார்க்க. ஆகட்டும் இ.சொ. (int.) ஒருவர் கூறுவதை ஏற்றுக்கொள்ளும் முறையில் அல்லது