பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284

திறந்தமனம்

திறந்தமனம் பெ. (n.) வெளிப்படையான மனம்; open heart. திறந்தவெளி பெ.(n.) வெளியான இடம்; open place, plain.

திறந்தவெளிப் பல்கலைக்கழகம் பெ. (n.) முழுநேர உயர்கல்வி நிறுவனங்களில் சேர்த்து படிக்கத் தேவையான முன் தகுதிகள், அகவை வரம்பு போன் றவை தளர்த்தப்பட்டு, உயர்கல்வி பெற உதவும் கல்வி நிறுவனம்; open university.

திறந்தவெளிப் பள்ளி பெ. (n.) (ஒருவர்) வீட்டில் இருந்தபடியே பள்ளிக் கல்வியைக்கற்க வழி செய்யும் கல்வி முறை; open education.

திறந்துகாட்டுதல் வி. (v.) I. வெளிப் படையாக்குதல்; to lay open, divulge, disclose fully, as one's mind. 2. தெளிவாக விளக்குதல்; to explain fully, illustrate clearly.

திறந்துபேசுதல் வி. (v.) மனம் விட்டுச் சொல்லுதல்; to speak, frankly or openly.

திறப்பு பெ. (n.) திறவுகோல் பார்க்க.

திறப்புவிழா பெ. (n.) (கடை, தொழிலகம் போன்றவற்றை) திறந்துவைப்பதற் கான நிகழ்ச்சி; inauguration; opening ceremony (for a shop, etc.,)

திறமை பெ. (n.) 1. அறிவுத்திறம்; ability, clevemess. 2. வலிமை; strength, vigour,

power.

திறமைக்காரன் மிக்கோன்; ablemam. திறமைசாலி பெ.(n.) ஆற்றல் பொருந் தியவன்; able man.

பெ. (n.) ஆற்றல்

திறவு பெ. (n.) I. திறக்கை; opening unveiling. 2. வாயில்;

gate-way. 3. வழி;

way.

திறவுகோல் பெ. (n.) பூட்டைத் திறக்க உதவுங்கருவி; key.

திறனாய்வு பெ. (n.) (புத்தகங்கள், கட்டுரை போன்றவற்றின்) குறை நிறைகளை ஆராய்ந்து செய்யும் மதிப்பீடு; evaluation.

திறாணி பெ. (n.) திறமை, வலிமை; ability.

தின்னுதல் வி. (v.) 1. உண்ணுதல்; to eat, feed. 2. மெல்லுதல்; to chew. 3.கடித்தல்; to bite, gnash, as one's teeth. தின்பண்டம் பெ. (n.) I. உணவுப் பொருள்; eatables. 2. பண்ணிகாரம்; sweetmeat, confection.

தின்றுபார்த்தல் வி. (v.) சுவைபார்த்தல்; to

taste.

தினை பெ. (n.) I. சிறு தவச வகை; Indian millet, cereal. 2. தினைவகை; wild bermuda grass.

தினைப்புனம் பெ. (n.) தினைவிளையும் புலம்; millet field.

தினைப்பொரி பெ. (n.) தினையை வறுத்த பொறி; parched millet.

தினையரிசி பெ. (n.) தினையின் அரிசி; husket millet.

தினையளவு பெ. (n.) மிகச்சிறிய அளவு; very small quantity, as much as a grain of millet.

தீ பெ. (n.) 1. தெருப்பு; fire. 2. வேள்வித்தீ;

sacrificial.

தீக்கட்டை பெ. (n.) எரிகட்டை; fire wood. தீக்கடவுள் பெ. (n.) நெருப்புக்கடவுள்; fire

God.

தீக்கடைதல் வி. (v.) கடைந்து நெருப்பு உண்டாக்குவது; to produce fire by fire

drill.

தீக்கண் பெ. (n.) சினம் கொண்ட கண்; fire

- eye.