பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292

தூர்த்தல்

தூர்த்தல் வி. (v.) அடைத்தல்; to fill up, close up, as a well.

தூர்வாரி பெ.(n.) கிணறுகளில் தூரெடுப் பவன்; cleaner of wells.

தூ ர்வாருதல்

வி. (V)

கிணற்று

வண்டல்களை வாரி எடுத்தல்; to clean out, as a well.

தூரப்பார்வை பெ. (n.) தொலைப் பார்வை; distant sight, hyperopia.

தூரம் பெ. (n.) சேய்மை; remoteness,

distance.

தூரவுறவு பெ. (n.) விலகிய உறவு முறை; distant relation.

தூரிகை பெ. (n.) ஓவியம் தீட்ட,

பெயர்ப்பலகை எழுதப் பயன்படும்

எழுதுகோல்; விலங்கின் மயிர் ஒரு முனையில் செருகப்பட்ட தீண்ட குச்சி; painting reed or pencil, painter's brush.

தூவல் பெ. (n.) 1. இறகு ; feather. 2.எழுதுகோல்; pen.

தூவானம் பெ. (n.) 1. மழைக்குப் பின் காற்று அடித்துக் கொண்டு வரும் மழைத்துளிகள், சிதறல், சிதறும் மழை; drizzle, rain driven in or sclattered about in fine drops by stroing

wind.

தூவிவிடுதல் வி. (v.) I. கறிப்பொடி தூவுதல்; to strew curry powder. 2.செய்தி பரப்புதல்; to spread a rumour.

தூவுகை பெ. (n.) பொடி தூவுகை; the act

as sprinkling as with a powder. தூவுதல் வி. (v.) I. தெளித்தல்; to sprinkle, strew. 2. இறைத்தல்; to scatter, spread out, as grain for fowls. 3. மழை பெய்தல்; to rain.

தூள் பெ. (n.) 1. எந்தக் கடினமான பொருளையும் உலக்கை அல்லது

குழவிகொண்டு இடித்தோ அல்லது அரைத்தோ எடுத்த பொடி, துகள்; dust, powder, particle. 2. மருந்துப் பொடி; medicinal powder. 3. மூக்குப் பொடி ; snuff.

தூள்படுத்துதல் வி. (v) தூளாக்குதல்; to pulverise, reduce to powder.

தூள்பறத்தல் வி. (v.) பலரும் அறியும்படி அதிகாரம் வெளிப்படுதல் அல்லது பணம் செலவழித்தல்; to be loudly displayed.

தூளாக்குதல் வி. (v.) பொடி செய்தல்; pulversing, reducing to dust.

தூளாதல் வி. (v.) 1. தானே பொடியாதல்; falling into pieces. 2. அரைப்பதினால் பொடியாதல்; becoming reduced to powder by grinding or pounding.

தூளி பெ. (n.) குழந்தையைத் தூங்க வைக்க நீண்ட துணியின் இரு முனை யையும் கட்டி ஒன்றில் தொங்க விட்டிருக்கும் அமைப்பு; cradle made with a long piece of cloth.

தூற்று பெ. (n.) ஒருவரைப் பேச்சாலோ

எழுத்தாலோ பழிக்கை; பழிப்பு; slandering, spreading a slanderous report.

தூற்றுக்கூடை பெ. (n.) I. பொலி தூற்று வதற்கு உதவுந் தட்டுக் கூடை; winnowing basket. 2. பொலி தூற்று தற்கு உதவும் முறம்; winnowing pan.

தூற்றுதல் வி. (v.) 1. தூசி போகுமாறு நெல்லைத் தூவுதல்; to winnow. 2. பேச்சால் பிறரைப் பழித்தல்; blaming; abuse; scolting.

தூற்றுமுறம் பெ. (n.) நெற்பொலி தூற்றுவதற்கு உதவும் முறம்; winnowing

pan.

தூறல் பெ. (n.) I. சிறு மழை; drizzle; not a heavy rain. 2. மழைத்துளி; drop of rain. தூறல்போடுதல் வி. (v.) தூறல் விழுதல்;

drizzle.

தூறுதல் வி. (v.) சிறு சிறு துளிகளாக மழை பெய்தல்; drizzle.