பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தூக்குப்பாலம் முதலியவற்றிற்கு வழிவிடுவதற் காகப் பிரித்து உயரே எழும்பி, பின் இணையக்கூடிய பாலம்; drawbridge. தூக்குப்போடுதல் வி. (v.) தூக்குக் கயிற்றில் தொங்குதல்; hang. தூக்குமரம் பெ. (n.) தூக்குத் தண்டனை நிறைவேற்றுவதற்காக அமைந்த மரம்; gallows.

பெ. (n.) படகு

தூக்குமேடை பெ. (n.) தூக்குத் தண்டனை நிறைவேற்றும் மேடை; platfom with gallows.

தூக்குவாளி பெ. (n.) உணவுப் பொருள் களைப் பகிர்ந்தளிக்கப் பயன்படும் வாளி போன்ற சிறிய ஏனம்; small bucket (for serving sauce, food items at feasts, etc.,)

தூக்குவிளக்கு பெ. (n.) தொங்குவிளக்கு; hanging lamp.

தூங்கிவிழுதல் வி. (v.) 1. தூக்க மயக் கத்தாற் சாய்ந்துவிழுதல்; to be unsteady through drowsiness.

2. சுறுசுறுப்பின்றிச் சோம்பியிருத்தல்; to be lazy.

தூங்குகட்டில் பெ. (n.) தொங்கியாடுங் கட்டில்; swinging cot.

தூங்குதல் வி. (v.) துயிலுதல்; to sleep, slumber.

தூங்குமூஞ்சி பெ. (n.) மிகுதியாகத்

தூங்குபவன், மந்தன்; dull, sleepy fellow.

தூசி பெ. (n.) I.காற்றில் பறந்து வரும் சிறு துகள்; small particle. 2. புழுதி;

dust.

தூசிதுரும்பு பெ. (n.) தூசியும் தூசி போன்ற பிறவும்; dust and the like. தூண் பெ. (n.) கட்டடம், பாலம் முதலியவற்றின் மேல் பகுதியைத் தாங்கி நிற்கும் செங்குத்தான அமைப்பு; pillar.

தூர்கட்டுதல்

291

தூண்டில் பெ. (n.) மீன் பிடிக்கப் பயன்படும், கொக்கியுடன் நரம்பு இணைக்கப்பட்ட கோல்; fishing

tackle.

தூண்டிற்காரன் பெ. (n.) மீன் பிடிப் போன்; angler.

தூண்டுகோல் பெ. (n.) விளக்குத்திரி தூண்டும் ஈர்க்கு; stick for trimming lamp or wick.

தூண்டுதல் வி. (v.) கிளப்பிவிடுதல்; to excite, stir up.

தூதன் பெ. (n.) 1. செய்தியறிவிப்பவன்; messenger. 2. அரசுத் தூதன்; ambassador. 3. ஏவலாளன்; servant.

தூது பெ. (n.) 1. தூதுமொழி; purport of an embassy. 2. தூது செல்வோன்; ambassador. 3. காதலர்களுக்கிடையே செய்திப் போக்குவரத்து ஏற்பாடு; negotiation in between lovers. தூதுக்குழு பெ. (n.) அரசியல், பொருளியல், பண்பாடு ஆகிய வற்றின் அடிப்படையில் அரசின் சார்பில் மற்றொரு நாட்டிற்குச் செல்லும் குழு; delegation of politicians, economists, artistes visiting other countries on behalf of the government.

தூதூவெனல் பெ. (n.) உமிழ்தற் குறிப்பு; onom, expr. of the sound of spitting. தூய்மை பெ. (n.) துப்புரவு, அழுக்கு இல்லா நிலைமை; purity, cleanness. தூய்மைக்கேடு பெ. (n.) கழிவுகள்காற்று, நீர் முதலியவற்றில் சேர்வதால் மூச்சுவிடுவதற்கோ பயன்படுத்து வதற்கோ ஏற்றதாக இல்லாமல் போகும் நிலை; pollution. தூர்கட்டுதல் வி. (v.) I. மரஞ்செடி

முதலியன அடி பருத்தெழுதல்; to grow with a big stump, as a young tree. 2. கொத்தாய் முளைத்தெழுதல்; to grow in clusters.