பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

300

நடுத்தெருவில் நிற்றல்

நடுத்தெருவில் நிற்றல் பெ. (n.) துணை யற்ற (அ) ஆதரவற்ற நிலைக்கு உள்ளாதல்; be left in the lurch. நடுத்தெருவில் நிறுத்துதல் பெ. (n.) துணையற்ற நிலைக்கு உள்ளாக் குதல்; leave in the lurch.

நடுதல் வி. (v.) நாற்று, கன்று, செடி போன்றவற்றை நிலத்தில் ஊன்றுதல்; a seedling, plant.

நடுநடுங்குதல் வி. (v.) அச்சத்தால் மிகவும் நடுக்கமடைதல்; tremble, greatly. நடுநிலைக்கல்வி பெ. (n.) எட்டாம் வகுப்பு வரை உள்ள பள்ளிக் கல்வி முறை; school education up to VIII

standard.

நடுநிலைப்பள்ளி பெ. (n.) எட்டாம் வகுப்பு வரை உள்ள பள்ளி; school where classes up to VIII standard are conducted, middle school. நடுவர் பெ. (n.) பேச்சுப்போட்டி, பட்டி மன்றம் போன்றவற்றில் வெற்றி பெறுபவரைத் தேர்ந்தெடுப்பவர்; judge; jury (in a competition). நடுவர்மன்றம் பெ. (n.) குறிப்பிட்ட சில சிக்கல்களை ஆய்ந்தறிந்து தீர்ப்பு வழங்கும் அதிகாரத்தைப் பெற்றி ருக்கும் குழு; tribunal.

நடை பெ. (n.) 1. வீட்டின் வெளி வாசலி லிருந்து மற்ற பகுதிகளுக்குச் செல் வதற்குரிய பாதை; the passage leading to the central hall. 2. நடந்து செல்லும் செயல்; walk, gail.

நடைப்பயணம் பெ. (n.) கால்நடை யாகவே செல்லும் செலவு (பயணம்);

travel on foot.

நடைப்பயிற்சி பெ. (n.) உடல்நலத்திற்காக விரைவாகவும், சீராகவும் குறிப் பிட்டதூரம் நடந்து செல்லும் பயிற்சி; walking (as an exercise).

நடைப்பிணம் பெ. (n.) இழப்பு, துயரம் போன்றவற்றால் இயல்பானதுடிப்பை இழந்தவர்; person weary of life. நடைப்போட்டி பெ. (n.) ஒரு குறிப்பிட்ட தூரத்தை மிக விரைவாக நடந்து கடக்கும் வகையில் நடத்தப்படும் தடகளப் போட்டி; athletic event of

marathon.

நடைபாதை பெ. (n.) தெருவின் இரு ஓரங்களிலும் நடந்து செல்வதற்கான சற்று உயரமாக இருக்கும் பாதை; pavement.

நடைபாலம் பெ. (n.) நடப்போர் கடந்து செல்வதற்குப் போடப்பட்டிருக்கும் குறுகலான பாலம்; foot bridge. நடைபாவாடை பெ. (n.) சில சடங்குகளில் நடந்து செல்வதற்காகப் பாதையில் விரிக்கும் துணி; cloth spread on the path.

நடைமுறை பெ. (n.) 1. அன்றாட வாழ்க்கை நிலைமைகளைச் சார்த் திருப்பது; practice. 2. பழக்கத்தில் கடைபிடிக்கும் முறை; method; practice.

நடைமுறைப்படுத்துதல் வி. (v.) ஆட்சி, திட்டம், சட்டம் போன்றவற்றை நடைமுறைக்குக் கொண்டு வருதல்; bring into force, put into practice, implement.

நடைமேடை பெ. (n.) பேருந்து, தொடர் வண்டி நிலையங்களில் பயணிகள் காத் திருப்பதற்குக் கட்டப்பட் டிருக்கும் சற்று உயரமான மேடை; platform.

நடையைக் கட்டுதல் வி. (v.) ஓர் இடத்தை விட்டு நீங்குதல் (அ) புறப்படுதல்; buzz off, clear off.

நடைவண்டி பெ. (n.) குழந்தை நடை பழகுவதற்காக நின்று பிடிப்பதற்கு ஏதுவாக மரச்சட்டத்தையுடைய, மூன்று சிறிய சக்கரங்களைக் கொண்ட