பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரி என்ற பொருளில் சொற்றொடரின் இடையே உள்ள தொடர்பைக் குறிக்கப் பயன்படுத்தும் இடைச்சொல்; particle signifying consent. 'எனக்கு ஒரு வேலை வாங்கித் தர வேண்டும் என்று கூறியதும் அமைச்சர் ஆகட்டும் பார்க்கலாம்' என்றார். ஆகமொத்தம் இ.சொ. (int.) எல்லா வற்றையும் கணக்கில் எடுத்துக் கொண்டு பார்த்த பின் முடிவில் என்ற பொருளில் இரு சொற்றொடர்களை அல்லது பகுதிகளைத் தொடர்பு படுத்தும் இடைச்சொல்; இறுதியாக; particle meaning 'net result' relating two sentences or two parts of a sentence. ஆகிவருதல் வி. (v.) செயல் நிறைவேறி வருதல்; to prosper, action under progressing. ஆகுதல் வி. (v.) 1. குறிப்பிட்ட நிலையில் இருத்தல்; be in a specified state or condition. 'குழாயில் தண்ணீர் வந்து ஒரு வாரமாகிறது'. 2. இயலுவதாக இருத்தல்; be possible for something. செய்தியைச் சொல், ஆகுமா? ஆகாதா? என்று சொல்கிறேன்'. 3. மற்றொரு தன்மைக்கு, நிலைக்கு வருதல்; become or change into someone or something mentioned. அவள் பல சமயம் குழந்தை மாதிரி ஆகி விடுகிறார்.' 4. ஒருவர் அல்லது ஒன்று மற்றொரு உருவம், வடிவம் பெயர் கொள்ளுதல்; மாற்றம் அடைதல்; change into something mentioned, become. அகலிகை கல்லானாள்.5. ஒரு பொருளால் செய்யப்படுதல், நூல் குறிப்பிட்ட முறையில் ஏற்றப்படுதல்; be made of or with something. 'இந்த நாற்காலி தேக்கால் ஆனது'. 16. நிகழ்தல், நடத்தல்; happen, get done. 'நான் அங்கிருந்து வந்த பிறகு என்ன ஆயிற்று?. 7. நேரம் கழிதல் ; (of time) take, require. 'அவள் திரும்பி வரபத்து நிமிடம் ஆயிற்று'. 8. செலவு ஆசை வார்த்தை 23 முதலியன ஏற்படுதல்; cost; come to. 9. ஒரு பொருள் பயன்படுத்தப்பட்டு தீர்தல், ஒன்று நடந்து முடிதல்; be exhausted; be over. ஆங்காங்கு வி.அ. (adv.) இங்கொன்றும் அங்கொன்றுமாக இருத்தல்; here and there; scattered. ஆங்கிலோ இந்தியர் பெ. (n.) ஒரு ஆங்கிலேயருக்கும் இந்தியருக்கும் இடையேயான திருமண உறவின் மூலம் பிறந்தவர்; Anglo Indian. ஆச்சி பெ.(வ.வ.) (n.) 1. அகவை முதிர்ந்த பெண்மணி; apolite word for an elderly woman. 2. பாட்டி; grand mother. 3. குடும்பத்தலைவி; lady of the house. வீட்டில் ஆச்சி இல்லை. வெளியூர் போயிருக்கிறார்கள் . ஆசை பெ. (n.) 1. ஒன்றைக் குறித்து எதிர்பார்ப்புடன் கூடிய ஆவல்; விருப்பம்; desire, wish, affection. 'நூல் எழுதி வெளி வந்ததில் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது'. 2. வெளிப் படையான விருப்பம்; relish, liking, fondness. ஆசைகாட்டுதல் வி. (v.) ஒன்றை அடைந்துவிடலாம் என்ற உணர்வைத் தருதல்; lure, tempt. ஆசைநாயகி பெ. (n.) திருமணமான ஆண், மனைவி அல்லாது தொடர்பு வைத் திருக்கும் வேறொரு பெண்; mistress. ஆசைப்படுதல் வி. (n.) ஒன்றைச் செய்ய அல்லது பெற விரும்புதல்; wish, desire. ஆசை வார்த்தை பெ. (n.) ஒருவரது விருப்பத்தைத் தூண்டிவிடும் வகையில் கூறப்படும் சொற்கள்; words of inducement; calculater, seductive words.