பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேங்கட்டி; candy with sugar syrup as filling.

தை

தைத்தல் வி. (v.) I. தையலிடுதல் ; to sew, stitch. 2. இலை முதலியன குத்தி யிணைத்தல்; to plait or stitch, as leaves into plate. 3. Gar; to string, as beads.

தைப்பொங்கல் பெ. (n.) சுறவத் திங்களன்று பொங்கலிட்டுக் கொண் டாடப்படும் தமிழர்த் திருவிழா; Tamizhar festival on the first day of tai, celebrated with porigal. தொகைக்காரன் பெ. (n.) செல்வன்; moneyed man; richman.

தொ

தொங்கட்டான் பெ. (n.) தோட்டோடு சேர்ந்துத் தொங்கவிடும் காதணி; ornament attached to and suspended from an ear stud.

தொங்கல் பெ. (n.) அடிமுத்தி; border. தொங்கலில் விடுதல் வி. (v.) தவிக்க விடுதல், ஒருவரை சிக்கலில் மாட்டி விடுதல்; leave one in a state of distress. தொங்குக்கட்டில் பெ.(n.) நோயாளிகளை எடுத்துச் செல்லப் பயன்படும் ஒரு நீண்ட மூங்கிலின் நடுவில் தொங்கும் கட்டிலை உடைய ஒரு கருவி;a swinging lifter for carrying sick person, a cot, or frams suspended by the four comers from a bamboo pole. தொட்டாற்சிணுங்கி பெ. (n.) 1.சிறு குறையைக் கூடத் தாங்கிக்கொள்ள முடியாதவர்; whimpers at the slightest provocation. 'அவள் ஒரு தொட்டால் சிணுங்கி அவளிடம் கவனமாகப் பேச வேண்டும்.2. ஒருவகைச் செடி வகை; a kind of plant.

தொட்டிலிடு-தல் வி. (v.) முதன்முறை யாகக் குழந்தையைத் தொட்டிலில்

தொணதொணப்பு

295

ஏற்றுவித்தல்; to cradle for the first time, as a child.

தொடுகறி பெ. (n.) உணவுடன் சேர்த்துச் சாப்பிடுவதற்காக உருவாக்கப்படும் உணவுப்பொருள்; வெஞ்சணம் ; side

dish.

தொண்டிக்கட்டை பெ. (n.) மாடுகள் ஓடி விடாமல் தடுப்பதற்காக, ஓடினால் காலில் இடிக்கும் வகையில் அவற்றின் கழுத்தில் கட்டப்படும் கட்டை; a piece of wood hung from the neck of a bullock or cow to prevent it from running away.

தொண்டுநிறுவனம் பெ. (n.) ஒன்றின் நன்மைக்காக (அ) வளர்ச்சிக்காகப் பணியாற்றும் அமைப்பு; service organization or society, voluntary agency. தொண்டைக்கிழிய வி.எ. (adv.) உரத்த குரலில் பேசுதல்; at the top of one's voice. 'நீ எதற்கு தொண்டைக்கிழிய கத்துகிறாய்?'.

தொண்டைநோவு பெ. (n.) 1.தொண் டைக்கட்டு; sore throat, pharyngitis. 2.உள்நாக்கு நோய்; tansilitis. தொண்டையடைப்பான் பெ. (n.) தொண்டை முழுவதும் வீங்கி விழுங்க முடியாமலும், உள்காற்று தொடர்பால் வாய், குரல்வளை முதலிய இடங்களில் மூச்சுவிட முடியாமல் கோழை, சளி, கோளா றினால் ஏற்படும் அடைப்பான் நோய்; diphtheria. a serious bacterial disease with high fever causing inflammation of the mucous membranes and formation of a false membrane in the throat which hinders, breathing and swallowing. தொணதொணப்பு பெ. (n.) எரிச்சலை ஏற்படுத்தும் தொடர்பேச்சு; nagging. வீட்டில் எந்த நேரமும் தொண தொணவென்று பேசாதே.