பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடப்பு ஆண்டு பெ. (n.) I. நிகழும் ஆண்டு; current year. 2. நிகழ்காலம்; present time.

நடப்புக்கணக்கு பெ. (n.) சேமிப்புக்காக அல்லது நடப்புச் செலவுகளுக்காக வைப்பகத்தில் உள்ள இருப்புக் கணக்கு; current account.

நடப்பு பெ. (n.) I.உயிர் நீத்தார் இறுதிக் கடனுக்கு முந்தைய நாள் இரவில் நடக்கும் சடங்கு; ceremony conducted on the eve of the final obsequies. 2. நடந்து கொண்டிருக்கிற; current (year., season

etc).

நடமாட்டம் பெ. (n.) மாந்தர், விலங்குகள், ஊர்தி முதலியவற்றைக் குறித்து வருதல் போன்ற, செயல்பாடு (அ) இயக்கம்; movement. நடமாடுதல் வி. (v.) மாந்தர் தொடர்பாகக் கூறும்போது நடக்க இயலும் தன்மை, உலவுதல்; (ofpersons) walk. நடமாடும் அங்காடி பெ. (n.) மக்கள் வாழிடத்திற்குச் சென்று விற்பனை செய்யும் காய்கறி வண்டி; mobile vegetable shop.

நடமாடும் அஞ்சலகம் பெ. (n.) பயனாளர் பரிமாற்றம் செய்யும் வகையில் செயல்படும் அஞ்சலகம்; mobile post

office.

நடமாடும் உணவகம் பெ. (n.) மக்கள் இல்லங்களுக்குச் சென்று வழங்கப் படும் உணவு விற்பனை; mobile hotel. நடமாடும் குருதிவைப்பகம் பெ. (n.) வழங்குவோர் வாழிடம் சென்று குருதி பெற்றுச் சேமிக்கும் வைப்பகம்; mobile blood bank. நடமாடும் தேய்ப்புவண்டி பெ. (n.) இல்லங்கள்தோறும் சென்று ஆடை களை சுருக்கமின்றி தேய்க்கும் வண்டி; mobile ironing cart. நடமாடும் நயன்மன்றம் பெ. (n.) மக்கள் கூடுமிடத்தில் குற்றமிழைப்போர்க்கு அன்றே வழங்கும் தயன்மன்றம்; mobile

court.

நடுங்குதல்

299

நடமாடும் நூலகம் பெ. (n.) நூல் விரும்பியின் வாழிடத்திற்கு சென்று நூல்களை வழங்கும் நூலக ஊர்தி; mobile library.

நடமாடும் பல்கலைக்கழகம் பெ. (n.) நூல் பலகற்ற மேதைமையுடையோரைக் குறிப்பிடும் புகழ்ச்சொல்; an honourable little given to the intellectual genius.

நடமாடும் மருத்துவம் பெ. (n.) மக்கள் வாழிடமெல்லாம் செல்லும் மருத்துவ ஊர்தி; mobile dispensary. நடமாடும் வைப்பகம் பெ. (n.) பயனாளர் வாழிடத்திலேயே பணம் வழங்கும் பொறியையுடைய உந்தம்; mobile

ATM.

நடவு பெ. (n.) நாற்றை (அ ) இளம் நாற்றைப் பிடுங்கி பண்படுத்தப் பட்ட நிலத்தில் தடுவது;

trans- plantation.

நடவுபோடுதல் வி. (v.) நாற்று நடுதல்; to transplant seedlings.

நடிகை பெ. (n.) நாடகமேடையிலும் திரைப்படத்திலும் நடிப்பவள்; actress. நடித்தல் வி. (v.) திரைப்படம், தாடகம், தொலைக்காட்சி ஆகியவற்றில் வேடம் ஏற்று அவ்வேடத்தின் இயல்புகளை, உணர்வுகளை வெளிப்படுத்துதல்; act (in a film, drama, etc).

நடுக்கம் பெ. (n.) 1. உடலில் (அ) உடலின் ஒரு பகுதியில் ஏற்படும் கட்டுப் பாடற்ற அசைவு; trembling, shivering. 2.ஒன்றால் (அ) ஒருவரால் ஏற்படும் அச்சம்; fear.

நடுங்குதல் வி. (v.) 1. இயல்பாக

இல்லாமல் நடுக்கம் வெளிப்படுதல்; tremble, shiver. 2. கண்ணுக்குத் தெரியாத வகையில் ஆனால், உணரக்கூடிய வகையில் குலுங்குதல்; அதிர்தல்; shake, vibrate.