பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

302

நல்லடக்கம்

நல்லடக்கம் பெ. (n.) இறந்தவரை புதைப்பதை மதிப்புடன் குறிப் பிடுதல்; a formal expression meaning burial.

நல்லதனம் பெ. (n.) 1. தட்பு; friendliness. 2.ஒத்துப்போகும் இயல்பு; amicable dealing amiability.

நல்லதுகெட்டது பெ. (n.) மங்கல, அமங்கல நிகழ்ச்சிகளைக் குறிக்கும் பொதுச்சொல்; common term to refer

to auspicious and in auspicious occasions.

நல்லபாம்பு பெ. (n.) தலையை உயர்த்திப் படம் எடுத்துச் சீறக்கூடிய நச்சுப் பாம்பு;cobra.

நல்லபுத்தி பெ. (n.) I. தெளிவான அறிவு; good state of mind, good sense. 2.பகுத்துணர்வு; discretion. நல்லவார்த்தை பெ. (n.) அறிவுரை, புத்திமதி பிறருக்குக் கூறுதல்; words of

advice.

நல்லுறவு பெ. (n.) நாடுகளுக்கு இடையே (அ) அமைப்புகளுக்கு இடையே இணக்கமான தொடர்பு; friendly and happy relations (between countries etc.). நல்லெண்ணம் பெ. (n.) அக்கறையும் பரிவும் கலந்த உணர்வு; good will. நல்வரவு பெ. (n.) ஒருவரை வரவேற்கும் போது அவருடைய வருகை நன்மையையும் மகிழ்ச்சியையும் தருவதாக அமையட்டும் என்ற பொருளில் பயன்படுத்தப்படும் சொல்; welcome.

நல்வழிப்படுத்துதல் வி. (v.) ஒழுக்கம், பண்பு, நேர்மை ஆகியவற்றைக் கற்பித்து நல்ல முறையில் நடக்கச் செய்தல்; counsel.

நலங்கு பெ. (n.) மணவுறுதிப்பாடு, திருமணம், வளைகாப்பு போன்ற மங்கல நிகழ்ச்சிகளின்போது மணப்

பெண் (அ) கருவுற்ற பெண்ணுக்குச் சந்தனம் போன்றவற்றைத் தடவி பெரியவர்கள் வாழ்த்தும் சடங்கு;a ritual of blessing at the time of wedding or during pregnancy, of applying sandalwood paste.

நலங்குச் சாந்து பெ. (n.) குழம்பாக அரைத்த மேற்பூச்சு மருந்து; a semi solid preparation of triturated medicine intended for external application. நன்றியற்றவன் பெ. (n.) செய்ந்நன்றி மறந்தவன்; ungrateful person. நன்று பெ. (n.) பாராட்டைத் தெரிவிக்கும் வகையில் பயன்படுத்தப்படும் இடைச் சொல்; particle used to express appreciation.

நன்னடத்தைச் சான்றிதழ் பெ. (n.) பள்ளி,

கல்லூரி போன்றவற்றில் படித்தவரின் நடத்தையைக் குறித்து வழங்கும் சான்றிதழ்; conduct certificate. நனைத்தல் வி. (v.) ஈரமாக்குதல்; to wet,

moisten.

நா

நாக்கில் நரம்பில்லாமல் பேசுதல் வி. (v.) சொல்லக் கூடாத கடுமையான சொற்களைச் சற்றும் தயக்க மில்லாமல் பேசுதல்; intemperater, unabashed speech.

நாக்கு செத்துப்போதல் வி. (v.) நாக்கு உணவின் சுவை அறியும் தன்மையை இழந்ததுபோல் உணர்தல்; (of tongue) lose sensation..

நாக்குத்தள்ளுதல் வி (v.) ஒன்றைச் செய்து முடிக்கத் தேவையான முயற்சியின் கடுமையால் திணறுதல்; get exhausted. நாக்குநீள்தல் வி. (v.) பேச்சில் வரம்பு மீறுதல்; speak in an impertinent or disrespectful way. நாக்குநீளம் பெ.(n.) சுவையான உணவை உண்பதில் அதிக நாட்டம்; fastidiousness about food.